search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hockey World Cup"

    • இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரெய்ட் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
    • உலக கோப்பை தொடரில் இந்திய அணி காலிறுதிக்கு கூட முன்னேற முடியாத நிலையில் அவர் இந்த முடிவை அறிவித்திருக்கிறார்.

    உலக கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடந்து முடிந்துள்ளது. 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பெல்ஜியம் – ஜெர்மனி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று நடந்த ஃபைனல் மேட்ச்சில் ஜெர்மனி அணி பெனால்டி ஷூட் அவுட்டில் நடப்பு சாம்பியனான பெல்ஜியம் அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது.

    இந்த தொடரில் இந்திய அணி குரூப் டி-யில் இடம்பெற்றிருந்தது. இந்த பிரிவில் 2-ம் இடம்பிடித்ததால் முதலிடம் பெற்ற இங்கிலாந்து அணி நேரடியாக காலிறுதிக்கு சென்றது. இந்திய அணி கிராஸ் ஓவர் சுற்றில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கிளாசிஃபிகேஷன் ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்திய அணி 9-வது இடத்தை பிடித்தது.

    இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கிரஹாம் ரெய்ட் ராஜினாமா செய்துள்ளார். அவருடன் அனலைடிக் பயிற்சியாளர் கிரேக் கிளார்க், அறிவியல் ஆலோசகர் மிட்ச்செல் டேவிட் ஆகியோரும் இன்று தங்களது ராஜினாமாவை அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஹாக்கி இந்தியாவின் தலைவர் திலீப் திர்கே கூறுகையில்:-

    இந்திய அணிக்கு கிரஹாம் ரெய்ட் அளித்த பங்களிப்பை நாங்கள் நன்றியுடன் நினைவு கூர்கிறோம். அவர் பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்க பாடுபட்டுள்ளார்.

    குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் அவர் அணியை சிறப்பாக கையாண்டார். அனைத்து பயணங்களும் கடினமான பாதையை தாண்டி செல்ல வேண்டும். அணியை புதிய முறையில் நாங்கள் அணுகுவதற்கான நேரம் வந்துவிட்டது.

    என்று அவர் தெரிவித்தார்.

    • ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 3 -3 என சமனிலை வகித்தன.
    • போட்டியின் முடிவில் 5-4 (பெனால்டி ஷூட்) முறையில் என்ற நியூசிலாந்து வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    புவனேஸ்வர்:

    15-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் நேரடியாக கால்இறுதிக்குள் நுழைந்தன.

    ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்த அணிகள் 2-வது சுற்றில் மோதுகின்றன. இதில் இன்று நடைபெற்ற 2வது சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

    ஆரம்பம் முதல் இரு அணிகளும் கடுமையாக போராடின. இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 3- 3 என்ற கணக்கில் கோல் அடித்து சமனிலை வகித்தன.

    இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. பரபரப்பாக நடந்த ஷூட் அவுட் முறையில் நியூசிலாந்து 5-4 என்ற கணக்கில் வென்று, காலிறுதிக்கு முன்னேறியது. இந்தியா நூலிழையில் வாய்ப்பை தவறவிட்டதுடன் தொடரில் இருந்தும் வெளியேறியது.

    • ஆட்டத்தின் முதல் இரு பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • போட்டியின் முடிவில் 2-2 (4-3 பெனால்டி ஷூட்) முறையில் ஸ்பெயின் அணி மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.

    லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் நேரடியாக கால்இறுதிக்குள் நுழைந்தன.

    ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்த அணிகள் 2-வது சுற்றில் மோதுகின்றன. இதில் இன்று நடைபெற்ற 2வது சுற்றின் முதலாவது ஆட்டத்தில் மலேசியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தனர். ஆனால் முதல் இரு பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    இதையடுத்து நடைபெற்ற 3வது பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2 கோலும், மலேசியா 1 கோலும் அடித்தன. இதனால் ஸ்பெயின் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து கடைசி சுற்று ஆட்டத்தில் மலேசியா மேலும் ஒரு கோல் அடிக்க ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 2 கோல் அடித்தன.

    இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    இதில் இரு அணிகளுக்கு தலா 5 வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. இதில் இரு அணிகளும் 3 வாய்ப்புகளை கோலாக்கினர். இதையடுத்து சடென் டெத் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறிய மலேசியா வாய்ப்பை வீணடித்தது.

