search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்மான் கில்"

    • ஆஸ்திரேலியா போட்டிக்கு முன்னதாகவே காய்ச்சலால் பாதிப்பு
    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டி சென்னையில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தபோது, இந்திய வீரர் சுப்மான் கில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவருக்கு டெங்கு உறுதியானது. இதனால் முதல் போட்டியில் விளையாடவில்லை. நேற்று இந்திய அணி டெல்லி புறப்பட்டு சென்றது. நாளை டெல்லியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியிலும் சுப்மான் கில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்திய வீரர்களுடன் டெல்லி பயணிக்கவில்லை. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    சாதகமான ரிசல்ட் வந்து, உடல்நிலை சரியானால் நேரடியாக அகமதாபாத் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீப காலமாக தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை சுப்மான் கில் வெளிப்படுத்தி வருகிறார். அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை. சென்னையில் இந்திய அணி 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து திணறியது குறிப்பிடத்தக்கது.

    சுப்மான் கில் இல்லாததால் இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறங்கினார்.

    • முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்தியா அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி
    • ஜெய்ஸ்வால்- சுப்மான் கில் ஜோடி 165 ரன்கள் குவித்தது

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது 20 ஓவர் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக் கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 179 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 17 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஜெய்ஷ்வால் 51 பந்தில் 84 ரன்னும் (11 பவுண்டரி, 3 சிக்சர்), சுப்மன்கில் 47 பந்தில் 77 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    சுப்மான் கில்லும், ஜெய்ஸ்வாலும் மிகவும் அபாரமாக ஆடினார்கள். அவர்கள் வெற்றிகரமாக தங்களது பணியை முடித்தனர். அவர்களது திறமையின் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மைதானத்தில் ஏராளமான இந்திய ரசிகர்கள் திரண்டு வந்து எங்களுக்கு ஆதரவு அளித்தனர்.

    20 ஓவர் போட்டியை பொறுத்தவரை யார் வெற்றி பெறுவார்கள்? என்பதை கணிக்க இயலாது. கடைசிப் போட்டியிலும் சிறப்பாக கடுமையாக முயற்சிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் 2 போட்டிகளில் தோற்ற இந்திய அணி 3-வது மற்றும் 4-வது ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது. டெஸ்ட், ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி 20 ஓவர் தொடரையும் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    • 15.3 ஓவரில் 165 ரன்கள் குவித்தனர்
    • இந்தியா 17 ஓவரில் 179 ரன்களை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று புளோரிடாவில் நடைபெற்ற 4-வது போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான சுப்மான் கில்- ஜெய்ஸ்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    15.3 ஓவரில் இந்த ஜோடி 165 ரன்கள் குவித்தது. ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கு மேல் அடித்தனர். சுப்மான் கில் 47 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார். ஜெய்ஸ்வால் 51 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி 179 இலக்கை 17 ஓவரிலேயே எட்டியது. முதல் மூன்று போட்டிகளில் சொதப்பிய சுப்மான் கில் அதிரடி வாணவேடிக்கை நிகழ்த்தினார்.

    இந்த நிலையில் அப்போதைய சச்சின் டெண்டுல்கர்- சவுரவ் கங்குலி ஜோடியை போன்று இந்த ஜோடியால் ஆக முடியும் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

    இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு வீரர்களும் சமமான திறனைப் பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து விளையாடிய வகையில், ஒருவருக்கொருவர் பேட்டிங் செய்ய முடியும். அதற்கான வழியை அவர்கள் தேடுவது அவசியம். அவ்வாறு செய்தால், இந்திய அணியின் அபாயகரமான தொடக்க வீரர்களாக பல ஆண்டுகள் நீடிப்பார்கள். அவர்கள் சச்சின் டெண்டுல்கர்- கங்குலி போன்று சிறந்த ஜோடியாக திகழ்வார்கள்.

    அவர்கள் ஆட்டத்தின் சில பிரச்சனைகளை அவர்கள் கண்டுபிடித்து, அதை சரியான முறையில் செய்தால், இந்தியாவுக்கு மிகப்பெரிய பலனாக அமையும்'' என்றார்.

    • இந்திய வீரர்கள் போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும்
    • ஆஸ்திரேலிய வீரர்கள் 80 சதவீதம் அபராதமாக செலுத்த வேண்டும்

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களும், இந்தியா 296 ரன்களும் சேர்த்தன. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா 234 ரன்னில் சுருண்டது.

    இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் சுப்மான் கில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கேமரூன் க்ரீன் அவரது கேட்சை பிடித்தபோது பந்து தரையில் பட்டதுபோல் இருந்தது. இதனால் 3-வது நடுவரை நெட்டிசன்கள் திட்டி தீர்த்தனர். சுப்மான் கில்லும் சமூக வலைத்தளத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

    இந்த போட்டியில் இரண்டு அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசி முடிக்கவில்லை. இதனால் இரு அணிகளின் அனைத்து வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சுப்மான் கில் ஐசிசி-யின் நன்னடத்தை விதிமுறையை மீறியதாக அவருக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சுப்மான் கில்லுக்கு 115 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா 5 ஓவர்களும், ஆஸ்திரேலியா 4 ஓவர்களும் குறைவாக வீசியிருந்தன. இதனால் அபராதத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    • சுப்மான் கில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்ப்பு
    • ஆஸ்திரேலியாவில் ஸ்டார்க், ஹேசில்வுட் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர்

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா முடிந்த கையோடு இந்திய அணியில இடம் பிடித்துள்ள வீரர்கள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளனர். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் சாம்பியனுக்காக பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த ஆட்டம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த முறை இந்தியா நியூசிலாந்திடம் தோல்வியடைந்து சாம்பியன் வாய்ப்பை இழந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்த முறை இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் சமீபகாலமாக அவர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் அசத்தினார்.

