search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி"

    • வேளாண் வளர்ச்சிக்காக பெரம்பலூரில் 25 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.18.63 லட்சம் நிதி ஒதுக்கபட்டுள்ளது
    • திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 25 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.18.63 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தோட்டக்கலை துணை இயக்குநர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 25 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    நடப்பு நிதியாண்டில் (2023-24) இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 25 கிராம ஊராட்சிகளில் காய்கறி சாகுபடியை ஊக்குவித்தல், ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த பழச்செடி தொகுப்புகள் வழங்குதல் மற்றும் பல்லாண்டு தோட்டக்கலை பயிர்கள் பரப்பு விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெறும். இத்திட்டத்தில் பயனடைய பெண்கள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது இணையதளத்தின் மூலமாக பதிவு செய்தோ பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • பணிகளை தேர்வு செய்வதற்காக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆய்வுப்பணி மேற்கொண்டார்.
    • கழுநீர்குளம் ஊராட்சி தலைவர் கை.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளம் ஊராட்சிக்கு திட்டப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான பணிகளை தேர்வு செய்வதற்காக அவர் ஆய்வுப்பணி மேற்கொண்டார்.

    நிகழ்ச்சியில் கழுநீர்குளம் ஊராட்சி தலைவர் கை. முருகன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முருகன், ராமர், தி.மு.க. நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் காமராஜ், செல்லபாண்டி, லிங்கம், வேல்முருகன், செல்வராஜ், தங்கராஜ், சிவசுப்பிரமணியன், ஜெகன், தங்கத்துரை, பொன்னுத்துரை, சிவபெருமாள், காசிபாண்டி, கைக்கொண்டான், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
    • கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக் களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக் களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை மற்றும் கல்வி உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக் கைகள் குறித்து, மொத்தம், 348 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர், பரி சீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தர விட்டார்.

    தொடர்ந்து, உயர்கல்வி தொடர முடியாத மாணவர்களுக்கு, உயர் கல்வி வழிகாட்டுதல் உதவி மையத்தின் மூலம், உயர்கல்வி தொடர்வ தற்காக, நிதி உதவியாக தன் விருப்புரிமை நிதியில் இருந்து, 3 மாணவ, மாணவி யருக்கு, தலா ரூ. 20 ஆயிரம் வீதமும், 4 மாணவிகளுக்கு, தலா ரூ. 10 ஆயிரம் வீதமும், மொத்தம் 7 மாணவ- மாணவிகளுக்கு ரூ. 1 லட்சத்திற்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும், சமூக பொறுப்பு நிதியில் இருந்து, நாபின்ஸ் நிறுவனம் சார்பில், தலா ரூ. 23 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில், 50 பள்ளிகளுக்கு நாப்கின் எரியூட்டி எந்தி ரங்கள், நிறுவனத்தின் பொது மேலாளர் மோகன் பிரசாத் முன்னிலையில் வழங்கப்பட்டது.

    அதையடுத்து, மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக் களைப் பெற்று, துறை அலுவலரிடம் வழங்கிய கலெக்டர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., மணிமேகலை, சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் சட்டபூர்வ நிதி வழங்கப்பட்டது.
    • மேலாண்மை நிலையங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.ஜி.மாதவன் தலைமையில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    அப்போது விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் சட்டபூர்வ நிதி வசூல் தொகை ரூ.1.11 கோடிக்கான காசோலை களை விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநரிடம் வழங்கினார்.

    சிவகங்கை மண்டல இணைப் பதிவாளர் கோ.ஜினு, விருதுநகர் இணைப்ப்பதிவாளர் அலுவலக துணைப் பதிவாளர் சந்தன ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணைப்பதிவாளர் வீரபாண்டி, விருதுநகர் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ராமகிருஷ்ணன், கூட்டுறவு பிரசார அலுவலர் செல்வராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பேராவூரணியில் அரசு காமராஜர் ஆஸ்பத்திரி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
    • 100-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பேராவூரணி:

    பேராவூரணியில் அரசு காமராஜர் மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

    30-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நவீன உபகரணங்களுடன் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து பேசி னார்.

    அதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன், பேராவூரணி அரசு காமராசர் மருத்துவ மனை மேம்பாட்டிற்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

    கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சருக்கும், சுகாதாரத்துறை அமை ச்சருக்கும் பேராவூரணி தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அசோக்குமார் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

    • நீலகிரி தொகுதி எம்.பி ஆ.ராசா பந்தலூா் பகுதியில் மக்களைச் சந்தித்து மனுக்களை பெற்றாா்.
    • பாடந்தொரையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

    ஊட்டி,

    நீலகிரி தொகுதி எம்.பி ஆ.ராசா பந்தலூா் பகுதியில் மக்களைச் சந்தித்து மனுக்களை பெற்றாா். நாடுகாணி பகுதியில் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்ற ஆ.ராசா, நெல்லியாளம் நகராட்சி சாா்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாா்.

    இதையடுத்து புளியம்பாறை கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

    பின்னா் புளியம்பாறை கிராமத்தில் யானை தாக்கி உயிரிழந்த கல்யாணி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கினாா்.

    தொடா்ந்து தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள மஞ்சமூலா கிராமத்தில் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றாா்.

    பின்னா் பாடந்தொரையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து கம்பாடி கிராமம், ஸ்ரீமதுரை ஊராட்சி, மண்வயல் பகுதியில் பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெற்றாா்.

    நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளா் லியாகத் அலி, பொறியாளா் அணியின் மாநில துணைச் செயலாளா் பரமேஸ் குமாா் உள்பட நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

    • நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்ப டாமல் நீண்டகாலமாக பாதியிலேயே நின்றது.
    • ஏற்று ரூபாய் 104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாகப்பட்டினம்:

    சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்ப டாமல் நீண்டகாலமாக பாதியிலேயே நின்றது.

    இந்த ஆட்சி அமைந்ததும் அதை கட்டி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

    அதை ஏற்று ரூபாய் 104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாலம் கட்டும் பணிக்கு நிர்வாக ஒப்புதல் எப்போது அளிக்கப்படும்? பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.

    இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    நாகப்பட்டினம் அக்கரை ப்பேட்டை வேளாங்கண்ணி சாலையில் கடவு எண் 48-இல் ரயில்வே பாலம் கட்டுவது தொடர்பாகத் தான் எம்.எல்.ஏ கேட்டுள்ளார்.

    ரெயில்வே பாலத்திற்கு அவர் குறிப்பிட்டதைப் போல 104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அநேகமாக இந்த மாதமே அந்த கட்டுமானப் பணிகள் தொடங்கும் நிலையில் இருக்கிறது என்றார்,

    • கிறிஸ்துவ சர்ச், ஜெப கூடங்களை புனரமைக்க விண்ணப்பிக்கும் வேண்டுகோளை அறிக்கையாக அளித்து வருகின்றனர்.
    • தமிழகத்தில் தி.மு.க.,வின் ஆட்சி வந்த பின் கிறிஸ்துவர்களின் மதமாற்றம் தலைவிரித்தாடுகிறது.

    திருப்பூர் :

    இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு முதல் தமிழகத்தின் மாவட்ட கலெக்டர்கள், கிறிஸ்துவ சர்ச், ஜெப கூடங்களை புனரமைக்க விண்ணப்பிக்கும் வேண்டு கோளை அறிக்கையாக அளித்து வருகின்றனர். மதசார்பற்ற அரசு, மக்களின் வரி பணத்தை மத வழிபாட்டு தலங்கள் சீரமைப்பு நிதியாக அளிப்பது கூடாது.

