search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூற்றாண்டு விழா"

    • 14 மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
    • போட்டியில் வெற்றிபெறும் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு வருகிற 22-ந்தேதி அமைச்சர் பி.மூர்த்தி பரிசு மற்றும் கோப்பைகளை வழங்குகிறார்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ளது தும்மக்குண்டு கிராமம். இங்கு மறைந்த பின்னணி இசை பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இசையில் புதிய பரிணாமங்கள் தலையெடுத்த போதிலும் பழமைக்கு என்றுமே மவுசு உண்டு என்பதை இந்த கிராம மக்கள் மெய்ப்பித்து உள்ளனர்.

    அந்த வகையில் தமிழ்நாடு ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இசை போட்டி திருவிழா தும்மக்குண்டு கிராமத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

    அவர்கள் கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி மூலம் பாரம்பரிய முறைப்படி கிராமபோன் ரெக்கார்டு மூலம் பழைய டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் பாடல்களை ஒலிக்க வைத்து போட்டிகளை நடத்தினர்.

    இரு தரப்பினரிடையே யாருடைய பாடல் அதிக சத்தத்துடன் ஒலிக்கப்படுகிறதோ அவர் வெற்றியாளராக கருதப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. மூன்று சுற் றுக்களாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றிபெறும் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு வருகிற 22-ந்தேதி அமைச்சர் பி.மூர்த்தி பரிசு மற்றும் கோப்பைகளை வழங்குகிறார்.

    நலிவடைந்து வரும் இந்த தொழிலை மீட்டெடுக்கவும், ஒலிப்பெருக்கி உரிமையாளர்களுக்கு அரசு உதவி தொகை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தும் விதமாகவும் இது போன்ற போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருவதாகவும், இந்த ஆண்டு டி.எம்.சவுந்தரராஜனின் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு வெகுவிமரிசையாக இந்த போட்டி நடைபெற்று வருவதாகவும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    • காரைக்குடி தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடந்தது.
    • கூட்டுறவுத்துறை அமைச்சர், முன்னாள் அமைச்சர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் காரைக்குடி 5 விளக்கு அருகே நடைபெற்றது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் தொண் டரணி அமைப்பா ளர் ஹேம லதா செந்தில் வரவேற்புரை நிகழ்த்தினார். காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்து துரை, நகர செயலாளர் குண சேகரன், மகளிரணி நிர்வாகிகள் குழந்தை தெர சாள், திவ்யா சக்தி, ராஜேஸ் வரி சேகர், சங்கீதா செல்லப் பன், மஞ்சரி லெட்சுமணன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன் சிறப்புரையாற்றினர். முனை வர் எழிலரசி, தலைமை பேச்சாளர் புவியரசி ஆகி யோர் பெண்கள் முன் னேற்றத்திற்கு கலைஞர் ஆற்றிய பணிகள் குறித்து பேசினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கை மாறன், ஜோன்ஸ் ரூசோ, மணிமுத்து, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மானா மதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி உள்பட ஒன்றிய, நகர, பேரூர் கிளை செயலாளர்கள், மகளிரணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் மணி மேகலை நன்றி கூறினார்.

    • 1,731 மாணவ, மாணவிகளுக்கு பாக்கெட் பாக்கெட்டாக பேனாவை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • பச்சை மை பேனாவில் கையெழுத்து போடும் அளவிற்கு சிறந்த அரசு அதிகாரிகளாக திகழ வேண்டும் என்று பேசினார்.

