search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்சாலை"

    • தொழிற்சாலையில் இருந்து இரவு நேரங்களில் நெகிழிக் கழிவுகளை எடுத்து வந்து அருகில் உள்ள ஏரிக்கு அருகில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனா்.
    • கண் ஏரிச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா், மண்ணரை பகுதியில் செயல்பட்டு வரும் நெகிழிக் கழிவுகளை எரிக்கும் தொழிற்சாலையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இது குறித்து திருப்பூா் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வாளரிடம் கவுண்டநாயக்கன்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் கவுண்டநாயக்கன்பாளையம் ரோஜா நகா், டி.மண்ணரை ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் மண்ணரையில் கழிவு பாலீத்தின் அறைக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து இரவு நேரங்களில் நெகிழிக் கழிவுகளை எடுத்து வந்து அருகில் உள்ள ஏரிக்கு அருகில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனா்.

    இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு, கண் ஏரிச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. ஆகவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்தத் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் பகுதியில் தனியார் குளுக்கோஸ் தொழிற்சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
    • இந்த பலவிதமான நோய்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் போராட்டங்களை நடத்தியும் வந்தனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் பகுதியில் தனியார் குளுக்கோஸ் தொழிற்சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலையின் கழிவுநீர் வெளியேற்றத்தால் மங்களபுரம் உள்பட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டு இருப்பதாகவும், மேலும் பலவிதமான நோய்கள் ஏற்பட்டு மக்கள்

    பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவேண்டும் என அப்பகுதி

    யைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் போராட்டங்களை நடத்தியும் வந்தனர்.

    இந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோவில் நிலம், மற்றும் புறம்போக்கு நிலங்களையும், நீர்நிலை

    களையும் ஆக்கிரமித்து இருப்ப

    தாகவும் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் நாமக்கல் கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

    இதையொட்டி நேற்று வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சேர்ந்து தனியார் தொழிற்சாலை ஆக்கிரமிப்பு செய்திருந்த அரசு புறம்போக்கு நிலத்தை

    யும், கோவில் நிலத்தையும்,

    கழிவு நீர் குழாய்களையும் கட்டப்பட்ட கட்டிடங்க ளையும் ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    • கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
    • தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறிய தால் அவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு கோபாலபுரத்தில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் சாலையில் பார்வதி ஓடை அருகே எஸ்.ராமச்சந்திர புரத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவர் தென்னை நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    இந்த கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக தொழிற்சாலையில் இருந்து தென்னை நார் கழிவுகளில் தீ பரவி அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளில் தீப்பற்றியது.

    அந்த தொழிற்சாலையில் 10-கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். தீ பரவியதை உணர்ந்த தொழிலாளிகள் அலறி அடித்து ஓடி வந்து அந்த வழியாக சென்றவர்களிடம் கூறினர். இதுகுறித்து வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு தீயணைப்புதுறையினர் தொழிற்சாலையில் பற்றிய தீயை ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வத்திராயிருப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீப்பிடிக்க தொடங்கியதும் தொழிற்சாலையில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறிய தால் அவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    • கோலியஸ் மூலிகை கிழங்கில் இருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
    • சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தெரிகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஈஸ்வரமூர்த்தி பாளையத்தைச் சேர்ந்தவர் இ.கே.பெரியசாமி. இவர் நாமகிரிப்பேட்டை ஒன்றிய பா.ம.க. செயலாளராகவும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய குழு துணை தலைவராகவும் இருந்து வருகிறார்.

    இவர் திம்ம நாயக்கன்பட்டி அருகில் கோலியஸ் மூலிகை கிழங்கில் இருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு தயாரிக்கப்படும் கிழங்கு பவுடரை பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து வருகிறார். அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இ.கே.பெரியசாமியின் தொழிற்சாலையில் கர்நாடகா மற்றும் சேலத்தை சேர்ந்த வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தெரிகிறது.

    • வேதாரண்யம் பகுதியில் உப்பை மூலமாக கொண்டு தொழிற்சாலை தொடங்க வேண்டும்.
    • கோடியக்கரையை பறவைகள் சரணாலயமாக அறிவித்து சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதியும் செய்து தர வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார்.

    வேதாரண்யம் வட்ட செயலாளர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.

