என் மலர்

  நீங்கள் தேடியது "Ladies"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மேலப்பாட்டத்தில் கடந்த 5 மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை வழங்கவில்லை.
  • எங்கள் பகுதிக்கு 100 நாள் வேலை திட்டத்தை நிரந்தரமாக தர வேண்டும் என மனு அளித்தனர்.

  நெல்லை:

  பாளை அருகே உள்ள மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர்.

  அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

  எங்கள் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த 5 மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை வழங்கவில்லை.

  இதனால் எங்களின் வாழ்வா தாரம் பாதிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து எங்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டோம். அப்போது 30 முதல் 40 பேருக்கு மட்டுமே வேலை இருப்பதால் சுழற்சி முறையில் பணி வழங்குவதாக கூறுகிறார்கள்.

  ஆனால் சுழற்சி அடிப்படையில் கூட கடந்த 5 மாதங்களாக எங்கள் பகுதியை சேர்ந்த யாருக்கும் வேலை வழங்கப்படவில்லை.

  ஏற்கனவே எங்கள் பகுதியில் விவசாயம் பொய்த்துவிட்டதால் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு 100 நாள் வேலை திட்டத்தை நிரந்தரமாக தர வேண்டும்.

  இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
  • 70 வயதுக்கு மேல் உள்ள தம்பதிகளுக்கு பொட்டு போட்டு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.

  கவுண்டம்பாளையம்:

  கோவை உருமாண்டம்பா–ளையம் பண்ணாரியம்மன் கோவிலில் 3-வது ஆடி–வெள்ளியை முன்னிட்டு வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் காலை 10 மணியளவில்கல்யாண விநாயகர் மற்றும் பண்ணாரியம்மனுக்கு சிறப்பு அபிசேக பூஜைகள் நடைபெற்றன.

  அதற்கு பிறகு மதியம் 1 மணியளவில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், விரளி மஞ்சள், மஞ்சள் அரிசி, தாலி மஞ்சள் சரடு, வளையல், மிட்டாய், பூக்கள், துணிப்பைகள் வைத்து அணிக்கூடையில் கு–ழந்தைகள் எடுத்துச்செல்ல சிறப்பு பூஜை–கள் செய்யப்பட்டன.

  அதில் விநாயகர், வில்வ–மரம், சுற்றுப்பூஜைகள் நடைபெற்றன. அப்போது அம்மனுக்கு உகந்த கொம்பு ஊதுதல் மற்றும் மத்தளம் அடிக்கப்பட்டன. பூசாரி வாய்க்கட்டு பூட்டு போட்டு சிறப்பு வரலட்சுமி நோன்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் பிரசா–தங்கள் வழங்கப்பட்டன.

  மேலும் ஊரில் உள்ள பேரன், பேத்தி எடுத்த 70 வயதுக்கு மேல் உள்ள தம்பதிகளுக்கு பொட்டு போட்டு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.

  அதன்பிறகு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் வரலட்சுமி பூஜையின்போது, அணிக்கூடையில் கொண்டு–வரப்பட்ட எலுமிச்சை பழம் உள்ளிட்டவைகளை மஞ்சள் பையில் போட்டு வழங்கப்ட்டன. மேலும் வயதான தம்பதிகள் வந்திருந்த சுமங்கலி பெண்கள் மற்றும் அனைத்து பக்தர்களுக்கும் மஞ்சள் பச்சரிசி மற்றும் பூக்கள் தூவி ஆசீர்வாதம் செய்தனர். பக்தர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மன் அருள் பெற்றனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 5 நபா்கள் (50 சதவிகிதம் பெண்கள்) கொண்ட உள்ள புகாா் குழு ஒன்றை அமைக்க வேண்டும்
  • பெண்கள் பாதுகாப்பு குறித்து புகாா் வரும் பட்சத்தில் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

  திருப்பூர் :

  பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்து கருத்தரங்கு, பாதுகாப்பு பெட்டி அறிமுக விழா, கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்த சமூக நலத்துறை அலுவலா்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே பழங்கரையில் நடைபெற்றது.

  இதற்கு மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ். குமரி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை இயக்குநா் த.ரத்னா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்துறை இயக்குநா் வே.அமுதவல்லி, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநா் எஸ்.வளா்மதி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை கூடுதல் இயக்குநா் எஸ்.பி.காா்த்திகா ஆகியோா் தலைமை வகித்தனா்.

  நிகழ்ச்சியை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் துவக்கி வைத்தனா்.மாவட்ட கலெக்டர் வினீத், செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

  நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

  பெண் தொழிலாளா்கள் அதிகமாக பணிபுரிவது திருப்பூா் மாவட்டத்தில்தான். அந்த வகையில் அனைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், நிறுவனங்களில் பாதுகாப்பு பெட்டி வைக்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் 10 பெண் தொழிலாளா்கள் பணிபுரியும் இடத்திலும் பாதுகாப்பு பெட்டி வைக்கப்படும் என்றாா்.

