search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரணாலயம்"

    • வெளிநாடுகள்-பல்வேறு மாநிலங்களில் இருந்து வேட்டங்குடி சரணாலயத்தில் பறவைகள் முகாமிட்டுள்ளன.
    • கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளு குடிப்பட்டி வேட்டங்குடி பறவை கள் சரணாலயம் அமைந்து உள்ளது. இந்த சரணால யத்திற்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து மார்ச் மாத இறுதிவரை சுமார் 5 மாதங்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து முக்குளிப்பான், கூழைக்கடா, பெரிய நீர்காகம், பாம்பு தாரா, குளத்துக் கொக்கு, மடையான், உண்ணிக் கொக்கு, பக்கா, செங்கால் நாரை, நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கரி நீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், மார்களியன், ஊசிவால் வாத்து, புள்ளி அழகு வாத்து, நீலச்சிறவி, பூனைப்பருந்து, வெண்மார்பூ மின் கொத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவை இனங்கள் பருவமழை காலங்களில் இச்சரணாலயத்திற்கு இன பெருக்கத்திற்காக வருகை புரிவது வழக்கமாகும்.

    தற்சமயம் இந்த ஆண்டு முதல் கட்டமாக வெளி மாநில பறவைகளான கொக்கு, நாரை, உன்னி கொக்கு, முக்குளிப்பான், குளத்து கொக்கு போன்ற பறவை இனங்களே வருகை தந்துள்ளது. இதுகுறித்து வன அலுவலர் தெரிவிக்கையில். பொதுவாக இங்கு இனப்பெருக்கத்திற்காக வருகைபுரியும் பறவை இனங்கள் உடனடியாக தங்களது சேர்க்கையில் ஈடுபடுவதில்லை. மாறாக தட்பவெப்ப சூழ்நிலை, இறைதேடல், மற்றும் தங்குமிடம் அமைத்தல் போன்றவற்றை தேர்வு செய்து அதன் பின்னரே அடைகாக்கும் நிலைக்கு செல்லும். இந்த ஆண்டு பருவமழை காலம் சற்று காலதாமதமாக தொடங்கியுள்ள காரணத்தினால் வெளி மாநில பறவைகள் மட்டும் தற்சமயம் வருகை புரிந்து அதற்கான சூழ்நிலையை தேர்வு செய்து வருகிறது. மேலும் வர இருக்கின்ற ஓரிரு வாரங்களில் வெளிநாடு களில் இருந்து வரும் பறவை இனங்களின் வருகை முழுமையாக வரக்கூடும் என்றார்.

    சிவகங்கை மாவட்டத்தி லேயே ஒரே ஒரு சரணாலயமாக இருக்கக்கூடிய இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றிலும் தற்சமயம் சீமை கருவேலை மரங்களும், நாட்டு கருவேலை மரங்களும் இருந்து வருகிறது. எனவே இவற்றை அப்புறப்படுத்தி வரும் காலகட்டங்களில் இங்கு வரும் பறவை இனங்கள் தங்களின் இரைக்காக வெகு தூரம் செல்லாமல் இருப்பதை தவிர்க்க பறவைகளுக்கு பலன் தரக்கூடிய பழ வகை மரக்கன்றுகளையும், குறுங்காடுகள், அடர்ந்த வனங்கள் போன்ற வற்றை இப்பகுதிகளில் அமைத்து ஒரு சாதக மான சூழ்நிலையை இப்பறவை இனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கூறி வருகின்றனர். கடந்த 1977 முதல் தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக இருந்து வரும் இந்த இந்த சரணாலயத்தை சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் இதனை மேம்படுத்தி அவர்களின் வருகையை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் துறை சார்ந்த அதிகாரிகள் அதற்கான பணியினை மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யாக இருந்து வரு கிறது என்பது குறிப்பி டத்தக்கது.

    • மாணவிகள் விழிப்புணர்வு பகாதைகளுடன் கோடியக்கரை பூங்காவிலிருந்து ஊர்வலமாக சரணாலயம் வந்தனர்.
    • அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரினக்காப்பாளர் அபிஷேக் தோமர், உத்தரவின்படி நாகப்பட்டினம் வனஉயிரினக் கோட்டம் வேதாரண்யம் வனச்சரகம் கோடியக்கரை சரணா லயத்தில் வனஉயிரின வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்சியாக வனசரக அலுவலர் அயூப்கான் தலைமையில் கோடியக்கரை அரசு மேல்நிலைபள்ளி மாணவ, மாணவிகள் ஆரியர்கள், வனத்துறை , பணியாளர்கள், வனவர்கள் மகாலெட்சுமி, பெரியசாமி, சதீஷ்குமார். மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர், பாலசுப்பிரமணியன் மற்றும் துணை தலைவர் குமார் ,உறுப்பினர்கள் ராமன், வீரசுந்தரம், சிவகணேசன் உள்ளியிட்டோர் கலந்துகொ ண்டனர்.

