search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூசிலாந்து இந்தியா தொடர்"

    • நியூசிலாந்துடனான டி20 தொடரை 1-0 என இந்தியா கைப்பற்றியது.
    • இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது.

    ஆக்லாந்து:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று பகல்-இரவாக நடக்கிறது. இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுகிறார்.

    இந்நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் இன்றைய போட்டியில் அறிமுகமாகின்றனர்.

    தவான் தலைமையிலான இந்திய அணி கடந்த மாதம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • 20 ஓவர் தொடரில் வாய்ப்பு வழங்கப்படாத சஞ்சு சாம்சன் ஒருநாள் தொடரில் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவார்.
    • இந்தியா-நியூசிலாந்து இடையே உள்ள நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

    ஆக்லாந்து:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பகல்-இரவாக நடக்கிறது.

    இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுகிறார். வழக்கமான கேப்டன் ரோகித்சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்ட வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. 20 ஓவர் தொடரில் கேப்டனாக இருந்து ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    தவான் தலைமையில் இந்திய அணி கடந்த மாதம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது நியூசிலாந்து தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    20 ஓவர் தொடரில் வாய்ப்பு வழங்கப்படாத சஞ்சு சாம்சன் ஒருநாள் தொடரில் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவார்.

    தவானும், சுப்மன்கில்லும் தொடக்க வரிசையில் ஆடுவார்கள். அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக திகழ்கிறார். தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் மிடில் வரிசையில் ஆடுவார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் சாதிக்க கூடியவர்கள். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து 2 சுழற்பந்து வீரர்கள் இடம் பெறுவார்கள். சுழற்பந்தில் சாஹல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷபாஸ் அகமது உள்ளனர்.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பின்ஆலன், பிரேஸ்வெல், ஹென்றி, பிலிப்ஸ், சான்ட்னெர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். 20 ஓவர் தொடரை இழந்த அந்த அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் வேட்டையில் உள்ளது.

    இரு அணிகள் கடைசியாக மோதிய 4 ஆட்டத்திலும் (பிப்ரவரி, 2020) நியூசிலாந்தே வெற்றி பெற்றது. நாளை மோதுவது 111-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 110 போட்டியில் இந்தியா 55-ல், நியூசிலாந்து 49-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் முடிவு இல்லை. ஒரு போட்டி டையில் முடிந்தது.

    இந்தியா-நியூசிலாந்து இடையே உள்ள நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

    • இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது.
    • இரண்டாவது போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நேப்பியர்:

    இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. நேப்பியரில் விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 160 ரன்களில் சுருண்டது. இந்தியா தரப்பில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

    இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது. 9 ஓவர்கள் மட்டுமே முடிந்திருந்தது. மழை விட்டதும் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், இந்திய அணிக்கு தேவையான ரன்கள் இருந்ததால், போட்டி டையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இரு அணிகளுக்கிடையிலான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே, 3 போட்டி கொண்ட டி2௦ தொடரை இந்தியா 1-0 என கைப்பற்றியது. கடைசி போட்டியின் ஆட்டநாயகனாக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது.

    • அதிரடியாக ஆடிய டெவோன் கான்வே, கிளென் பிலிப்ஸ் இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
    • இந்தியா தரப்பில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

    நேப்பியர்:

    இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது. நேப்பியரில் விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து மணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    துவக்க வீரர் பின் ஆலன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய மார்க் சாப்மென் 12 ரன்களில் வெளியறினார். அதிரடியாக ஆடிய டெவோன் கான்வே, கிளென் பிலிப்ஸ் இருவரும் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பிலிப்ஸ் 54 ரன்களிலும், கான்வே 59 ரன்களிலும் அவுட் ஆகினர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 160 ரன்களில் சுருண்டது.

    இந்தியா தரப்பில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • நேப்பியரில் விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
    • இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷல் படேல் களமிறங்குகிறார்.

    நேப்பியர்:

    இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது. நேப்பியரில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்ற நிலையில், டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

    போட்டி ஒரு சில நிமிடங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் ஆடுகளம் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டது. லேசான மழை என்பதால் விரைவில் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷல் படேல் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்.

    • நியூசிலாந்து அணி நாளைய போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய முயற்சி செய்யும்.
    • சூர்யகுமார் யாதவ் நேற்றைய போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்தார்.

    நேப்பியா:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    கடந்த 18-ந்தேதி இரு அணிகள் இடையே வெல்லிங்டனில் நடைபெற இருந்த முதல் 20 ஓவர் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    மவுண்ட் மாங்கானுவில் நேற்று நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 65 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை யில் உள்ளது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியாரில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி நாளைய ஆட்டத்திலும் வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் நேற்றைய போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்தார். இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா போன்ற சிறந்த வீரர்களும் அணியில் உள்ளனர்

    நியூசிலாந்து அணி நாளைய போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய முயற்சி செய்யும். சொந்த மண்ணில் விளையாடும் அந்த அணி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.