    ஆனால் ஸ்பெயின் அணி தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை கோலாகினர். முடிவில் 2-2 (4-3 பெனால்டி ஷூட்) முறையில் ஸ்பெயின் அணி மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. அந்த அணி காலிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

    • ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர்
    • குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா முதல் இடமும், அர்ஜெண்டினா 2வது இடமும் பெற்றன.

    புவனேஸ்வர்:

    15-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெற்ற குரூப் ஏ லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணி வீரர்களும்  ஆக்ரோஷமாக முன்னேறினர். 

    முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தனர். இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 4 கோல்கள் அடித்தன.  எனவே,  5-5 என போட்டி டிராவில் முடிந்தது.

    இந்த போட்டி முடிவில் குரூப் ஏ பிரிவில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் அடிப்படையில் குரூப் ஏவில் ஆஸ்திரேலியா முதல் இடமும், அர்ஜெண்டினா 2வது இடமும், பிரான்ஸ் 3வது இடமும், தென் ஆப்பிரிக்கா 4வது இடமும் பெற்றன.

    • லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 7 புள்ளிகளுடன் சமநிலை பெற்றிருந்தன.
    • காலிறுதியை உறுதி செய்வதற்கான இந்த கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்திய அணி தனது (டி பிரிவு) கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஷாம்சர் சிங் 21வது நிமிடத்திலும், ஆகாஷ்தீப் சிங் 32வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதற்கு பதிலடி கொடுத்த வேல்ஸ் அணி 42 மற்றும் 44வது நிமிடங்களில்கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக்கியது.

    அதன்பின்னர் ஆகாஷ்தீப் சிங் 45வது நிமிடத்தில் அசத்தலான பீல்டு கோல் அடிக்க, இந்தியா மீண்டும் முன்னிலை பெற்றது. 59வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்தார். இதனால் இந்தியா 4-2 என வெற்றி பெற்றது. இருப்பினும் இந்திய அணியால் டி பிரிவில் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை.

    லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 7 புள்ளிகளுடன் சமநிலை பெற்றிருந்தன. ஆனால் கோல்கள் அடிப்படையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி 2வது இடத்தை பெற்று அடுத்த சுற்றில் (கிராஸ்ஓவர் போட்டி) விளையாட உள்ளது. காலிறுதியை உறுதி செய்வதற்கான இந்த கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. 

    • கட்டாக் மகாநதியின் கரையில் 105 அடி நீளத்தில் இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • 'உலகின் மிகப்பெரிய மணல் ஹாக்கி மட்டையாக வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியா அங்கீகரித்துள்ளது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியின் துவக்க விழாவின்போது மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிரமாண்டமான ஹாக்கி மட்டை மணல் சிற்பத்தை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கட்டாக் மகாநதியின் கரையில் 105 அடி நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தை 5000 ஹாக்கி பந்துகளை கொண்டு அலங்கரித்துள்ளார்.

    இந்த நீண்ட மணல் சிற்பத்தை உலகின் மிகப்பெரிய மணல் ஹாக்கி மட்டையாக வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியா அங்கீகரித்துள்ளது.

    தனது மணல் ஹாக்கி மட்டை புதிய உலக சாதனை படைத்திருப்பது குறித்து சுதர்சன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியாவிடம் இருந்து இந்தச் சான்றிதழைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இது தனக்கு கிடைத்த கவுரவம் என்றும் கூறி உள்ளார்.

    • உலக கோப்பை ஹாக்கி போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
    • பெல்ஜியம்-ஜெர்மனி அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என சமநிலையில் முடிந்தது.

    புவனேஸ்வர்:

    15-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடக்கிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. அதன்படி இன்று நடைபெற்ற பி பிரிவு லீக் ஆட்டத்தில் தென் கொரியா - ஜப்பான் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கொரியா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    மற்றொரு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம்-ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டி 2-2 என சமநிலையில் முடிந்தது.

    • கோல்கள் அடிப்படையில் இங்கிலாந்து அணி டி பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.
    • இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை சந்திக்க உள்ளது.

    ரூர்கேலா:

    ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்தியா தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இதனால் இரு தரப்பிலும் கோல் அடிக்கும் முயற்சியை மாறி மாறி முறியடித்தனர். ஆட்டநேர இறுதி வரை கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் போட்டி கோல் இன்றி டிரா ஆனது.

    இந்த போட்டி டிரா ஆனபோதிலும், கோல்கள் அடிப்படையில் இந்தியாவை விட இங்கிலாந்து முன்னிலையில் இருப்பதால் அந்த அணி டி பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.