    பின்பு தம்புசாமி இல்லவளாகத்தில் மரக்கன்று நடப்பட்டன .வன உயிரின வாரா நிகழ்ச்சியினை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பகாதைகளுடன் கோடியக்கரை பூங்கா விலிருந்து ஊர் வலமாக சரணாலயம நுழைவுவாயிலை வந்த டைந்து அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பின் சரணாலய பகுதிகளை சுற்றி காண்பித்தும் வனஉயிரினங்கள், வனம், மற்றும் பறவைகள் குறித்து டாக்டர். சிவகணேசன் மாணவ- மாணவிகளுக்கு எடுத்து உரைத்தார்.

    முடிவில் வனஉயிரின வார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • சுமார் 200 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
    • பறவைகள் சிறகடித்து பறப்பது பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

    பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கபடும் கோடிக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு

    ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க இங்கு சுமார் 200 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

    தற்போது காலநிலை மாற்றுவதனாலும் ஆர்டிக் பிரதேசத்தில் நிலவும் குளிரை போக்கவும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் இறுதியில் வரவேண்டிய பறவைகள் முன்கூட்டியே ஆயிரக்க ணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது.

    தற்போது சரணால யத்திற்கு கூழைகிடா, பூநாரை, கடல் ஆலா, உள்ளான் வகை பறவைகள் ள்ளிட்ட பறவைகள் வரத் துவங்கி உள்ளது. பறவைகள் சரணாலயத்தில் கூட்டம், கூட்டமாக அமர்ந்து இரைதேடுவதையும் ,பறவைகள் சிறகு அடித்து பறப்பதையும் பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

    இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு , நெடுந்தீவு, உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம் எனவும் , படிப்படியாக பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

    • ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி தாமிரபரணி ஆற்றுக்கரை பகுதியில் பழந்தின்னி வவ்வால்கள் ஆயிரக்கணக்கில் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன.
    • இந்த வவ்வால்கள் இரவு நேரங்களில் இங்கிருந்து உணவுக்காக அருகில் இருக்கும் காடுகள், தோட்டங்கள் மற்றும் மலைப்பகுதிக்கு செல்லும்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்புகளில் பழந்தின்னி வவ்லால்களும் ஒன்றாகும். ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி தாமிரபரணி ஆற்றுக்கரை பகுதியில் பழந்தின்னி வவ்வால்கள் ஆயிரக்கணக்கில் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன.

    மேலும், சோனகன்விளை, சாத்தான்குளம் போன்ற மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இந்த வவ்வால்கள் காணப்படுகின்றன. இந்த வவ்வால்கள் உயரமான மருதமரங்களில் வசித்து வருகின்றன.

    இந்த வவ்வால்கள் அனைத்தும் பகல் முழுவதும் மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டு கிடக்கும். இரவு நேரங்களில் இங்கிருந்து உணவுக்காக அருகில் இருக்கும் காடுகள், தோட்டங்கள் மற்றும் மலைப்பகுதிக்கு செல்லும்.

    இந்த பகுதியில் உள்ள வவ்வால்கள் கூட்டமாக இரவு நேரங்களில் கடல் கடந்து இலங்கை அவுனியா காடுகளுக்கு சென்று இரைதேடி விட்டு அதிகாலையிலேயே தங்களது இருப்பிடங்களுக்கு வந்துவிடுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    பாலுட்டி இனத்தை சேர்ந்த இந்த அரிய வகை பழந்தின்னி வவ்வால்கள் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றன. தற்போது மீதமிருக்கும் பழந்தின்னி வல்லால்களும் மின் கம்பிகளில் சிக்கி பலியாகி வருகின்றன. அண்மை காலமாக இந்த பகுதியில் மின் கம்பியில் சிக்கி உயிரிழக்கும் பழந்தின்னி வவ்லால்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக மட்டும் புதுக்குடி, சாத்தான்குளம், சோனகன்விளை பகுதியில் பல வவ்வால்கள் மின் கம்பிகளில் இறந்த நிலையில் தொங்குவதை காண முடிகிறது. இது இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்களை கவலையடைய செய்துள்ளது.