    இந்துகோவில்களை அரசு, தனது அதிகாரம் எனும் இரும்பு பிடிக்குள் வைத்து ஆட்டிப்ப டைத்து வருகிறது. பல்லாயிரம் கோவில்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருந்தும் ஒரு கால பூஜை கூட இல்லாத நிலை இருக்கிறது.ஆனால் தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில், கோவில்களை சீரமைக்க அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. சர்ச்சுகளுக்கு மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்க காரணம் கிறிஸ்துவ ஓட்டு வங்கி தான். தமிழகத்தில் தி.மு.க., வின் ஆட்சி வந்த பின் கிறிஸ்துவர்களின் மதமாற்றம் தலைவிரித்தாடுகிறது. சர்ச் புனரமைப்பு நிதி தருவது அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பானது. இந்த அறிவிப்பை அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்,

    • தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் வழங்கினார்
    • மொத்தம் ரூ.11 கோடி வழங்கப்பட உள்ளது

    அரும்பாவூர்,

    பூலாம்பாடி பேருராட்சி பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தருமாறு பன்னாட்டு தொழிலதிபரும் மண்ணின் மைந்தருமான டத்தோ எஸ்.பிரகதீஸ்குமாரிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.அதன்படி பொதுமக்களின் சிரமங்களை கேட்டறிந்த அவர், பொதுமக்கள் பங்களிப்பு தொகையுடன் நமக்குநாமே திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்தார். அதற்கான முயற்சிகளை முழுவீச்சில் செய்த டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் அரசு அதிகாரிகளிடம் கூறி பூலாம்பாடி பேரூராட்சியில் அனைத்து வீதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கண்டறியசொல்லி அதற்கான செலவினங்களையும் கேட்டறிந்தார்.

    இதனை செய்து முடித்தால் பூலாம்பாடி பேரூராட்சி அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறும் என்பதால், அடிப்படை வசதிகளை நமக்குநாமே திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.33 கோடி மதிப்பீட்டில் செய்து தர முடிவு செய்யப்பட்டது. டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் சார்பில் ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேசன் சார்பில் ரூ.11 கோடி பங்களிப்பு தொகையாக தரப்படஉள்ளது. அதன் மூலம்

    பூலாம்பாடி பேரூராட்சியில் சாலைவசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய், உயர்மட்ட பாலம் அமைத்தல், குடிநீர் கிணறு அமைத்தல் பணிகள் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் பங்களிப்பு தொகையாக அவரது ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேசன் சார்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ந்தேதி முதற்கட்ட நிதியாக ரூ.90 லட்சத்திற்கான வரைவோலையையும், அக்டோபர் 28-ந்தேதி இரண்டாம் கட்டநிதியாக ரூ.74லட்சத்து 8 ஆயிரத்துக்கான வரைவோலையையும் வழங்கியிருந்தார்.இந்தநிலையில் நேற்று (10.04.2023) மூன்றாம் கட்டநிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார், ரூ.26லட்சத்து 98 ஆயிரத்துக்கான வரைவோலையைபூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் சிவராமனிடம் வழங்கினார். பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன், கவுன்சிலர்கள் பூங்கொடி மணி, மாணிக்கம், ராமதாஸ், ராஜலட்சுமி செல்வக்குமார், கஸ்தூரி வீராசாமி, பரகத்நிஷா அப்துல்ரஹீம், சுதாகர், ஜெயந்தி பெருமாள், செல்வராணி ராமர் தொழிலதிபர்கள் மணிகவுண்டர்,இசைபாலு, மண்மணி, பூலாம்பாடி சதிஷ், மணி, செங்குட்டுவன் மற்றும் பூலாம்பாடி டத்தோ இளைஞர் நற்பணி மன்றத்தினர் கிராம பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மணிமேகலை விருது வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்புற கூட்டமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருது வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மணிமேகலை விருது பெற தகுதியுள்ள சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்புறங்களில் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவை முறையான கூட்டம் நடத்துதல், சேமிப்பு செய்ததை முறையாக சேமித்தல், வங்கி கடன் பெற்று இருத்தல், குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைதல், உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சி பெற்றிருத்தல், சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    மேலும், மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதியான கிராமப்புற சமுதாய அமைப்புகள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த வட்டார இயக்க மேலாளரிடமும், நகர்ப்புற சமுதாய அமைப்புகள் சம்மந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கமுதாய அமைப்பாளர்களிடம் தொடர்புகொண்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து 25.4 2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அபிவிருத்தி திட்ட மேம்பாட்டுக்கு நிதி வழங்கல் நிகழ்ச்சி நடந்தது.
    • நிர்வாக மேலாளர் சரவணன்,துணை மேலாளர்கள் ஈஸ்வரன், முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடலோர சதுப்பு நில காடுகளின் அபிவிருத்தி திட்ட மேம்பாட்டிற்காக ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் மூலம் சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தை மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் வழங்கினார். இது குறித்து மாவட்ட வன அலுவலர் கூறுகையில், தனியார் நிறுவனங்கள் நீர்வள ஆதாரங்களை பாதுகாக்கும் வகையில் திட்ட பணிகளை மேற்கொள்ள தங்கள் நிறுவனத்தில் இருந்து பெறக்கூடிய லாபத்தில் அதாவது சமூக கூட்டாண்மை பொறுப்புணர்வு திட்டம் (சி.எஸ்.ஆர்.) மூலம் 2 சதவீதம் நிதி உதவி வழங்குவது வழக்கம். அந்த அடிப்படையில் கடற்கரை ஓரமுள்ள வனப்பகுதிகளை பாதுகாப்பதற்கான பணிகளுக்கு ரூ.50 லட்சத்தை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் மூலம் வழங்கி உள்ளனர் என்றார்.