    மாநில தலைவர் அன்பரசு, மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல், மாநில செயலாளர் டானியல் ஜெயசிங், நாகை மாலி எம்.எல்.ஏ மற்றும் ஒன்றிய, மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வேதாரண்யம் பகுதியில் உப்பை மூலமாக கொண்டு தொழிற்சாலை தொடங்க வேண்டும், நாகப்பட்டினம் - தஞ்சாவூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கோடியக்கரையை பறவைகள் சரணாலயமாக அறிவித்து சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதியும் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர்

    அற்புதராஜ் ரூஸ்வெல்ட் நன்றி கூறினார்.

    • 2023-ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பித்து கொள்ள வேண்டும்.
    • புதுப்பித்து கொள்ள வேண்டிய கடைசி நாள் 31.10.2022 ஆகும்.

    திருப்பூர் :

    திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வீ.புகழேந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2023-ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பித்து கொள்ள வேண்டும். புதுப்பித்து கொள்ள வேண்டிய கடைசி நாள் 31.10.2022 ஆகும். எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சாலைகள் http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று உரிய உரிமத்தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பித்து புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை கத்திவாக்கத்தை சேர்ந்த தர்மலிங்கம் வழக்கம்போல் நேற்று பணிக்கு வந்துள்ளார்.
    • தர்மலிங்கம் மீது உணவு இடைவேளையின்போது கிரேன் மோதியதாக கூறப்படுகிறது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த பாத்தபாளையம் கிராமத்தில் கட்டுமான பொருட்களுக்கு தேவையான இரும்பு ராடு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னை கத்திவாக்கத்தை சேர்ந்த தர்மலிங்கம் வழக்கம்போல் நேற்று பணிக்கு வந்துள்ளார். தர்மலிங்கம் மீது உணவு இடைவேளையின்போது கிரேன் மோதியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தர்மலிங்கம் சாவில் மர்மம் இருப்பதாக தொழிலாளர்கள் கூறினார்கள். எனவே அவரது சாவில் மர்மம் இருக்கிறதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடுகள், வர்த்தக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் மிக அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது.
    • சுகாதார சீர்கேடு ஏற்படு வதிலிருந்து நிலத்தையும், நீரையும் காப்பது நமது தலையாய கடமையாகும். இது குறித்து தற்போது மிகவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகை, பருவநிலை மாற்றம், நாகரீகத்தின் நவீன பாதிப்பு, அதிகரித்து வரும் கட்டு மானங்கள், ஏனைய காரணங்களினால் வீடுகள், வர்த்தக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் மிக அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது.

    இது மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உள் ளது. குடியிருப்பு பகுதி களில் இருந்தும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேற்றப்ப டும் கழிவுநீர் கால்வாய்களிலும், குழாய்கள் மூலம் வாய்க்கால்களிலும் கலக்கப்படுவதால் நீர் மாசடைந்து, பாசன நிலங்களும் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    விவசாய நிலம் பாதிக்கப்பட்டு உற்பத்திலும், உணவிலும் நச்சு கலக்கும் அபாயம் ஏற்படுகிறது. மனிதர்கள் குடிக்கும், குளிக்கும் நீரில் சாக்கடைநீர் கலந்து வருவதால் நோய் பாதிப்புகள் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. மேலும் பொது இடங்களில் கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் அவ்விடம் மழைக்கா லங்களில் சேறும் சகதியு மாக காட்சியளித்து கொசுக் கள் உற்பத்தியாக வழி வகுக்கிறது.

    சுகாதார சீர்கேடு ஏற்படு வதிலிருந்து நிலத்தையும், நீரையும் காப்பது நமது தலையாய கடமையாகும். இது குறித்து தற்போது மிகவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் பொருட்டு நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் ஆகிய வற்றில் இருந்து உருவாகும் கழிவுநீரினை அதனை உருவாக்குபவர்களாலேயே முறையாக கையாளும் வகையில் அக்கட்டிடங்களில் இருந்து கழிவுநீர் பொது இடத்தில் வெளியேறாமல் தடுக்க கட்டிட உரிமையா ளரால் கழிவுநீர் உறிஞ்சு குழி அமைக்கவும், மீறும் இடங்களில் நிர்வாக அலுவலர்கள் மூலம் கழிவு நீர் வெளியேறும் முகப்பினை அடைக்கவும் 01.09.2022 முதல் 09.09.2022 வரை சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

    எனவே, இதற்கு பொது மக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்கி கன்னியாகுமரி மாவட்டத்தை நன்னீரில் கழிவுநீர் கலக்காத மாவட் டமாக மாற்றிட முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.

