search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் திருட்டு"

    • மனைவி கள்ளிமந்தயம் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்
    • தனது பெற்றோரை பார்க்க வந்துள்ளார்

    தாராபுரம் : 

    தாராபுரம் அடுத்த கள்ளிமந்தயம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (32) இவர் ஈரோட்டில் உள்ள தனியார் வங்கியில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கள்ளிமந்தயம் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சென்னிமலையில் உள்ள தனது பெற்றோரை பார்க்க வந்துள்ளார். அவர்கள் கொடுத்த ரூ. 3 லட்சத்தை வாங்கி கொண்டு ஒட்டன்சத்திரம் தாராபுரம் புறவழிச்சாலையில் பஸ்சில் பயணம் சென்று கொண்டிரு ந்தார். அப்போது பஸ் தனியார் ஓட்டல் முன்பு நின்றது. அப்போது மஞ்சப்பையில் வைத்து இருந்த ரூ.3 லட்சம் பணத்தை அங்கிருந்த ஒருவர் திருடி சென்றார். சிறிது நேரம் கழித்து பணத்தைப் பார்த்த போது பஸ்சின் மேல் புறத்தில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை என தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஆடிட்டர் தாராபுரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாய்ராம் வீட்டில் பேக்கில் வைத்திருந்த 4,800 யூரோ பணம் மாயமாகி இருந்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு அண்ணாநகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சாய்ராம் (வயது60). பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவர் பிரான்சில் வசித்து வருகிறார்.

    அவ்வப்போது புதுவைக்கு வந்து சொந்த வீட்டில் தங்கி செல்வது வழக்கம்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சாய்ராம் புதுவையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்து வந்தார். வீட்டு வேலைக்காக 2 பெண்களை பணிக்கு அமர்த்தியிருந்தார்.

    இந்நிலையில் சாய்ராம் வீட்டில் பேக்கில் வைத்திருந்த 4,800 யூரோ பணம் மாயமாகி இருந்தது.

    யாரோ அதனை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சாய்ராம் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால் வெளிநபர்கள் யாரும் சாய்ராம் வீட்டுக்குள் வரவில்லை என்பது ஆய்வில் தெரியவந்தது.

    எனவே வீட்டு வேலை செய்யும் பெண்கள் இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து வீட்டு வேலை செய்து வந்த 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உண்டியலை யாரோ மர்ம ஆசாமிகள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுவிட்டனர்.
    • கோவில் கேட் மற்றும் உண்டியல் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடலூர்:

    வடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தில் பள்ளிக்கூட தெருவில் உள்ள சக்திமாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியலை யாரோ மர்ம ஆசாமிகள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். காலை கோவில் பூசாரி ஜோதி வழக்கம் போல் வந்தார். அப்போது கோவில் கேட் மற்றும் உண்டியல் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 22) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கோவில் உண்டியல் உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை- வேலூர் சாலையில் தீபம் நகரில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக் கோவில் காலையில் நடை திறப்பதும், மாலையில் நடை சாத்துவதும் வழக்கம். கோவிலில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கை செலுத்தி வந்தனர்.

    நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் கோவில் கேட்டின் மேலே ஏறி கோவிலுக்குள் குதித்தனர். மேலும் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றனர்.

    இந்த நிலையில் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் கோவில் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் கோவில் நிர்வாகி தேவராஜிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார். மேலும் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை, பணம் திருடு போனது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர், கட்டவாக்கம் பகுதியில் வசிப்பவர் சதாசிவம் (வயது 55). இவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாலதி தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கும்போல கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து ரொக்கப்பணம், தங்க நகைகளை வாரி சுருட்டி கொண்டு தப்பி சென்றனர். மாலதி பணி முடித்து மாலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கபணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இச்சம்பவம் குறித்து சதாசிவம் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.

    மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை, பணம் திருடு போனது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் துணிகரம்
    • கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளி கொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா மற்றும் பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

    தெப்பல் உற்சவம் நடந்தது. இதி ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த சந்திரசேகர் (வயது 36), திவ்யஸ்ரீ (28) தம்பதி குடும்பத்தினருடன் எல்லையம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய நேற்று மதியம் வந்தனர்.

