search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பட்டிமன்றம்
    X

    கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பட்டிமன்றம்

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க சார்பில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று இரவு முத்துக்கடை பஸ் நிலையத்தில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

    பட்டிமன்றத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

    கருணாநிதியின் நிலைத்த புகழுக்கு காரணம் இலக்கிய பணியே, மக்கள் பணியே என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில் இலக்கிய பணியே என்ற தலைப்பில் ராஜ்குமார், கவிதா ஜவகர், மக்கள் பணியே என்ற தலைப்பில் ரேவதி சுப்புலட்சுமி, கருணாநிதி ஆகியோர் பேசினர்.

    புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் ராஜா நடுவராக பங்கேற்று கருணாநிதியின் மக்கள் பணிகள் நினைவில் இருக்கும், இலக்கிய பணி நிலைத்து இருக்கும் எனவே நிலைத்து நிற்கும் இலக்கிய பணியே சிறந்தது என தீர்ப்பு வழங்கினார்.

    இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, எம்.எல்.ஏ, ஈஸ்வரப்பன் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி, நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, ஒன்றியக்குழு தலைவர்கள் வெங்கட்ரமணன், வடிவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நகர செயலாளர் பூங்காவனம் உள்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×