search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலி கையெழுத்து போட்டு ரூ.60 ஆயிரத்தை திருடிய தபால் ஊழியர்
    X

    போலி கையெழுத்து போட்டு ரூ.60 ஆயிரத்தை திருடிய தபால் ஊழியர்

    • அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை நான் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்று அதிகாரிகளிடம் கூறினார்.
    • சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் சுக்கம்பட்டி தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.

    இவரது கணக்கில் இருந்த 60 ஆயிரம் ரூபாயை எடுப்பதற்காக தபால் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கணக்கை சரிபார்த்தபோது கடந்த 28-ந் தேதி மற்றும் இந்த மாதம் 16-ந் தேதி தலா 30 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் ரூபாய் அண்ணாமலை கணக்கில் இருந்து எடுத்திருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை நான் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்று அதிகாரிகளிடம் கூறினார். உடனடியாக அவரது கணக்குகளை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தபோது அவரது கையெழுத்தை போலியாக போட்டு பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    மேலும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சுக்கம்பட்டி தபால் அலுவலகத்தில் பணியாற்றி வரும் உதவியாளர் சக்திவேல் என்பவர் போலியாக கையெழுத்திட்டு அண்ணாமலை கணக்கில் இருந்த ரூ.60 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சேலம் அஞ்சலக கிழக்கு கோட்ட துணை கண்காணிப்பாளர் மஞ்சு, வீராணம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×