    தொடர்ந்து மூலவரை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து போது திவ்யஸ்ரீயின் கழுத்தில் இருந்த 10 பவுன் செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே, அவர்கள் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் கோவில் வளாகத்தில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். இருப்பினும் நகை திருடியவர் யார் என கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இதேபோல் மற்றொரு பெண்ணிடம் 3 பவுன் நகையும், மூதாட்டியிடம் பணப்பையையும் திருடி சென்றுள்ளனர்.

    இந்த தொடர் கொள்ளை சம்பவங்களால் கோவிலுக்கு வந்த பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    • வடுகபட்டியில் உள்ள பூண்டு கடை வாசலில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.
    • ப்போது மற்றொரு வைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கணேசனின் பைக் சீட்டின் அடியில் இருந்த ரூ.85 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது36). பூண்டு வியாபாரி. சம்பவத்தன்று வங்கியில் பணம் எடுத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். வடுகபட்டியில் உள்ள பூண்டு கடை வாசலில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது மற்றொரு வைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கணேசனின் பைக் சீட்டின் அடியில் இருந்த ரூ.85 ஆயிரத்தை திருடிச் சென்றனர். கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் அவர்கள் உருவம் பதிவாகி இருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி அருகே தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரிதிவிராஜன் (32). இவர் தனது மோட்டார் சைக்கிளை தேனி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கடை முன்பு நிறுத்தி இருந்தார். அந்த பைக்கை ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் திருடிச் செல்ல முயன்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து தேனி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் கணேசனை கைது செய்தனர்.

    • உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு கோவில் அருகே உள்ள வீடுகளில் இருந்தவர்கள் எழுந்து வந்தனர்.
    • அணைக்கட்டு போலீசார் ஹேமத்குமாரை கைது செய்து கோவில் உண்டியலை உடைத்து திருடிய ரூ.15 ஆயிரத்தை மீட்டனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த பவுஞ்சூர் அருகே கடுகுபட்டு கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வளாகத்தில் காணிக்கை உண்டியல் உள்ளது. நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த ஹெமத்குமார் என்பவர் மது போதையில் கோவில் எதிரே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கோவில் சுற்றுச்சுவரை ஏரி குதித்து உள்ளே சென்றார்.

    பின்னர் அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை திருட முயன்றார். உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு கோவில் அருகே உள்ள வீடுகளில் இருந்தவர்கள் எழுந்து வந்தனர். அவர்கள் வருவதை கண்ட ஹெமத்குமார் உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அங்கு வந்த கிராம மக்கள் அங்கு நின்றிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த ஹேமத்குமார் என்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் போரில் அணைக்கட்டு போலீசார் ஹேமத்குமாரை கைது செய்து கோவில் உண்டியலை உடைத்து திருடிய ரூ.15 ஆயிரத்தை மீட்டனர்.

    • பெண்ணிடம் 14½ பவுன்-பணம் திருட்டு போனது.
    • நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கே.புதூர் சர்வேயர் காலனியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது42), விவாகரத்தா னவர். இவர் மகனுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கே.கே.நகரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

    அவர்தான் அணிந்திருந்த 10 பவுன் செயின், 3 பவுன் நெக்லஸ், மோதிரம், வளையல்கள், பணம் ரூ.20ஆயிரம், 2 செல்போ ன்கள் ஆகியவற்றை தனது பையில் வைத்து விட்டு குளிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அந்த நகைகள், பணம் செல்போன்கள் ஆகியவை காணாமல் போயிருந்தது.

    யாரோ மர்ம நபர் அறைக்குள் புகுந்து பணம், நகைகளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து லாட்ஜில் விசாரித்த போது அங்கிருந்தவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அண்ணா நகர் போலீசில் கார்த்திகா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம், நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை நான் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்று அதிகாரிகளிடம் கூறினார்.
    • சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் சுக்கம்பட்டி தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.

