search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவீன் பட்நாயக்"

    • அவருக்கு கடன்கள் ஏதும் இல்லை.
    • ரூ.6,434 மதிப்பிலான 1980 மாடல் கார் வைத்துள்ளார்.

    புவனேசுவரம் :

    ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது.

    இந்த மாநிலத்தில் முதல்-மந்திரியும், மந்திரிகளும் தங்களது சொத்துப்பட்டியலை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு ரூ.65 கோடியே 40 லட்சம் சொத்துக்கள் உள்ளன. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரம் ஆகும். அவருக்கு கடன்கள் ஏதும் இல்லை.

    2020-21 நிதி ஆண்டில் அவரது சொத்துகள் மதிப்பு ரூ.64 கோடியே 97 லட்சம் ஆகும். சொத்துகள் விவரம் வருமாறு:-

    * முதல்-மந்திரி அலுவலக இணையதளத்தின்படி, முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் அசையும் சொத்துகள் மதிப்பு 2021-22 ஆண்டில் அதிகரித்துள்ளது. அசையாச்சொத்துகள் மதிப்பில் மாற்றம் இல்லை.

    * அசையும் சொத்துகள் மதிப்பு ரூ.12 கோடியே 52 லட்சம் ஆகும். இதில் டெல்லி, புவனேசுவரம், ஹிஞ்சிலிகட். பர்கார் ஆகிய இடங்களில் உள்ள வங்கிக்கணக்கு இருப்புகள், நகைகள், கார் அடங்கும்.

    * அசையாச்சொத்துகளில் புவனேசுவரம் விமான நிலையம் அருகே உள்ள அவரது நவீன் நிவாஸ் பங்களாவின் மதிப்பு ரூ.9 கோடியே 52 லட்சத்து 46 ஆயிரத்து 190 ஆகும். டெல்லியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் அமைந்துள்ள ரூ.43 கோடியே 36 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான சொத்தில் பாதி, நவீன் பட்நாயக்கிற்கு இருக்கிறது.

    * ரூ.1 கோடி அளவுக்கு வங்கியில் டெபாசிட்டுகள் உள்ளன. ரூ.9 கோடி மதிப்பில் ரிசர்வ் வங்கி பத்திரங்கள் வைத்துள்ளார். அஞ்சலக சேமிப்பு ரூ.1½ கோடி உள்ளது. டெல்லி ஜன்பத்தில் உள்ள வங்கியில் ரூ.70 லட்சம், புவனேசுவரத்தில் உள்ள பாரத ஸ் டேட் வங்கியில் ரூ.21 லட்சம் சேமிப்பு உள்ளது.

    * ரூ.3½ லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும், ரூ.6,434 மதிப்பிலான 1980 மாடல் காரும் வைத்துள்ளார்.

    * ஒடிசாவில் 5 முறை முதல்-மந்திரி பதவி வகித்துள்ள நவீன் பட்நாயக்கின் அசையா சொத்துகள் மதிப்பு ரூ.52 கோடியே 88 லட்சம் ஆகும். இவை அவரது பெற்றோர் பிஜூ பட்நாயக், கியான் பட்நாயக் வழி வந்தவை ஆகும்.

    நவீன் பட்நாயக் மந்திரிசபையில் மந்திரிகள் அசோக் சந்திர பாண்டா, பிரித்தி ரஞ்சன் கடாய், ரானேந்திர பிரதாப் ஸ்வைன், பிரமிளா மாலிக், நிரஞ்சன் பூஜாரி, உஷா தேவி, அடானு சப்யசாகி நாயக், ராஜேந்திர தோயில்கியா, டுகானி சாகு, பிரதீப் குமார் அமத், பி.கே. தேப், பசந்தி ஹேம்ப்ராம், ரோகித் பூஜாரி, அஷ்விணி பத்ரா ஆகிய 14 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள்.

    ஒடிசாவின் உருக்கு, சுரங்கத்துறை மந்திரி பிரபுல்லா மாலிக்கிற்கு ரூ.42 லட்சம் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இவர்தான் வசதி குறைந்த மந்திரி ஆவார். இவர்கள் அத்தனை பேரின் சொத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

    இது அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    • நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜூ பட்நாயக் கடந்த 1997-ம் ஆண்டு மறைந்தார்.
    • ஸ்வர்கத்வார் மயானத்தை அழகுபடுத்த மாநில அரசு 2019-ம் ஆண்டு நடவடிக்கை எடுத்தது.

    புவனேஸ்வர் :

    ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கின் தந்தையும், முன்னாள் முதல்-மந்திரியுமான பிஜூ பட்நாயக் கடந்த 1997-ம் ஆண்டு மறைந்தார். அவரது உடல் புரி நகரில் உள்ள மயானத்தில் (ஸ்வர்கத்வார்) தகனம் செய்யப்பட்டு அங்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. புரி நகரை மேம்படுத்தவும், இந்த மயானத்தை அழகுபடுத்தவும் மாநில அரசு கடந்த 2019-ம் ஆண்டு நடவடிக்கை எடுத்தது. இதற்கான திட்டத்தை செயல்படுத்த இந்த நினைவிடம் தடையாக இருந்தது.

    இதை அறிந்த நவீன் பட்நாயக், தனது தந்தையின் நினைவிடத்தை அகற்றுமாறு உத்தரவிட்டு உள்ளார். இதை அவரது தனிச்செயலாளரும், 13 ஆண்டுகளாக அவருடன் நெருக்கமாக இருந்து வருபவருமான பாண்டியன், துபாயில் நேற்று முன்தினம் ஒடிசா மக்கள் மத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியுள்ளார். தனது தந்தை மக்களின் இதயங்களில் வசிப்பதாகவும், கல்லில் அல்ல என்றும் நவீன் பட்நாயக் கூறியதாக பாண்டின் மேலும் குறிப்பிட்டார். தற்போது அந்த பகுதியில் நினைவிடத்துக்கு பதிலாக வெறும் பெயர் பலகை மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    • மூன்றாவது அணிக்கான முயற்சிகளில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.
    • ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பல்வேறு தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அடுத்தடுத்த சந்திப்புகள் நடக்கின்றன.

