பெண்ணிடம் 14½ பவுன்-பணம் திருட்டு

பெண்ணிடம் 14½ பவுன்-பணம் திருட்டு போனது.நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் 14½ பவுன்-பணம் திருட்டு
Published on

மதுரை

மதுரை கே.புதூர் சர்வேயர் காலனியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது42), விவாகரத்தா னவர். இவர் மகனுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கே.கே.நகரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

அவர்தான் அணிந்திருந்த 10 பவுன் செயின், 3 பவுன் நெக்லஸ், மோதிரம், வளையல்கள், பணம் ரூ.20ஆயிரம், 2 செல்போ ன்கள் ஆகியவற்றை தனது பையில் வைத்து விட்டு குளிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அந்த நகைகள், பணம் செல்போன்கள் ஆகியவை காணாமல் போயிருந்தது.

யாரோ மர்ம நபர் அறைக்குள் புகுந்து பணம், நகைகளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து லாட்ஜில் விசாரித்த போது அங்கிருந்தவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அண்ணா நகர் போலீசில் கார்த்திகா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம், நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com