    • 5 நபா்கள் (50 சதவிகிதம் பெண்கள்) கொண்ட உள்ள புகாா் குழு ஒன்றை அமைக்க வேண்டும்
    • பெண்கள் பாதுகாப்பு குறித்து புகாா் வரும் பட்சத்தில் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் :

    பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்து கருத்தரங்கு, பாதுகாப்பு பெட்டி அறிமுக விழா, கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்த சமூக நலத்துறை அலுவலா்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே பழங்கரையில் நடைபெற்றது.

    இதற்கு மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ். குமரி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை இயக்குநா் த.ரத்னா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்துறை இயக்குநா் வே.அமுதவல்லி, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநா் எஸ்.வளா்மதி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை கூடுதல் இயக்குநா் எஸ்.பி.காா்த்திகா ஆகியோா் தலைமை வகித்தனா்.

    நிகழ்ச்சியை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் துவக்கி வைத்தனா்.மாவட்ட கலெக்டர் வினீத், செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    பெண் தொழிலாளா்கள் அதிகமாக பணிபுரிவது திருப்பூா் மாவட்டத்தில்தான். அந்த வகையில் அனைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், நிறுவனங்களில் பாதுகாப்பு பெட்டி வைக்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் 10 பெண் தொழிலாளா்கள் பணிபுரியும் இடத்திலும் பாதுகாப்பு பெட்டி வைக்கப்படும் என்றாா்.

    அமைச்சா் பி.கீதாஜீவன் பேசியதாவது:-

    ஒவ்வொரு அரசு மற்றும் தனியாா் நிறுவனமும் அந்தந்த அலுவலகங்களில் 5 நபா்கள் (50 சதவிகிதம் பெண்கள்) கொண்ட உள்ள புகாா் குழு ஒன்றை அமைக்க வேண்டும். நிறுவனங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து புகாா் வரும் பட்சத்தில் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொழிற்சாலைகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடா்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றாா்.

    இதையடுத்து அமைச்சா்கள் புதிய திருப்பூா் நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பாதுகாப்பு பெட்டியை வழங்கி ஆய்வு மேற்கொண்டனா். இதையடுத்து சமூக நலத்துறையில் சிறந்த பணியாளா்களுக்கான விருது பெற்ற 3 நபா்களுக்கு ரூ.5ஆயிரத்துக்கான ரொக்கப் பரிசு, மாற்றுத் திறனாளிகளின் நலத் துறை சாா்பில் 18 நபா்களுக்கு ரூ.12,500 மதிப்பில் செல்போன் உள்ளிட்டவற்றை அமைச்சா்கள் வழங்கினா்.

    இதில் திருப்பா் மேயா்தினேஷ்குமாா், மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மகளிா் ஆணைய உறுப்பினா் கீதா நடராஜன், திருமுருகன்பூண்டி நகா்மன்றத் தலைவா் குமாா், மாவட்ட சமூக நலத்துறை அலுவலா்கள், ராமகிருஷ்ணன் (பனியன் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்க பொது செயலாளா்), திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் எம்.ராஜாசண்முகம், ஏ.சி.ஈஸ்வரன் (சைமா தலைவா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • உப்பளங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஜிப்சம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • இந்த ஜிப்சம் ஆஸ்பெட்டாஸ் சீட் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிப்பதால் துாத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள உப்பளங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஜிப்சம் ஆஸ்பெஸ்டாஸ் சீட் தயாரிப்பதற்காக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் கோப்பேரிமடம், நதிப்பாலம், வாலிநோக்கம், தேவிபட்டினம், சம்பை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் முதல் தர உப்பு உணவு பொருட்களின் நேரடி பயன்பாட்டிற்கும், 2-ம் தர உப்பு கருவாடு, தோல் பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

    உப்பு உற்பத்திக்கான சீதோஷ்ண நிலை நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மாறுபடுவதால் இந்த கால கட்டத்தில் உப்பள தொழிலாளர்கள் உப்பு உற்பத்தியை நிறுத்திக் கொண்டு, உப்பள பாத்திகளை வடிவமைத்தல், மறு சீரமைப்பு, பாத்திகளில் படிந்துள்ள ஜிப்சங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது வழக்கம். 2 மாதங்களுக்கு முன்பு சீரமைப்பு பணியின் போது உப்பள பாத்திகளில் வெட்டி எடுக்கப்பட்ட ஜிப்சம் தற்போது உப்பளங்களின் ஓரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஜிப்சம் ஆஸ்பெட்டாஸ் சீட் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிப்பதால் துாத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

    ×