  அமைச்சா் பி.கீதாஜீவன் பேசியதாவது:-

  ஒவ்வொரு அரசு மற்றும் தனியாா் நிறுவனமும் அந்தந்த அலுவலகங்களில் 5 நபா்கள் (50 சதவிகிதம் பெண்கள்) கொண்ட உள்ள புகாா் குழு ஒன்றை அமைக்க வேண்டும். நிறுவனங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து புகாா் வரும் பட்சத்தில் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொழிற்சாலைகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடா்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றாா்.

  இதையடுத்து அமைச்சா்கள் புதிய திருப்பூா் நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பாதுகாப்பு பெட்டியை வழங்கி ஆய்வு மேற்கொண்டனா். இதையடுத்து சமூக நலத்துறையில் சிறந்த பணியாளா்களுக்கான விருது பெற்ற 3 நபா்களுக்கு ரூ.5ஆயிரத்துக்கான ரொக்கப் பரிசு, மாற்றுத் திறனாளிகளின் நலத் துறை சாா்பில் 18 நபா்களுக்கு ரூ.12,500 மதிப்பில் செல்போன் உள்ளிட்டவற்றை அமைச்சா்கள் வழங்கினா்.

  இதில் திருப்பா் மேயா்தினேஷ்குமாா், மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மகளிா் ஆணைய உறுப்பினா் கீதா நடராஜன், திருமுருகன்பூண்டி நகா்மன்றத் தலைவா் குமாா், மாவட்ட சமூக நலத்துறை அலுவலா்கள், ராமகிருஷ்ணன் (பனியன் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்க பொது செயலாளா்), திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் எம்.ராஜாசண்முகம், ஏ.சி.ஈஸ்வரன் (சைமா தலைவா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள் விரும்பும் நவீன பொருட்களில் சிலவற்றை நீங்களும் பரிசளிக்கலாம். அல்லது உங்கள் மனைவி, சகோதரிக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் அன்பளிப்பாக அனுப்பலாம்.
  பரிசளிப்பது என்பது மிகவும் சிறந்த கலை. பரிசளிப்பதன் மூலம் உங்களின் அன்பை வெளிப்படுத்த முடியும். எனவே நீங்கள் விரும்புவோருக்கு பரிசளியுங்கள், அவர்களின் நன்மதிப்பை பெறுங்கள். நவீன பெண்கள் விரும்பும் நவீன பொருட்களில் சிலவற்றை நீங்களும் பரிசளிக்கலாம். அல்லது உங்கள் மனைவி, சகோதரிக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் அன்பளிப்பாக அனுப்பலாம்.

  மொபைல் சார்ஜிங் பர்ஸ்

  இன்றைய நவ நாகரிக யுகத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத பெண்களே கிடையாது. ஸ்மார்ட்போன் மற்றும் அது சார்ந்த உதிரி பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், அதேசமயம் மற்றவர்களின் பார்வைக்கும் அழகான தோற்றம் தருவது மொபைல் சார்ஜிங் பர்ஸ். ஸ்மார்ட்போன், சார்ஜிங் கேபிள் உள்ளிட்டவற்றை அழகாக வைக்க, இந்த வகை பர்ஸ் உதவும்.

  சென்சார் கண்ணாடி

  பெண்கள் அதிக நேரம் செலவழிப்பது கண்ணாடி முன்புதான். தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அவர்கள் அதிக அக்கறை செலுத்துவர். நவீன காலத்தில் பழைய கால முகம் பார்க்கும் கண்ணாடியை விட சென்சார் என்ற உணர் கருவி கொண்ட கண்ணாடி மிகவும் ஏற்றது. இத்தகைய சென்சார் கண்ணாடி பெரும்பாலான இணையதளங்களிலும் கிடைக்கிறது.

  ஆல் இன் ஒன் ஹேர் ஸ்டைலர்

  சிகை அலங்காரத்துக்கு மிகவும் ஏற்றது ஹேர் டிரையர் உள்ளிட்ட நவீன சாதனங் களாகும். அனைத்து வகை யான கூந்தல் பராமரிப்புக்கும் ஏற்ற ஹேர் ஸ்டைலரை வாங்கி பரிசளியுங்கள். இதை விரும்பாத பெண்கள் மிக மிகக் குறைவு.

  இ-ரீடர்

  வழக்கமாக ஸ்மார்ட்போன்களில் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிப்பதை விட இ-ரீடர் எனப்படும் கிண்டில் போன்ற இ-புத்தகங்கள் மிகவும் சிறந்தது. இதுவும் பெண்களுக்கு பரிசளிக்க ஏற்றது. இதை எடுத்துச் செல்வதும் எளிது. விரும்பிய நேரத்தில் படிக்க உதவியாக இருக்கும்.