    இவரது கணக்கில் இருந்த 60 ஆயிரம் ரூபாயை எடுப்பதற்காக தபால் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கணக்கை சரிபார்த்தபோது கடந்த 28-ந் தேதி மற்றும் இந்த மாதம் 16-ந் தேதி தலா 30 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் ரூபாய் அண்ணாமலை கணக்கில் இருந்து எடுத்திருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை நான் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்று அதிகாரிகளிடம் கூறினார். உடனடியாக அவரது கணக்குகளை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தபோது அவரது கையெழுத்தை போலியாக போட்டு பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    மேலும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சுக்கம்பட்டி தபால் அலுவலகத்தில் பணியாற்றி வரும் உதவியாளர் சக்திவேல் என்பவர் போலியாக கையெழுத்திட்டு அண்ணாமலை கணக்கில் இருந்த ரூ.60 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சேலம் அஞ்சலக கிழக்கு கோட்ட துணை கண்காணிப்பாளர் மஞ்சு, வீராணம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • மனோஜ் தனது நண்பர் மணிகண்டனுக்கு தாங்கள் சுற்றுலா முடிந்து ஊருக்கு கிளம்புவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
    • தப்பி ஓடிய ரமேஷ், சிவா ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரும்பாறை:

    மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 28) தனியார் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது கார் டிரைவராக கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியைச் சேர்ந்த மனோஜ் (27) என்பவர் பணியாற்றி வந்தார்.

    தர்மராஜ் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி காரில் கொடைக்கானல் சென்றார். காரை டிரைவர் மனோஜ் ஓட்டியுள்ளார். சுற்றுலா தலங்களை கண்டு ரசித்த பின்னர் அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது மனோஜ் தனது நண்பர் மணிகண்டனுக்கு தாங்கள் சுற்றுலா முடிந்து ஊருக்கு கிளம்புவதாக தகவல் தெரிவித்துள்ளார். வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் ஊத்து அருகே வந்த போது மணிகண்டன் தனது நண்பர்களான தேனியைச் சேர்ந்த சண்முகசுந்தரம், ரமேஷ், சிவா, ஆண்டிபட்டியைச் சேர்ந்த மதன் ஆகியோர் அங்கு வந்து அவர்களிடம் சிறிது நேரம் பேசினர்.

    பின்னர் அங்கிருந்து அவர்கள் கிளம்பிச் சென்றனர். அப்போது காரில் இருந்த பணம் ரூ.2 லட்சம், 1.5 பவுன் நகை ஆகியவை மாயமாகி இருந்ததை கண்டு தர்மராஜ் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தாண்டிக்குடி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் டிரைவர் மனோஜ் தர்மராஜிடம் அதிக அளவில் பணம் மற்றும் நகைகள் இருப்பது தெரிய வந்ததால் தனது நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து அதனை திருட திட்டம் போட்டார். அதன்படி அவர்களை வரவழைத்து பேச்சு கொடுத்து சிறிது நேரத்தில் பணத்தை திருடியது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து டிரைவர் மனோஜ், மணிகண்டன், சண்முகசுந்தரம், மதன் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர். தப்பி ஓடிய ரமேஷ், சிவா ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பழைய பேட்டை பகு தியை சேர்ந்தவர் பெரியதம்பி மகன் அப்பு அப்பரஞ்சி (வயது 38).

    இவர் நாட்டறம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களை விற்பனை செய்யும் நிறுவ னத்தை நடத்தி வருகிறார்.

    நேற்று காலை இவரது மனைவி கடையை திறந்து பார்த்தபோது கடையில் உள்ள பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் 2 சிறுவர்கள் இணைந்து கடைக்குள் இருந்த விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போனையும், கல்லாப் பெட்டிக்குள் இருந்த ரூ.2ஆயிரத்தையும் திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் காலியானதால் வாகனம் அங்கேயே நின்றது. இதனையடுத்து அங்கே இருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை திருடி தங்களுடைய இருசக்கர வாகனத்தில் நிரப்பி தப்பிய காட்சிகளும் பதிவாகியிருந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தது 2 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.

    ×