    ராஜபாளையம்

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவரின் பேனா ஆற்றிய பங்கை வலியுறுத்தும் நோக்கில் முகவூர் ஊராட்சி தி.மு.க. கிளை சார்பில் முகவூர் தெற்கு தெரு இந்துநாடார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவி கள், ஆசிரியர்கள் உள்பட 1,731 பேருக்கு பாக்கெட் பாக்கெட்டாக பேனாக் களை எம்.எல்.ஏ தங்கப் பாண்டியன் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கலைஞரின் வளர்ச்சிக்கும், முத்தமிழ் அறிஞர் என்ற பட்டத்திற்கும் சமூக நீதிக்கும் பெரிதும் உறுதுணையாக இருந்தது அவருடைய பேனா. அத்தகைய பேனாவை வைத்து தான் நமது முதல்-அமைச்சர் முதல் 5 திட்டத்திற்கு கையெழுத்திட்டார். மேலும் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய முதன்மையான மாவட்டம் நமது விருதுநகர் மாவட்டம்.வாள் முனையைவிட வலிமையானது பேனா முனை. அதனை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி மாணவ-மாணவிகள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கி பச்சை மை பேனாவில் கையெழுத்து போடும் அளவிற்கு சிறந்த அரசு அதிகாரிகளாக திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலர் ஆதிநாராயணன், தலைவர் ராமசாமி, தலைமை ஆசிரியர் கண்ணன் ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்சாமி, கிளை செயலாளர் தொந்தி யப்பன், ஒன்றிய இளைஞரணி அமைப்பா ளர் சுரேஷ், துணை அமைப்பாளர் மாரிமுத்து, கருப்பசாமி சோலையப்பன் மலைக்கனி ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க சார்பில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று இரவு முத்துக்கடை பஸ் நிலையத்தில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

    பட்டிமன்றத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

    கருணாநிதியின் நிலைத்த புகழுக்கு காரணம் இலக்கிய பணியே, மக்கள் பணியே என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில் இலக்கிய பணியே என்ற தலைப்பில் ராஜ்குமார், கவிதா ஜவகர், மக்கள் பணியே என்ற தலைப்பில் ரேவதி சுப்புலட்சுமி, கருணாநிதி ஆகியோர் பேசினர்.

    புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் ராஜா நடுவராக பங்கேற்று கருணாநிதியின் மக்கள் பணிகள் நினைவில் இருக்கும், இலக்கிய பணி நிலைத்து இருக்கும் எனவே நிலைத்து நிற்கும் இலக்கிய பணியே சிறந்தது என தீர்ப்பு வழங்கினார்.

    இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, எம்.எல்.ஏ, ஈஸ்வரப்பன் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி, நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, ஒன்றியக்குழு தலைவர்கள் வெங்கட்ரமணன், வடிவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நகர செயலாளர் பூங்காவனம் உள்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    • அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பச்சியப்பன் கொட்டாய் கிராமத்தில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இந்த நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு பச்சியப்பன் கொட்டாய் பகுதியை சேர்ந்த தி.மு.க கிளைச் செயலாளர் மாதன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதிேயார்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
    • முன்னதாக பனங்குடி ஜோசப் வரவேற்று பேசி னார்.

    காளையார்கோவில்

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பனைவெல்லம் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு கூட்டுறவு சங்க தலைவர் முத்துக்குமார் ஏற்பாட்டில் கல்லல் சாந்தி ராணி முதியோர் இல்லத்தில் கல்லல் கிழக்கு ஒன்றிய செயலாளர் நா. நெடுஞ்செழி யன் தலைமை யில் முதியோர்களுக்கு கேக் மற்றும் பிரியாணி, வழங்கப்பட்டது. கல்லல் ஊராட்சி மன்ற தலைவரும், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவருமான சுப. வடிவேலு முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராமச்சந்திரன் நீதிபதி, சந்திரசேகரன், மார்க்கண்டேயன், முகமது கனி, ஊராட்சி மன்ற தலைவர் உடையப்பா செல்வம், சேதுபதி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்ட பனைவெல்லம் கூட்டுறவு சங்க தலைவர் முத்துக்குமார், துணைத் தலைவர் மாரி, முன்னாள் தலைவர் குழந்தைவேலு உட்பட நிர்வாகிகள் செய்திருந்தார் கள். முன்னதாக பனங்குடி ஜோசப் வரவேற்று பேசி னார். காளையார்கோவில் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சொக்கு ரமேஷ் நன்றி கூறினார்.

    • தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிக பிரமாண்டமாக விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    • புளியந்தோப்பில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

    சென்னை:

    கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலச்சினையை நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிட்டு பேசுகிறார்.

    தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிக பிரமாண்டமாக விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கொடி கம்பங்களை புதுப்பித்து கொடி ஏற்றுவது, மாவட்டம்தோறும் கருணாநிதிக்கு சிலைகள் அமைப்பது, 70 வயதுக்கு மேலான மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குவது, தி.மு.க. குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, கருத்தரங்கம்-பொதுக்கூட்டம், நூலகங்கள் தொடங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகளை மக்கள் பயன்பெறும் வகையில் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    சென்னை புளியந்தோப்பில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அரசு சார்பிலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் அவரால் பயனடைந்த மக்களை இணைத்து விழாக்களை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இதன் முன்னேற்பாடாக சென்னை கலைவாணர் அரங்கில் நாளை (2-ந் தேதி) கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு லோகோ (இலச்சினை) வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    இந்த விழாவில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தளபதி எம்.எல்.ஏ. கூறினார்.
    • வீடு தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

    மதுரை

    மதுரை பசுமலையில் மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அவைத் தலைவர் ஒச்சுபாலு தலைமை தாங்கினார்.

    முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், தணிக்கை குழு செயலர் வேலுச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். இதில் மதுரை மாநகர் மாவட்ட செய லாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    வருகிற ஜூன் 3-ந் தேதி தலைவர் கருணாநிதி பிறந்தநாளை அனைத்து வார்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.

    மேலும் கட்சிக்கு கூடுதலாக வலு சேர்க்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

    தமிழக அரசின் நலத்திட்டங்களால் மக்கள் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொள்ள முன்வரும் நிலையில் வீடு தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நூற்றாண்டு விழா நடந்தது.
    • தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பிரதமர், முதல்-அமைச்சர் துணை நிற்கின்றனர் என்று மத்திய மந்திரி பேசினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் தொழில் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா காளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    மதுரை தென்மண்டல அஞ்சலகத்தின் ஜெனரல் வி.எஸ்.ஜெயசங்கர் தலைமை தாங்கினார். இதில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு தபால் உறையை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் தென் பகுதிகளில் சிறப்புப்பெற்ற நகரமாக சிவகாசி திகழ்கிறது. அதற்குப் பட்டாசு, தீப்பெட்டி தொழில்களின் வளர்ச்சியே காரணமாகும். இந்த தொழில்கள் வறுமையில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளன. ஆ.சண்முக நாடாரின் முயற்சியால் காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனம் 1923-ல் தொடங்கப்பட்டது. முதலில் தீப்பெட்டி தொழிலே சிவகாசி மக்களிடையே அறிமுகம் செய்யப்பட்டது.

    இன்று இந்த நிறுவனம் படிப்படியாக உயர்ந்து அலுமினியத் துகள்களின் உற்பத்தி, ஆரோ வாட்டர், எண்ணெய் உற்பத்தி போன்ற தொழில் துறை களில் சிறப்புப்பெற்றுத் திகழ்கிறது. இந்த குழுமத்தின் முயற்சியால் காளீஸ்வரி அறக்கட்டளை நிறுவப்பட்டது. அதன்கீழ் காளீஸ்வரி கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

    காளீஸ்வரி குழுமத்தின் கீழ் செயல்படும் தொழில் நிறுவனங்களில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பணிபுரிகின்றனர். வறுமையில் வாழும் மக்களின் வாழ்க்கை மேம்பா ட்டிற்கு இந்த நிறுவனங்கள் உதவிபுரிகின்றன.

    காளீஸ்வரி குழுமம் அமெரிக்கா, ஜப்பான் மெக்சிகோ, கனடா, தென்ஆப்பிரிக்கா, மொரிசீயஸ் உள்ளிட்ட நாடுகளில் தங்கள் கிளைகளை நிறுவியுள்ளது. சிவகாசியின் அடையா ளங்களாகப் பட்டாசுத் தொழிலும், தீப்பெட்டித் தொழிலும் உள்ளன.

