search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாக்கி உலக கோப்பை"

    • ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 3 -3 என சமனிலை வகித்தன.
    • போட்டியின் முடிவில் 5-4 (பெனால்டி ஷூட்) முறையில் என்ற நியூசிலாந்து வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    புவனேஸ்வர்:

    15-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் நேரடியாக கால்இறுதிக்குள் நுழைந்தன.

    ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்த அணிகள் 2-வது சுற்றில் மோதுகின்றன. இதில் இன்று நடைபெற்ற 2வது சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

    ஆரம்பம் முதல் இரு அணிகளும் கடுமையாக போராடின. இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 3- 3 என்ற கணக்கில் கோல் அடித்து சமனிலை வகித்தன.

    இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. பரபரப்பாக நடந்த ஷூட் அவுட் முறையில் நியூசிலாந்து 5-4 என்ற கணக்கில் வென்று, காலிறுதிக்கு முன்னேறியது. இந்தியா நூலிழையில் வாய்ப்பை தவறவிட்டதுடன் தொடரில் இருந்தும் வெளியேறியது.

    • லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 7 புள்ளிகளுடன் சமநிலை பெற்றிருந்தன.
    • காலிறுதியை உறுதி செய்வதற்கான இந்த கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்திய அணி தனது (டி பிரிவு) கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஷாம்சர் சிங் 21வது நிமிடத்திலும், ஆகாஷ்தீப் சிங் 32வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதற்கு பதிலடி கொடுத்த வேல்ஸ் அணி 42 மற்றும் 44வது நிமிடங்களில்கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக்கியது.

    அதன்பின்னர் ஆகாஷ்தீப் சிங் 45வது நிமிடத்தில் அசத்தலான பீல்டு கோல் அடிக்க, இந்தியா மீண்டும் முன்னிலை பெற்றது. 59வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்தார். இதனால் இந்தியா 4-2 என வெற்றி பெற்றது. இருப்பினும் இந்திய அணியால் டி பிரிவில் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை.

    லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 7 புள்ளிகளுடன் சமநிலை பெற்றிருந்தன. ஆனால் கோல்கள் அடிப்படையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி 2வது இடத்தை பெற்று அடுத்த சுற்றில் (கிராஸ்ஓவர் போட்டி) விளையாட உள்ளது. காலிறுதியை உறுதி செய்வதற்கான இந்த கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. 

    • 15-வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13 முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.
    • உலக கோப்பையை இந்தியா வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்றார் ஒடிசா முதல்வர்.

    புவனேஷ்வர்:

    15-வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெற உள்ளது.

    மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்தியா, தனது தொடக்க ஆட்டத்தில் ஜனவரி 13-ம் தேதி ஸ்பெயினைச் சந்திக்க உள்ளது.

    இந்நிலையில், ஹாக்கி உலக கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

    • நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா உள்பட 16 நாடுகள் பங்கு பெறுகிறது.
    • 15-வது உலக ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் ரூர்கேலாவில் வருகிற ஜனவரி 16-ந் தேதி தொடங்குகிறது.

    சென்னை:

    15-வது உலக ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் ரூர்கேலாவில் வருகிற ஜனவரி 16-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் இந்தியா இங்கிலாந்து ஸ்பெயின் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், பெல்ஜியம், தென் கொரியா, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா உள்பட 16 நாடுகள் பங்கு பெறுகிறது.

    ஹாக்கி விளையாட்டு போட்டி துவங்குவதையொட்டி இதில் வழங்கப்படும் உலக கோப்பையை தமிழ்நாடு ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சென்னை தலைமைச் செயலகம் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து காண்பித்து வாழ்த்து பெற்றனர்.


    அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×