    ஆனால், அவர் இந்த விசயத்தில் ஆட்டம் கண்டுவிடுவார் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் கிரேக் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கிரேக் சேப்பல் கூறியதாவது:-

    நான் சுப்மான் கில்லை ஆஸ்திரேலியாவில் வைத்து பார்த்து இருக்கிறேன். இந்தியாவில் உலக கிரிக்கெட்டில் மற்ற அணிகளை விட சிறப்பாக இருக்க காரணம், அவர்கள் ஏராளமான ஆட்டங்களில் விளையாடி முன்னேற்றம் அடைகிறார்கள். அவர்கள் அதிக அளவில் வெளிநாட்டு தொடரில் விளையாடுவதை உறுதி செய்கிறார்கள். ஆகவே, சுப்மான் கில் வெளிநாட்டில் ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    அவர் இதற்கு முன் இங்கிலாந்து மண்ணில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியா சிறப்பாக பந்து வீசினால், இங்கிலாந்து சூழ்நிலையில் எந்தவொரு பேட்ஸ்மேனும் திணறுவதுபோல் அவரும் திணறுவார். மிட்செல் ஸ்டார்க் போன்று கூடுதல் வேகம் மூலம் சுப்மான் கில்லை திணறடிக்க முடியும். கூடுதல் வேகம் சிறந்த பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்யும். அதேபோல் எக்ஸ்ட்ரா பவுன்சரும் சிறந்த வீரர்களை ஆட்டமிழக்கச் செய்யும்.

    ஹேசில்வுட் உடற்தகுதி பெற்று விளையாடினால், அது சுப்மான் கில்லுக்கு தொந்தரவு கொடுப்பார். ஹேசில்வுட் விளையாடவில்லை என்றால், போலந்து விளையாட வாய்ப்புள்ளது. அவரும் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. அவர் சரியான லைனில் பந்து வீசுகிறார். இங்கிலாந்து சூழ்நிலையில் அவரது பந்து வீச்சு சிறந்த லெந்த் ஆகவும் இருக்கும்.

    சுப்மான் கில் தொடக்கத்தில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் செல்லும் பந்து மீது கவனம் செலுத்துவார். பந்து சற்று பவுன்சரானால், க்ரீஸ் உள் நின்று விளையாடுவார். நான் பார்த்த இந்த சிறிய விசயத்தை ஆஸ்திரேலியாவை அறிந்திருக்க வேண்டும் என்றார்.

    • நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பிடித்துள்ளார்.
    • U-19 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனது நியூசிலாந்தில்தான்.

    இந்திய அணியின் இளம் தொடக்க பேட்ஸ்மேன் சுப்மான் கில். இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடியுள்ளார். முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும்போது இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் டெஸ்ட் போட்டியில் ஓரளவு இடம் கிடைக்கிறது.

    தற்போது நியூசிலாந்து தொடரில் விளையாட இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் இன்னும் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகவில்லை.

    சுப்மான் கில் நியூசிலாந்தில் நடைபெற்ற U-19 உலகக் கோப்பையில் விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். தற்போது டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகவும் ஆர்வமாக உள்ளார்.

    இன்றைய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அப்போது சையது முஷ்டாக் அலி டிராபியில் விளையாடியது குறித்து ஒளிபரப்பாளர் கேள்வி எழுப்பினார்.

    அப்போது சுப்மான் கில் கூறியதாவது:

    நான் பயிற்சி செய்த சில விஷயங்களை செயல்படுத்த முடிந்தது. சிக்சர் விளாசுவது பவரால் அல்ல. அது டைமிங் ஷாட்டால்தான் சாத்தியம் என்று நினைப்பவன் நான். அதை சரியான நான் பெற்றால், என்னால் சிக்சர் விளாச முடியும் என்று எனக்குத் தெரியும்.

    அதேபோல் பவுண்டரி, சிக்சரால் ரன்கள் அடிப்பதை விட ஓடி எடுக்கும் ரன்களைத்தான் நான் எதிர்பார்ப்பேன். டாட் பால் இல்லாமல் விளையாட விரும்புகிறேன். முடிந்த அளவு சிங்கிள், டபுள்ஸ் அடிக்க வேண்டும்.

    2019-ல் இங்குதான் நான் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனேன். இங்கே வருவதை சிறந்ததாக உணர்கிறேன். நிச்சயமாக, நியூசிலாந்திற்கு மீண்டும் வருவதில் எனக்கு இனிமையான நினைவுகள் உள்ளன. நான் நியூசிலாந்திற்குச் செல்வேன் என்று எனக்குத் தெரிந்த போதெல்லாம், அது ஒரு புன்னகையைத் தருகிறது.

    இவ்வாறு சுப்மான் கில் தெரிவித்தார்.

    ×