    இந்தியாவும், இங்கிலாந்தும் முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றன. இங்கிலாந்து அணிவேல்ஸ் அணியை 5-0 என வென்றது. இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

    இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை சந்திக்க உள்ளது. இந்த போட்டி 19ம் தேதி புவனேஸ்வரில் நடக்க உள்ளது. இங்கிலாந்து அணி, கடைசி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியுடன் மோத உள்ளது. 

    • இந்த போட்டியில் தொடக்கம் முதல் ஜெர்மனி அணி ஆதிக்கம் செலுத்தியது.
    • ஆட்ட நேர முடிவில் 3 - 0 என ஜப்பான் அணியை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி பெற்றது.

    புவனேஸ்வர்:

    15-வது உலகக் கோப்பை ஆக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நேற்று முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.

    அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், 'சி' பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, 'டி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனி - ஜப்பான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதல் ஜெர்மனி அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 3 - 0 என ஜப்பான் அணியை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி பெற்றது.

    • தினமும் 20,000 இருக்கைகள் கொண்ட மைதானங்களை ரசிகர்களால் நிரப்பக்கூடிய ஒரே நாடு இந்தியாதான்.
    • இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை-2023 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. கடந்த நான்கு சீசன்களில் மூன்றாவது முறையாக இந்தியா உலகக் கோப்பை போட்டியை நடத்துகிறது. 2010ல் டெல்லியிலும், 2018ல் ஒடிசாவின் புவனேஸ்வரிலும் போட்டியை நடத்தியது.

    இந்தியாவுக்கு இவ்வாறு தொடர்ந்து உலக கோப்பையை நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கியிருப்பது குறித்து பெல்ஜியம் ஹாக்கி வீரர் எலியட் வான் ஸ்ட்ரைடாங்க் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த அவர் கூறியதாவது:-

    கடந்த நான்கு உலக கோப்பை தொடர்களில் மூன்று தொடர்களை ஒரே நாட்டில் விளையாட விளையாட்டு அமைப்பு ஒப்புக்கொள்வது எப்படி சாத்தியம்? இந்தியா இந்த முறையும் போட்டியை நடத்துவது வருத்தமளிக்கிறது.

    ஆனால், தினமும் 20,000 இருக்கைகள் கொண்ட மைதானங்களை ரசிகர்களால் நிரப்பக்கூடிய ஒரே நாடு இந்தியாதான். பருவநிலை போட்டியை நடத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், ஹீரோ அல்லது ஒடிசா போன்ற உலகளாவிய ஸ்பான்சர்கள் உள்ளனர். போட்டியை நடத்தும் நாடு குறித்த தேர்வானது, நிதி ரீதியாக வேண்டுமானால் சரியாக இருக்கலாம், ஆனால் விளையாட்டைப் பொருத்தவரை நியாயமற்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடுகின்றன. டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 2-0 என வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    • பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் தொடக்கம் முதல் நெதர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது.
    • ஆட்ட நேர முடிவில் 4 - 0 என மலேசியா அணியை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்றது.

    புவனேஸ்வர்:

    15-வது உலகக் கோப்பை ஹாக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடக்கிறது.

    போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், 'சி' பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, 'டி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து - மலேசியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதல் நெதர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது.  ஆட்ட நேர முடிவில் 4 - 0 என மலேசியா அணியை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்றது.

    • ஸ்பெயின் அணிக்கு மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும் வீணடித்தது.
    • இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது.

    ரூர்கேலா:

    உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி இன்று தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. ரூர்கேலாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    12வது நிமிடத்தில் துணை கேப்டன் அமித் ரோகிதாசும், 26வது நிமிடத்தில் ஹர்திக் சிங்கும் கோல் அடித்து அசத்தினர். அதன்பின்னர் இரு தரப்பிலும் இறுதி வரை கோல் அடிக்கப்படவில்லை. இதனால் இந்தியா 2-0 என்ற கோல்கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இந்திய அணிக்கு ஐந்து பெனால்டி கார்னர்கள் கிடைத்த நிலையில், அதில் ஒன்றை ரோகிதாஸ் கோலாக மாற்றினார். இதேபோல் ஸ்பெயின் அணி மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றது. ஆனால் அனைத்தையும் வீணடித்தது.

    இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 5-0 என வென்றது குறிப்பிடத்தக்கது.

    ×