search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு- வாலிபர் கைது
    X

    கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு- வாலிபர் கைது

    • உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு கோவில் அருகே உள்ள வீடுகளில் இருந்தவர்கள் எழுந்து வந்தனர்.
    • அணைக்கட்டு போலீசார் ஹேமத்குமாரை கைது செய்து கோவில் உண்டியலை உடைத்து திருடிய ரூ.15 ஆயிரத்தை மீட்டனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த பவுஞ்சூர் அருகே கடுகுபட்டு கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வளாகத்தில் காணிக்கை உண்டியல் உள்ளது. நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த ஹெமத்குமார் என்பவர் மது போதையில் கோவில் எதிரே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கோவில் சுற்றுச்சுவரை ஏரி குதித்து உள்ளே சென்றார்.

    பின்னர் அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை திருட முயன்றார். உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு கோவில் அருகே உள்ள வீடுகளில் இருந்தவர்கள் எழுந்து வந்தனர். அவர்கள் வருவதை கண்ட ஹெமத்குமார் உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அங்கு வந்த கிராம மக்கள் அங்கு நின்றிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த ஹேமத்குமார் என்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் போரில் அணைக்கட்டு போலீசார் ஹேமத்குமாரை கைது செய்து கோவில் உண்டியலை உடைத்து திருடிய ரூ.15 ஆயிரத்தை மீட்டனர்.

    Next Story
    ×