  ஸ்மார்ட் வாட்ச்

  நவீன பெண்களுக்கு நவீன கைக்கடிகாரம்தான் ஸ்மார்ட்வாட்ச். மிகவும் சிக்கலான, அதிக செயல்பாடுகளைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களை விட, பெண்களுக்கு உதவும் வகையில், எளிய செயல்பாடு மூலம் சிறப்பாக இயங்கும் ஸ்மார்ட் வாட்ச்களை வாங்கி பரிசளிக்கலாம். இதையும் பெண்கள் விரும்புவர்.

  பரு நீக்கி (பிம்பிள் ஸாப்பர்)

  இளம் பெண்களுக்கு மிகவும் உபயோகமானது. சருமத்தில் ஊடுருவி பரு உண்டாக்கும் பாக்டீரியாவை அழித்துவிடும். பருவினால் உண்டாகும் தழும்புகளை மறையச் செய்யும். பரிசளிக்கும் பெண்ணின் சருமத்துக்கேற்ற ஸாப்பரை வாங்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.  யுனிவர்சல் சார்ஜர்

  நவ-நாகரிக பெண்கள் மின்னணு சாதனங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு மிகவும் ஏற்றது. ஒரே சமயத்தில் பல மின்னணு சாதனங்களை சார்ஜ் ஏற்ற உதவும் வகையிலான யுனிவர்சல் சார்ஜரையும் பெண்களுக்கு பரிசாக அளிக்கலாம். வயர்லெஸ் சாதனமாக இருப்பின் இது மிகவும் சிறந்தது. இதில் மிகவும் சிறந்த பிராண்டுள்ள, விரைவாக சார்ஜ் ஏறக்கூடியதை வாங்கி பரிசளிக்கலாம்.

  இயர் பட்

  காதில் தோடு அணிகிறார்களோ இல்லையே, இந்தக் கால நவ-நாகரிக பெண்கள் இயர்போன் அணிவதை பார்க்கலாம். இதனால் மிகவும் நவீனமாக, காதை உறுத்தாத, இனிய இசையை வழங்கக் கூடிய வெளிப்புற இசையை துண்டித்து, ஸ்மார்ட்போனிலிருந்து வரும் விரும்பிய இசையைக் கேட்க உதவும் இயர்போனை நீங்கள் பரிசளிக்கலாம்.

  மேக் அப் பிரஷ்

  பெரும்பாலும் விசேஷங்கள், வெளியூருக்கு பயணம் மேற்கொள்வோருக்கு மிகவும் உபயோகமானது. இத்தகைய பிரஷ்கள் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன. இதில் பேட்டரியில் இயங்கும் பிரஷ், நேரத்தை மிச்சப்படுத்தும். இத்தகயை பிரஷ்கள் அனைத்து ஆன்லைன் இணையதளங்களிலும் கிடைக்கிறது.

  இன்ஸ்டன்ட் கேமரா

  எவ்வளவுதான் ஸ்மார்ட்போன் வந்தாலும். புகைப்படங்களை பார்க்கும் சந்தோஷமே தனி. புகைப்படம் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை கிடையாது.அந்த வகையில் உடனடியாக பிரிண்ட் போட்டுத் தரும் கேமராவும் பரிசளிக்க சிறந்த பொருள்தான்.

  கண் மசாஜர்

  பெண்கள் தங்கள் கண்களை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவர். இத்தகையோருக்கு மிகவும் ஏற்றது கண் மசாஜர். கண்ணில் ரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்யும் இந்த மசாஜரை சிறிது நேரம் அணிந்தால் கண் புதுப் பொலிவுடன் தோற்றமளிக்கும். இதை அணிவதன் மூலம் தலைவலி போன்ற பிரச்சினையையும் தவிர்க்க முடியும். இது மன இறுக்கத்தையும் போக்க வல்லது. இதையும் பரிசளிக்கலாம்.

  பாதுகாப்பு கருவி


  பெண்கள் அழகை மேம்படுத்த மட்டுமின்றி அவர்களை பாதுகாக்க உதவும் கருவிகளுள் இதுவும் ஒன்று. தனியாக இருக்கும் சந்தர்ப்பங்கள், வெளியிடங்களுக்கு சென்று திரும்புகையில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடியது. இதில் உள்ள பாதுகாப்பு பொத்தானை அழுத்தினால் அது உடனடியாக செய்தியை பாதுகாவலருக்கு அனுப்பும். பெண்களை பாதுகாக்க நினைப்பவர்கள் அவசியம் வாங்கி பரிசளிக்க வேண்டிய சாதனங்களுள் மிகவும் முக்கியமானது இது.

  பெண்களுக்கு அழகு சேர்க்கும் சாதனங்களுடன் அவர்களை பாதுகாக்கும் கருவிகளும் வந்துள்ளன. அவற்றையும் வாங்கி அளிப்பது நீங்கள் அவர்கள் மீது வைத்துள்ள அக்கறையை வெளிப்படுத்த உதவும்.
  ×