    அதேசமயம், மூன்றாவது அணிக்கான முயற்சிகளில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஒடிசா சென்று, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மூன்றாவது அணி தொடர்பாக பேசியிருக்கலாம் என தகவல் வெளியானது.

    இந்நிலையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், புவனேஸ்வரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை புரிக்கு மாற்றுவது தொடர்பாக பேசியதாகவும் தெரிவித்தார். டெல்லியில் வேறு எந்த தலைவர்களையும் சந்திக்கும் திட்டம் இல்லை என்றும் கூறினார்.

    நிதிஷ் குமாருடான சந்திப்பு மற்றும் மூன்றாவது அணி குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, 'என்னை பொருத்தவரை மூன்றாம் அணிக்கு வாய்ப்பில்லை. வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் எந்த எதிர்க்கட்சி தலைவர்களுடனும் பிஜூ ஜனதா தளம் கூட்டணி வைக்காது, தனித்து போட்டியிடும்' என்றார்.

    • மம்தா பானர்ஜிக்கு அங்கவஸ்திரம் வழங்கி நவீன் பட்நாயக் வரவேற்றார்.
    • இருவரும் 15 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினர்.

    புவனேஸ்வர் :

    மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக கடந்த 21-ந் தேதி ஒடிசா மாநிலத்துக்கு சென்றார். அங்குள்ள புரியில் தங்கி இருந்தபோது, ஜெகநாதர் ஆலயத்துக்கு சென்று வழிபட்டார்.

    வங்காள பவன் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். நேற்று மேற்கு வங்காளத்துக்கு திரும்பும் முன்பு, ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.

    நவீன் பட்நாயக்குக்கு வங்காளத்தில் தயாரிக்கப்பட்ட விசேஷ சால்வையை வழங்கினார்.

    மம்தா பானர்ஜிக்கு அங்கவஸ்திரம் வழங்கி நவீன் பட்நாயக் வரவேற்றார். 3 ரதங்களின் மாதிரி வடிவத்தையும், ஒடிசாவின் பிரபலமான இனிப்பு வகையையும் அளித்தார்.

    இருவரும் 15 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர், இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். நவீன் பட்நாயக் கூறியதாவது:-

    இது முற்றிலும் மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதிகாரபூர்வமற்ற சந்திப்பு. நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி எதுவும் பேசவில்லை. கூட்டாட்சி முறையை மேலும் வலுப்படுத்துவது பற்றி விவாதித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    நவீன் பட்நாயக் உயர்ந்த தலைவர். அவருடன் எப்போதும் நல்லுறவு உள்ளது. கூட்டாட்சி முறை பற்றிய அவரது கருத்தை ஆதரிக்கிறேன்.

    3-வது அணி பற்றி எதுவும் பேசவில்லை. மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றித்தான் பேசினோம். அவர் அளித்த வரவேற்பு, விருந்தோம்பல் மகிழ்ச்சி அளிக்கிறது.

    மேற்கு வங்காளத்தில் கட்டப்பட்டு வரும் புதிய ஜெகநாதர் ஆலயத்துக்கு வருமாறு அவரை அழைத்தேன். புரியில் வங்காள பவன் கட்ட 2 ஏக்கர் நிலம் அளித்ததற்கு நன்றி தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்-ஐ உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்
    • அங்குள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

    புவனேஸ்வர்:

    15-வது உலக கோப்பை ஹாக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், உலக கோப்பை போட்டிகளை காணவும், ஒடிசா மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளைப் பார்வையிடவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா மாநிலம் சென்றுள்ளார்.

    ஒடிசாவில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.

    • 15-வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13 முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.
    • உலக கோப்பையை இந்தியா வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்றார் ஒடிசா முதல்வர்.

    புவனேஷ்வர்:

    15-வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெற உள்ளது.

    மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்தியா, தனது தொடக்க ஆட்டத்தில் ஜனவரி 13-ம் தேதி ஸ்பெயினைச் சந்திக்க உள்ளது.

    இந்நிலையில், ஹாக்கி உலக கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

    • ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    • தாங்கள் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன், ஒடிசா மாநில முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற விழைகிறேன்.

    சென்னை:

    ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இயற்கைப் பேரிடர்களைச் சீரிய முறையில் தாங்கள் கையாள்வதும், விளையாட்டுத்துறைக்கு ஊக்கமளித்து, இளம் திறமையாளர்களை வளர்த்தெடுப்பதும் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

    தாங்கள் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன், ஒடிசா மாநில முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற விழைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஒடிசாவில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தினமும் ரூ.60 வீதம் 7 நாட்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #Odisha #NaveenPatnaik
    புபனேஷ்வர்:

    ஒடிசாவின் பத்ராக், ஜாஜ்பூர் மற்றும் கேந்த்ராபாரா பகுதிகள் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டன. சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன. 40 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

    தற்போது இயல்புநிலை திரும்பி வரும் நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் நவீன் பட்நாயக், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7 நாட்களுக்கு தினமும் ரூ.60 வழங்கவும், 12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.45 வழங்கவும் உத்தரவிட்டார். 90 டன் அரிசி, குடிநீர், மருத்துவ வசதிகள் ஆகியவை வழங்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
    ×