search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு ஆலை"

    • பட்டாசு விபத்து குறித்து அந்தப்பகுதி மக்கள் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • இரவில் நடந்த விபத்து காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள எதிர்கோட்டையை சேர்ந்தவர் இமயவர்மன். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் பட்டாசு ஆலை உள்ளது. 10-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு ஊழியர்கள் வேலையை முடித்துவிட்டு வழக்கம் போல் வீட்டுக்கு சென்றிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் ஆலையில் இருந்த ஒரு அறையில் பட்டாசு மூலப்பொருட்கள் திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து தீ அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின.

    பட்டாசு விபத்து குறித்து அந்தப்பகுதி மக்கள் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வெடி விபத்து நடந்த அறை இடிந்து தரைமட்டமானது.

    இரவில் நடந்த விபத்து காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்ட போதிலும் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் கேள்விக்குறியாகவே உள்ளது.
    • பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த ஒரு அறை முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

     சிவகாசி:

    தமிழகத்தில் பட்டாசு உற்பத்திக்கு புகழ் பெற்றது சிவகாசி. இங்கு ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அவைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    இங்கு அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்ட போதிலும் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டுள்ளது . இது பற்றிய விவரம் வருமாறு;

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாராயணபுரம் உள்ளது. இங்கு செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இரவு தங்களது வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் பட்டாசு ஆலையில் நள்ளிரவு நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த ஒரு அறை முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அப்போது தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கிழக்கு போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விபத்துக்கு என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மீட்புப்பணிகள் மற்றும் சிகிச்சை விபரங்கள் குறித்து தருமபுரி கலெக்டர் மூலம் அறிந்தேன்.
    • விபத்தில் கடுமையான காயமடைந்து பென்னாகரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவலிங்கத்துக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி உள்வட்டம், சிகரலஅள்ளி தரப்பு, நாகதாசம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் நாகதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காவேரியின் மனைவி முனியம்மாள் (வயது 65) மற்றும் சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த பூபதியின் மனைவி பழனிம்மாள், (வயது 50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மீட்புப்பணிகள் மற்றும் சிகிச்சை விபரங்கள் குறித்து தருமபுரி கலெக்டர் மூலம் அறிந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் கடுமையான காயமடைந்து பென்னாகரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னுமாலையின் மகன் சிவலிங்கத்துக்கு (வயது 52) சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிவலிங்கத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
    • விபத்தில் பட்டாசு குடோன் வெடித்து சிதறிய இடத்தை போலீசார் பார்வையிட்டனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள நாகதாசம்பட்டி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ராக்கெட், வானவெடி உள்பட பல பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பட்டாசுகளை தயார் செய்து விற்பனைக்காக குடோனில் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று காலை அந்த ஆலையில் அதே பகுதியை சேர்ந்த பூபதி மனைவி பழனியம்மாள் (வயது50), காவேரி மனைவி முனியம்மாள் (65), சிவாலிங்கம் ஆகிய 3 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பட்டாசு குடோனில் இருந்து புகை வந்தது. பின்னர் பயங்கர சத்தத்துடன் குடோன் வெடித்து சிதறியது. இதனால் அருகில் உள்ள வீடுகள் குலுங்கின.

    இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது பட்டாசு தயாரிக்கும் ஆலை குடோன் வெடித்து சிதறியது தெரியவந்தது. இதில் பணியாற்றி பெண்கள் முனியம்மாள், பழனியம்மாள் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் சிவாலிங்கம் என்ற பெண் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பட்டாசு குடோன் வெடித்து சிதறிய இடத்தை பார்வையிட்டனர்.

    பின்னர் விபத்தில் இறந்த 2 பெண்கள் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பட்டாசு ஆலை அருகே குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
    • விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு உரிய லைசென்ஸ் இல்லை என்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    எர்ணாகுளத்தை அடுத்த வரபுழா பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது.

    இந்த ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் நேற்று தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர். நேற்று மாலை திடீரென இந்த ஆலையில் இருந்து கரும்புகை ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் ஆலையின் பட்டாசு தயாரிக்கும் பகுதியில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது.