    இது குறித்து சிவகளை காடுபோதல் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்று இந்த பழந்தின்னி வவ்வால்கள். சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, உயிரின பெருக்கம் போன்றவற்றில் இந்த வவ்வால்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

    அண்மை காலமாக இந்த வவ்வால்கள் மின் கம்பியில் சிக்கி அதிகமாக உயிரிழக்கின்றன. தற்போது ஆடி மாத காற்று மிகவும் வேகமாக வீசி வருவதால் இரவில் இரைதேடி சென்றுவிட்டு அதிகாலையில் திரும்பி வரும் வவ்வால்கள் மின் கம்பிகளில் சிக்கிக் கொள்கின்றன. மெல்லிய இறகுகளை கொண்டதாக இருப்பதால் வவ்வால்கள் எளிதாக மின் கம்பியில் சிக்கி கொள்கின்றன. மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை விட, இரு கம்பிகளுக்கு இடையே இறக்கை சிக்கி உயிரிழக்கும் வவ்வால்களே அதிகமாக உள்ளன.

    மேலும், இறந்த வவ்வால்கள் மின் கம்பியில் அப்படியே தொங்கிக் கொண்டிருப்பதால், அதனை காணும் மற்ற வவ்வால்களும் அந்த பகுதிக்கு வந்து உயிரை விடுகின்றன. தினமும் பல வவ்வால்கள் மின் கம்பியில் சிக்கி உயிரிழந்து தொங்குவதை ஆங்காங்கே காண முடிகிறது. இந்த அரிய வகை வவ்வால்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வவ்வால்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் பகுதியில் காணப்படும் மின் கம்பிகளில் பிவிசி குழாய்களை மாட்டிவிட வேண்டும். அதன் மூலம் வவ்வால்கள் கம்பிகளில் சிக்கி உயிரிழப்பதை தடுக்கலாம். மேலும், இறந்து தொங்கும் வவ்வால்களை உடனுக்குடன் அகற்றினால் மற்ற வவ்வால்கள் அந்த பகுதிக்கு வந்து உயிரிழப்பதை தடுக்க முடியும்.

    பழமையான மரங்கள் பல தீவிபத்தில் அழிந்து வருவதால் வவ்வால்களுக்கு இருப்பிடம் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, தீவிபத்துக்களில் மருதமரங்கள் அழிவதை தடுக்க வேண்டும். மேலும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சாம்பல் நிற அணில் சரணாலயம் அமைத்தது போல, ஸ்ரீவைகுண்டம் பகுதியை பழந்தின்னி வவ்வால்கள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • ராமநாதபுரத்தில் பிடிபட்ட அரியவகை ஆந்தைகள் சரணாலய பகுதியில் விடப்பட்டன
    • அரசு போக்குவரத்து பணிமனை பின்பகுதியில் வித்தியாசமான தோற்றத்தில் ஆந்தைகள் இருப்பது தெரியவந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை பின்பகுதியில் உள்ள பழைய கட்டிட பகுதியில் நேற்று வித்தியாசமான தோற்றத்தில் ஆந்தைகள் இருப்பது தெரியவந்தது.

    அதனை கண்ட சமூக ஆர்வலர் பாண்டி முருகன் உள்பட 4 பேர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனவர் ராஜேஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த 5 ஆந்தைகளையும் மீட்டு சென்று வனத்துறை அலுவலகத்தில் வனச்சரகர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தார். ராமநாதபுரத்தில் மீட்கப்பட்ட ஆந்தைகள் அரிய வகையை சேர்ந்தவை. அவை ஆப்பிரிக்க பகுதியில் இருந்து வந்துள்ளன. மீட்கப்பட்ட ஆந்தைகள் ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் நேற்று முழுவதும் வைத்து பாதுகாக்கப்பட்டது. இரவில் தேர்த்தாங்கல் பறவைகள் சரணாலய பகுதியில் அவைகள் பறக்கவிடப்பட்டது.

    • தேசிய பறவை மயிலுக்கு சரணாலயம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகள் எலிகளுக்காக வைக்கும் மருந்துகளை உண்ணும் மயில்கள் உயிரிழக்கின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் மயில்களுக்கு சரணாலயம் அமைக்கவேண்டும் என பா.ஜ.க, வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இது குறித்து அக்கட்சியின் விவசாய அணி மாநில திட்ட பொறுப்பாளர் அண்ணாதுரை கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதி விவசாய பூமிகளில் மயில்கள் புகுந்து விதைகளையும், தானியங்களையும் சேதப்படுத்துகின்றன.

    மயில்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. விவசாயிகள் எலிகளுக்காக வைக்கும் மருந்துகளை உண்ணும் மயில்கள் உயிரிழக்கின்றன. விஷம் வைத்தும் மயில்கள் கொல்லப்படுகின்றன.

    வாகனங்கள் மோதி உயிரிழக்கின்றன. மயில்களை கொன்று அதன் இறகுகளை விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் போதிய எண்ணிக்கையில் இல்லாததால் மயில்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மயில்களை கணக்கெடுக்கவேண்டும். தேசிய பறவை மயிலுக்கு சரணாலயம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயம் அமைய உள்ளது.
    • வனத்துறை 7.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தாலும், 5 ஆண்டுகளில் பல பிரிவுகளாக செய்ய திட்டமிட்டுள்ளது.