    தோற்றால் அந்த அணி 20 ஓவர் தொடரை இழந்து விடும். இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் நியூசிலாந்து அணியில் இடம் பெறுகிறார்.
    • ஆக்லாந்து ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைகிறார்.

    நேப்பியர்

    நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டது. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை மருத்துவரை சந்திப்பதற்காக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவரது முழங்கை வலி பிரச்சினைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும், நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

    எங்கள் வீரர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக்லாந்தில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3வது டி20 போட்டியில் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அணியை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 111 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
    • நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 61 ரன்கள் அடித்தார்.

    மவுண்ட் மாங்கானு:

    நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மவுண்ட் மாங்கானுவில் இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    இதைடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். 


    இஷான் கிஷன் 36 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் டிம்சவுத்தி 3 விக்கெட் வீழ்த்தினார்.பெர்குசன் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர் முடிவில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    அதிகபட்சமாக அந்த அணி கேப்டன் வில்லியம்சன் 61 ரன்கள் குவித்தார். கான்வே 25 ரன் எடுத்தார். இதையடுத்து 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் தீபக் ஹூடா 4 விக்கெட்டையும், சாகல், சிராஜ் தலா 2 விக்கெட்களையும், புவனேஷ்குமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    • டாஸ்வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
    • சூர்யகுமார் யாதவ் 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்

    இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் இடையே வெல்லிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த முதல் 20 ஓவர் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், 2-வது போட்டி மவுண்ட் மாங்கானுவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி,20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடி சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ், 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இஷான் கிஷன் 36 ரன்கள் சேர்த்தார்.

    நியூசிலாந்து தரப்பில் டிம்சவுத்தி 3 விக்கெட் வீழ்த்தினார். பெர்குசன் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்குகிறது.

    • வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலமாகும்.
    • நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானது.

    மவுண்ட் மாங்கானு:

    இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

    கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் 20 ஓவர் போட்டிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவானும் கேப்டனாக தேர்வு பெற்றுள்ளனர்.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே வெல்லிங்டனில் நேற்று நடைபெற இருந்த முதல் 20 ஓவர் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் மவுண்ட் மாங்கானுவில் நாளை (20-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானது. இதனால் இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும். ஹர்திக் பாண்ட்யா, சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப்சிங் போன்ற சிறந்த வீரர்கள் அணியில் உள்ளனர்.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலமாகும். அந்த அணி இந்தியாவை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. 

    • இந்த வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
    • வெலிங்டனில் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    வெலிங்டன்:

    இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்க இருந்தது.

    இந்த நிலையில் வெலிங்டனில் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டதால் மழை நின்ற பின் ஆட்டம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்தியா- நியூசிலாந்து அணி வீரர்கள் கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பிடித்துள்ளார்.
    • U-19 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனது நியூசிலாந்தில்தான்.

    இந்திய அணியின் இளம் தொடக்க பேட்ஸ்மேன் சுப்மான் கில். இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடியுள்ளார். முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும்போது இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் டெஸ்ட் போட்டியில் ஓரளவு இடம் கிடைக்கிறது.

    தற்போது நியூசிலாந்து தொடரில் விளையாட இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் இன்னும் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகவில்லை.

    சுப்மான் கில் நியூசிலாந்தில் நடைபெற்ற U-19 உலகக் கோப்பையில் விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். தற்போது டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகவும் ஆர்வமாக உள்ளார்.

    இன்றைய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அப்போது சையது முஷ்டாக் அலி டிராபியில் விளையாடியது குறித்து ஒளிபரப்பாளர் கேள்வி எழுப்பினார்.

    அப்போது சுப்மான் கில் கூறியதாவது:

    நான் பயிற்சி செய்த சில விஷயங்களை செயல்படுத்த முடிந்தது. சிக்சர் விளாசுவது பவரால் அல்ல. அது டைமிங் ஷாட்டால்தான் சாத்தியம் என்று நினைப்பவன் நான். அதை சரியான நான் பெற்றால், என்னால் சிக்சர் விளாச முடியும் என்று எனக்குத் தெரியும்.

    அதேபோல் பவுண்டரி, சிக்சரால் ரன்கள் அடிப்பதை விட ஓடி எடுக்கும் ரன்களைத்தான் நான் எதிர்பார்ப்பேன். டாட் பால் இல்லாமல் விளையாட விரும்புகிறேன். முடிந்த அளவு சிங்கிள், டபுள்ஸ் அடிக்க வேண்டும்.

    2019-ல் இங்குதான் நான் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனேன். இங்கே வருவதை சிறந்ததாக உணர்கிறேன். நிச்சயமாக, நியூசிலாந்திற்கு மீண்டும் வருவதில் எனக்கு இனிமையான நினைவுகள் உள்ளன. நான் நியூசிலாந்திற்குச் செல்வேன் என்று எனக்குத் தெரிந்த போதெல்லாம், அது ஒரு புன்னகையைத் தருகிறது.

    இவ்வாறு சுப்மான் கில் தெரிவித்தார்.

    ×