    இதில் தொழிலாளி ஒருவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அப்போது பட்டாசு ஆலை அருகே குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    அவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

    இதற்கிடையே வெடிவிபத்து நடந்த இடத்தில் மலையாள திரைப்பட நடிகர் தர்மஜனும் இருந்துள்ளார். ஆலை வெடித்து சிதறியபோது அவர் அதிர்ஷ்டவசமாக தப்பியதாக தெரிவித்தார்.

    விபத்து பற்றி தெரியவந்ததும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    இதில் விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு உரிய லைசென்ஸ் இல்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருமங்கலத்தில் விபத்தில் பட்டாசு ஆலை தொழிலாளி பலியானார்.
    • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    சிவகாசியை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது50). பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது உறவினர்கள் கணேசன் மற்றும் போசுடன் காரியாபட்டியில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். ஆவல்சூரன்பட்டி அருகே வந்த போது அங்கிருந்த கண்மாய் பாலத்தில் ஏறிய போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பாலத்திற்கு கீழே விழுந்தனர்.

    இதில் படுகாயமடைந்த மாரிச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரிச்சாமி உடலை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அருகில் காயங்களுடன் கிடந்த கணேசன், போஸ் ஆகியோரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டாசுகள் வெடித்து சிதறியதில் வாலிபர் மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.
    • வெடி விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த வடக்காஞ்சேரியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அங்கிருந்த வாலிபர் மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.

    அவரை போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    பட்டாசு ஆலையில் வெடிமருந்துகள் பதுக்கப்பட்டிருந்ததா? விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு தொழிலாளி இறந்தார்.
    • இதனால் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி பட்டாசு தயாரிக்கும் பணியில் திருத்தங்கல் மேலமாட வீதியை சேர்ந்த ரவி(வயது58), சாமுவேல் ஜெயராஜ் உள்பட தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    அவர்கள் ஆலையில் உள்ள தனி அறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்துகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது மருந்துகளுக்குள் உராய்வு ஏற்பட்டதால் திடீரென தீப்பிடித்தது.

    இதில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்தன. இதன் காரணமாக கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியது. இதில் சிக்கிய ரவி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்தில் சாமுவேல் ஜெயராஜூம் படுகாயமடைந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    சாமுவேல் ஜெயராஜை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இருந்த போதிலும் சிகிச்சை பலனிளிக்காமல் சாமுவேல் ஜெயராஜ் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தில் சிக்கிய ரவி ஏற்கனவே பலியான நிலையில் தற்போது சாமுவேல் ஜெயராஜூம் பலியாகிவிட்டார். இதனால் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார்.
    • காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு

    மதுரை:

    மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி அழகுசிறை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:-

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

    செய்தி அறிந்தவுடன் அமைச்சர் மூர்த்தியை மீட்பு பணிகளை துரிதப்படுத்த உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல அறிவுறுத்தி உள்ளேன்.

    மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

    • நேற்று மதியம் திருப்பதியும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் பட்டாசுகளை தயாரித்துள்ளனர்.
    • வெடிவிபத்து நடந்த பகுதியை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பூசாரித்தேவன்பட்டி கிராமம் உள்ளது. இந்த ஊரில் காளியம்மன் கோவில் அருகே கோபாலன்பட்டியை சேர்ந்த திருப்பதி (வயது 29) என்பவர் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்க பயன்படும் குழாய்கள் தயாரித்து வந்தார்.

    அந்த இடத்தில் உரிய அனுமதியின்றி விதிகளுக்கு புறம்பாக பேன்சி ரக பட்டாசுகளையும் தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று மதியம் திருப்பதியும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் பட்டாசுகளை தயாரித்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் திருப்பதி மற்றும் 17 வயது சிறுவன் என இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருப்பதி பரிதாபமாக இறந்தார்.

    வெடிவிபத்து நடந்த பகுதியை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
    • விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.

    கடலூர் எம்.புதூரில் சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது.

    இங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வாணவேடிக்கை பட்டாசுகள் வெடித்துச் சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

    விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.

    ×