    பிரதமர் மோடி தலைமை யிலான மத்திய அரசும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான மாநில அரசும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காளீஸ்வரி நிறுவனத்தின் இயக்குநர் அ.பா.செல்வராஜன் வாழ்த்துரை வழங்கினார். பெங்களூர் இஸ்ரோ யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இணை இயக்குநர் வெங்கடேஸ்வரா சர்மா கவுரவ விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

    காளீஸ்வரி நிறுவனத்தின் இயக்குநர் சி.சண்முகநாதன் வரவேற்றார். இயக்குநர் எஸ்.சண்முக நடராஜ் நன்றி கூறினார்.

    • அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியிலிருந்து பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.
    • இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்வித்துறை அதிகாரிகள், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கலையரசி வரவேற்றார். விழாவில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நூற்றாண்டு வளைவை திறந்து வைத்து, மலர் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியிலிருந்து பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, முன்னாள் எம்.பி வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி குழு தலைவர் என்ஜினீயர் சிவகுமார், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, நாராயணசாமி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுகப்பிரியா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்வித்துறை அதிகாரிகள், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 1925-ம் ஆண்டு மே 17-ல் சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கப்பட்டார்
    • குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலயத்தில் 100-வது ஆண்டு தொடக்க விழா

    கன்னியாகுமரி :

    உலகிலேயே புனிதராக அறிவிக்கும் முன்பே சிறுமலர் தெரேசாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை புனித தெரேசா ஆலயம் ஆகும். இந்த ஆலயம் 1924-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந்தேதி அன்றைய கொல்லம் மறைமாவட்ட ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகரால் அர்ச்சிக்கப்பட்டது. 1925-ம் ஆண்டு மே 17-ல் சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கப்பட்டார்.

    இந்த ஆலயம் 5 ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் 1929-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி அன்றைய பங்குத்தந்தை இக்னேசியஸ்மரியா முன்னிலையில் கொல்லம் ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகரால் அர்ச்சிக்கப்பட்டு காரங்காடு பங்கின் கிளை பங்காக அறிவிக்கப்பட்டது. 1930-ல் கோட்டாறு மறைமாவட்டம் உதயமானது. புனிதையின் (சிறுமலர் தெரேசா) உடன் பிறந்த இரண்டு சகோதரிகளால் 1931-ம் ஆண்டு தரப்பட்ட 2 ஆலய மணிகள் இன்றும் தனது மணி ஓசையால் பக்தர்களின் இதயங்களில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. புனிதையின் பேரருளிக்கம் (புனிதப்பண்டம்) ஆலயத்தில் உள்ளது. 1944 நவம்பர் 5-ம் நாள் கண்டன்விளை தனிப்பங்கானது.

    இந்த நிலையில் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலயத்தில் 100-வது ஆண்டு தொடக்க விழா கடந்த 7-ந்தேதி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூற்றாண்டு விழா நினைவு கட்டிடம் ரூ.25 லட்சம் செலவில் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பங்குப்பேரவை நிர்வாகிகள் மற்றும் பங்குமக்கள் முன்னிலையில், பங்குத்தந்தை சகாய ஜஸ்டஸ் அடிக்கல் நாட்டினார். குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 100-வது ஆண்டு விழாவை 2 ஆண்டுகள் கோலாகலமாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை பங்குபேரவை மற்றும் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.

    • முதுகுளத்தூரில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
    • போட்டியில் முதலிடம் பிடித்தவருக்கு ரூ. 7,100 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் பி.கே மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 6 கி.மீ தூரத்துக்கு மினி மாரத்தான ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் 21 வயதிற்குட்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதுகுளத்தூர்- கடலாடி நெடுஞ்சாலையில் நடந்தது. போட்டியை மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். முதலிடம் பிடித்தவருக்கு ரூ. 7,100 ரொக்கப் பரிசும், 2-வது இடம் பிடித்தவருக்கு 5,100 ரொக்கப்பரிசும், 3-வது இடம் பிடித்தவருக்கு ரூ.3100 ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

    10 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் முதல் பரிசாக ரூ.2,100-ம், 2-ம் பரிசாக ரூ.1,500-ம், 3- பரிசாக ரூ.1,100-ம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் பூவலிங்கம் என்ற மாரி, மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட துணைத்தலைவர்கள் சுப்பிரமணியன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×