என் மலர்

  நீங்கள் தேடியது "Varalakshmi Viratham"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
  • 70 வயதுக்கு மேல் உள்ள தம்பதிகளுக்கு பொட்டு போட்டு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.

  கவுண்டம்பாளையம்:

  கோவை உருமாண்டம்பா–ளையம் பண்ணாரியம்மன் கோவிலில் 3-வது ஆடி–வெள்ளியை முன்னிட்டு வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் காலை 10 மணியளவில்கல்யாண விநாயகர் மற்றும் பண்ணாரியம்மனுக்கு சிறப்பு அபிசேக பூஜைகள் நடைபெற்றன.

  அதற்கு பிறகு மதியம் 1 மணியளவில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், விரளி மஞ்சள், மஞ்சள் அரிசி, தாலி மஞ்சள் சரடு, வளையல், மிட்டாய், பூக்கள், துணிப்பைகள் வைத்து அணிக்கூடையில் கு–ழந்தைகள் எடுத்துச்செல்ல சிறப்பு பூஜை–கள் செய்யப்பட்டன.

  அதில் விநாயகர், வில்வ–மரம், சுற்றுப்பூஜைகள் நடைபெற்றன. அப்போது அம்மனுக்கு உகந்த கொம்பு ஊதுதல் மற்றும் மத்தளம் அடிக்கப்பட்டன. பூசாரி வாய்க்கட்டு பூட்டு போட்டு சிறப்பு வரலட்சுமி நோன்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் பிரசா–தங்கள் வழங்கப்பட்டன.

  மேலும் ஊரில் உள்ள பேரன், பேத்தி எடுத்த 70 வயதுக்கு மேல் உள்ள தம்பதிகளுக்கு பொட்டு போட்டு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.

  அதன்பிறகு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் வரலட்சுமி பூஜையின்போது, அணிக்கூடையில் கொண்டு–வரப்பட்ட எலுமிச்சை பழம் உள்ளிட்டவைகளை மஞ்சள் பையில் போட்டு வழங்கப்ட்டன. மேலும் வயதான தம்பதிகள் வந்திருந்த சுமங்கலி பெண்கள் மற்றும் அனைத்து பக்தர்களுக்கும் மஞ்சள் பச்சரிசி மற்றும் பூக்கள் தூவி ஆசீர்வாதம் செய்தனர். பக்தர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மன் அருள் பெற்றனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புற்றுக்கோவிலில் வரலட்சுமி விரத விழா சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
  • கொலு மண்டப்பத்தில் வரலட்சுமி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதணை நடைப்பெற்றது.

  கோவில்பட்டி:

  கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வரலட்சுமி விரத விழா சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

  இதனையொட்டி அதிகாலை நடை திறக்கப் பட்டு விநாயகர் முருகன் சுவாமி அம்பாள் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைப்பெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு கொலு மண்டப்பத்தில் வரலட்சுமி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு கணபதி பூஜையுடன் தொடங்கி, கும்பகலச பூஜை பிரசாத தட்டுகள் வைத்து சிறப்பு தீபாராதணை நடைப்பெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி செய்தார்.

  இவ்விழாவில் கோயில் தலைவர் ராஜபாண்டி பொருளாளர் சுப்பிரமணி நிர்வாக கமிட்டி உறுப்பி னர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 16 வகை செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் வேண்டி, இந்துக்கள் கடைப்பிடிக்கப்படக்கூடிய முக்கிய விரதமாகும்.
  • சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்க, செல்வ வளம், உடல் ஆரோக்கியம், தாலி பாக்கியம் நிலைக்க விரதத்தை கடைபிடித்தனர்.

  திருப்பூர் :

  வரலட்சுமி விரதம், வர மகாலட்சுமி நோன்பு என குறிப்பிடப்படும் இந்த விரதம் ஒவ்வொரு ஆடி மாதம் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமைகளில் 16 வகை செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் வேண்டி, இந்துக்கள் கடைப்பிடிக்கப்படக்கூடிய முக்கிய விரதமாகும். ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி பெரும்பாலும் கொண்டாடப்படும். ஆனால் இந்த 2022ல் கடைசி ஆடி வெள்ளி அன்று பௌர்ணமி திதி வந்துவிடுவதால், அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான இன்று 5-ந்தேதி (ஆடி 20) அன்று கடைப்பிடிக்கப்பட்டது.

  இதையொட்டி சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்க, செல்வ வளம், உடல் ஆரோக்கியம், தாலி பாக்கியம் நிலைக்க விரதத்தை கடைபிடித்தனர்.இந்த பூஜையின் போது மஞ்சள் கயிறு வைத்து மகாலட்சுமியிடம் பூஜித்து, அதை சுமங்கலி பெண்கள் அணிந்து கொண்டனர். நல்ல வரன் அமைய கன்னிப் பெண்கள் இந்த விரதமிருந்து பூஜையில் கலந்து கொண்டனர். வரலட்சுமி விரதத்தையொட்டி வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி தீப வழிபாடு நடத்தினர். வாசனை புகையை இல்லம் முழுவதும் நிறைத்து, கலசம் வைத்து அதை மகாலட்சுமியாக நினைத்து வணங்கினர்.கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு இவற்றை இட்டு, கலசத்தை பட்டாடையால் அலங்கரித்து, அதன் மீது மாவிலைகளை வைத்தனர். ஒரு தேங்காய் மீது மஞ்சளால் தேவியின் முகத்தை வடித்து பூஜை செய்து வழிபட்டனர். தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் ஆன லட்சுமி தேவியின் உருவச்சிலையை வைத்தும் வழிபட்டனர்.

  தீபாராதனை செய்து, மகாலட்சுமிக்கு உகந்த இனிப்பு உள்ளிட்ட நைவேத்தியம் வைத்து படைத்தனர்.பூஜைகள், மந்திரங்கள் உச்சரித்து வழிபட்டு, கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை விரதமிருந்தவர் கையில் கட்டப்பட்டது.பின்னர் படைக்கப்பட்ட நைவேத்திய பொருட்களுடன், தாம்பூலம், மஞ்சள் புடவை போன்றவற்றை சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுத்து ஆசி பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு வீடுகளில் இந்த வரலட்சுமி விரத வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.

  ×