search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபால் ஊழியர்"

    • தபால் நிலைய உதவி அஞ்சல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.
    • பிளாஸ்டிக் கவர்களில் மூட்டையாக தபால்கள் கிடந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நிஜமாபாத் மாவட்டம், சுபாஷ் நகர் தபால் நிலையத்தில் தபால்காரராக வேலை செய்து வந்தவர் கார்த்திக்.

    இவரது கட்டுப்பாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக வந்த வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை. பான் கார்டு, டிரைவிங் லைசன்சு, வங்கி காசோலைகள் உள்ளிட்ட தபால்களை வழங்கவில்லை.

    இது குறித்து வாடிக்கையாளர்கள் கார்த்திக்கிடம் கேட்டபோது உங்களுக்கு எதுவும் வரவில்லை. வந்தால் கண்டிப்பாக தருகிறேன் என அலட்சியமாக பதில் அளித்து வந்துள்ளார்.

    இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கார்த்திக் மீது சந்தேகம் அடைந்து இது குறித்து தபால் நிலைய உதவி அஞ்சல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.

    நேற்று காலை தபால் நிலையத்திற்கு வந்த கார்த்திக்கிடம் உதவி அஞ்சலக கண்காணிப்பாளர் தபால் நிலையத்தில் இருந்து எடுத்துச் சென்ற தபால்களை ஏன் முறையாக குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கவில்லை என விசாரணை நடத்தினார்.

    அதற்கு கார்த்திக் தனக்கு ஒன்றும் தெரியாது என பதிலளித்தார். இதையடுத்து உதவி அஞ்சலக கண்காணிப்பாளர் கார்த்திக் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது பிளாஸ்டிக் கவர்களில் மூட்டையாக தபால்கள் கிடந்தது.

    மூட்டைகளில் சுமார் 6 ஆயிரம் தபால்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் மூட்டை கட்டி வைத்து இருந்தது தெரிய வந்தது. கார்த்திகை சஸ்பெண்டு செய்தனர்.

    • அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை நான் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்று அதிகாரிகளிடம் கூறினார்.
    • சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் சுக்கம்பட்டி தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.

    இவரது கணக்கில் இருந்த 60 ஆயிரம் ரூபாயை எடுப்பதற்காக தபால் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கணக்கை சரிபார்த்தபோது கடந்த 28-ந் தேதி மற்றும் இந்த மாதம் 16-ந் தேதி தலா 30 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் ரூபாய் அண்ணாமலை கணக்கில் இருந்து எடுத்திருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை நான் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்று அதிகாரிகளிடம் கூறினார். உடனடியாக அவரது கணக்குகளை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தபோது அவரது கையெழுத்தை போலியாக போட்டு பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    மேலும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சுக்கம்பட்டி தபால் அலுவலகத்தில் பணியாற்றி வரும் உதவியாளர் சக்திவேல் என்பவர் போலியாக கையெழுத்திட்டு அண்ணாமலை கணக்கில் இருந்த ரூ.60 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சேலம் அஞ்சலக கிழக்கு கோட்ட துணை கண்காணிப்பாளர் மஞ்சு, வீராணம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • தபால் ஊழியரிடம் ரூ. 10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • தபால் அலுவலகத்தில் பணி நிரந்தரம் செய்து தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

    மதுரை

    மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 42). இவர் அண்ணா நகர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் உசிலம்பட்டி தபால் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு பணி நிரந்தரம் ஆவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தேன். அப்போது திருமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    தல்லாகுளம் தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் கண்ணன் என்னிடம் தபால் அலுவலகத்தில் பணி நிரந்தரம் செய்து தருகிறேன். இதற்காக நீங்கள் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டி இருக்கும்" என்று ஆசை வார்த்தைகள் கூறினார்.

    இதனை நம்பிய நான், அவரிடம் 10 லட்சம் ரூபாயை கொடுத்தேன். அதனை பெற்றுக் கொண்ட கண்ணன் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி பணி நிரந்தரம் செய்து தரவில்லை. எனவே நான் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர் பணத்தை திருப்பி தர மறுத்து வருகிறார். எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    அதன் அடிப்படையில் அண்ணாநகர் குற்றப் புல னாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×