    இதில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத் தலைவர் எஸ்.ராமலிங்கம், உதவி தலைவர் மணிகண்டன், நிர்வாக மேலாளர் சரவணன்,துணை மேலாளர்கள் ஈஸ்வரன், முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • நன்கொடையாளருக்கு பயனீட்டுச்சான்றிதழ் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • உட்கட்டமைப்பு வசதிக்கான பொருட்செலவுகளை நன்கொடை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை பெற "நம்ம ஸ்கூல்"- நம்ம ஊரு பள்ளி திட்டம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் திட்டப்பணிகளுக்கு நிதி அளிப்பது, பொருட்களாக வழங்குவது, தன்னார்வ சேவைபுரிவது வாயிலாக அரசுபள்ளிகளின் அடிப்படை தேவைகளை சமூக பங்களிப்புடன் நிறைவேற்றிட இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

    சமூகபங்களிப்பு நிதியினை பெற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி அன்று "நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி" (nammaschool.tnschools.gov.in) என்ற இணையதளம் மற்றும் தனிவங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

    வங்கிக்க ணக்கு அரசு பள்ளி களின் மேம்பாட்டிற்காக பெரு, சிறு, குறு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு அளித்திட உறுதுணையாக உள்ளது.

    இணையதளம் வழியாக பெறப்படும் நிதியானது பள்ளிகளுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற இன்றியமையாத தேவைகளுக்கான செலவினம் மேற்கொள்ளப்பட்டு நன்கொடையாளருக்கு பயனீட்டுச்சான்றிதழ் அளிக்க வழிவகை செய்யப்பட்டு ள்ளது.

    அரசு பள்ளிகளுக்கென தனிநபர்கள், முன்னாள் மாணவர்கள் குறு மற்றும் பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி போன்றவை இணையதளம் வாயிலாக மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.

    இதற்கென ஒவ்வொரு பள்ளிக்கும் வங்கி கணக்கு தொடங்கவும் பள்ளிக் கல்வித்துறையால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    நன்கொடையாளர்கள் தாங்கள் விரும்பும் பள்ளியை மேற்குறிப்பிட்ட இணையதளம் வாயிலாக தேர்ந்தெடுத்து உட்கட்ட மைப்பு வசதிக்கான பொருட்செலவுகளை நன்கொடை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்த தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நன்கொடையாளருக்கு பயனீட்டுச்சான்றிதழ் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    ×