search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • பெண்கள் பல சாதனைகளை புரிய கல்வி மிகவும் அவசியம்.
    • மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரி மற்றும் இன்னர் வீல் சங்கம் சார்பாக பெண்களை வளப்படுத்த தேசத்தை மேம்படுத்துங்கள் என்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    கல்லூரியின் முதல்வர் சிவகுருநாதன் வரவேற்றார்.

    கல்லூரி இயக்குனர் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்சி பள்ளி தாளாளர் த.விஜயசுந்தரம் பெண்களுக்கான விழிப்புணர்வு பற்றி வாழ்த்துரை வழங்கினார்.

    அப்பொழுது அவர் பேசுகையில் பெண்களின் வளம் தேசத்தை மேம்படுத்த செய்யும் என்றும், ஆணுக்கு இணையாக பெண்கள் அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கி வருவதாகவும் கூறினார்.

    விழாவில் இன்னர்வீல் சங்கம் அதிகாரி மாலதி செல்வம் தலைமை வகித்தார்.

    நேதாஜி கல்வி குழுமத்தின் தாளாளர் வெங்கட்ராஜலு, சுந்தர்ராஜ் செயலர், நிர்மலா ஆனந்த் செயல் அதிகாரி வாழ்த்துக்களை கூறினர்.

    விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக முனைவர் சுதா பொருளாதாரத் துறை பேராசிரியர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி மாணவிகளுக்கு தன்னம்பிக்கையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் பெண்கள் பல துறையில் வளர்ந்து வருகிறார்கள்.

    இன்னும் பல சாதனைகளை புரிய கல்வி மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

    பாலின பாகுபாடு இன்றி பெண்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் பெண்கள் குடும்ப வாழ்க்கையிலும் சமூகத்திலும் சிறந்து விளங்க மற்றும் வீரம் நிறைந்த பல சாதனை மிகுந்த பெண்களின் பெயர்களை எடுத்துக்காட்டாக கொண்டு பேசினார்.

    மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கப்பட்டது.

    முடிவில் பவானி பாண்டியன் நன்றி கூறினார்.

    சங்க உறுப்பினர்கள் கல்லூரியின் துணை முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×