search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது
    X

    உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது

    • கோல்கள் அடிப்படையில் இங்கிலாந்து அணி டி பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.
    • இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை சந்திக்க உள்ளது.

    ரூர்கேலா:

    ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்தியா தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இதனால் இரு தரப்பிலும் கோல் அடிக்கும் முயற்சியை மாறி மாறி முறியடித்தனர். ஆட்டநேர இறுதி வரை கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் போட்டி கோல் இன்றி டிரா ஆனது.

    இந்த போட்டி டிரா ஆனபோதிலும், கோல்கள் அடிப்படையில் இந்தியாவை விட இங்கிலாந்து முன்னிலையில் இருப்பதால் அந்த அணி டி பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.

    இந்தியாவும், இங்கிலாந்தும் முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றன. இங்கிலாந்து அணிவேல்ஸ் அணியை 5-0 என வென்றது. இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

    இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை சந்திக்க உள்ளது. இந்த போட்டி 19ம் தேதி புவனேஸ்வரில் நடக்க உள்ளது. இங்கிலாந்து அணி, கடைசி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியுடன் மோத உள்ளது.

    Next Story
    ×