    திருப்பூர்

    திருப்பூர் நஞ்சராயன் குளம் நீராதாரமாக மட்டுமல்ல பறவைகள், பூச்சிகள், பட்டாம்பூச்சிகள் வசிக்கும் பல்லுயிர் சுழற்சி மண்டலமாகவும் மாறியுள்ளது. இக்குளத்தில், தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயம் அமைய உள்ளது. தற்போது சரணாலய பணி வேகமெடுத்துள்ளது. மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்பட்டு வனத்துறை வசம் குளம் முழுமையாக ஒப்படைக்கப்பட உள்ளது.

    குளத்தின் மண் கரை 2,797 அடி நீளம் அமைக்கப்பட்டுள்ளது. குளத்தில் அதிகபட்சமாக 39.50 அடி தண்ணீர் தேக்கப்படுகிறது. மொத்தம்2.53 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.தனியார் நிறுவனம் வாயிலாக குளத்தில் அமைய உள்ள கட்டமைப்பு வசதிகள் மற்றும் பறவைகள் சரணாலயம் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி நடந்து வருகிறது. வனத்துறை முழுமையான சர்வே நடத்தி முழு எல்லையை கண்டறிந்துள்ளது. குளத்தின் மொத்த பரப்பு 310 ஏக்கர்.

    திருப்பூர் கூலிபாளையம் ரோட்டின்,ரெயில்வே பாலத்துக்கு முன்பாக இடது புறம் செல்லும் மண்பாதையே, பறவைகள் சரணாலயத்தின் பிரதான பாதையாக மாறப்போகிறது. கூலிபாளையம் ரோட்டில், அலங்கார வளைவும், அங்கிருந்து அணுகுசாலையும் அமைக்கப்படுகிறது.

    அணுகுசாலை அருகிலேயே பார்க்கிங் வசதியும் அங்கிருந்து சென்றால் ரெயில்வே பாதை நெருங்கும் இடத்தில் கன்சர்வேஷன் சென்டர் அமைக்கப்படுகிறது. குழந்தைகள் விளையாட்டு பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, ஆக்சிஜன் பூங்கா அமைய உள்ளது.

    சிறு கூட்டரங்கு, கருத்தரங்கு வளாகம், வரவேற்பு அறை, டிக்கெட் கவுன்டர், மூங்கில் பூங்கா ஆகியவை அமைகின்றன. அங்கிருந்து நஞ்சராயன் நகரை ஒட்டியபடி குளக்கரையில் சென்றால் நஞ்சராயன் நகர், தென்கோடி எல்லையில் உயரமான வாட்சிங் டவர் அமைக்கப்படுகிறது. ஏறத்தாழ குளத்தின் மையப்பகுதியை நெருங்கி விடுவதால் அங்கிருந்து குளத்தின் முழு பரப்பையும் பார்க்க முடியும்.

    வனத்துறை 7.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தாலும், அப்பணிகளை 5 ஆண்டுகளில் பல பிரிவுகளாக செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட உள்ளது.

    முதல் ஆண்டில் (2022-23) ரூ.13.25 லட்சம்,2வது ஆண்டில் ரூ. 86.30 லட்சம் ,3வது ஆண்டில் ரூ. 3.60 கோடி,4வது ஆண்டில்ரூ. 1.35 கோடி, 5வது ஆண்டில், 1.54 கோடி என பிரித்து ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் பறவைகள் சரணாலயம் உருவாக 5ஆண்டுகளாகிவிடும்.

    இந்நிலையில் திருப்பூர் பசுமை ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், மாநகராட்சியுடன் கரம் கோர்த்து நமக்கு நாமே திட்டத்தில், பணிகளை 3 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, அனைத்து அமைப்பினர், தன்னார்வலர்கள், விவசாயிகள் இணைந்த ஒருங்கிணைந்த தயாரிப்பு குழு கூட்டம் விரைவில் திருப்பூரில் நடைபெற உள்ளது. தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழு இத்திட்ட பணிகளை செம்மையாக செய்திட திட்டமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • வேதாரண்யம் பகுதியில் உப்பை மூலமாக கொண்டு தொழிற்சாலை தொடங்க வேண்டும்.
    • கோடியக்கரையை பறவைகள் சரணாலயமாக அறிவித்து சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதியும் செய்து தர வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார்.

    வேதாரண்யம் வட்ட செயலாளர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.

    மாநில தலைவர் அன்பரசு, மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல், மாநில செயலாளர் டானியல் ஜெயசிங், நாகை மாலி எம்.எல்.ஏ மற்றும் ஒன்றிய, மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வேதாரண்யம் பகுதியில் உப்பை மூலமாக கொண்டு தொழிற்சாலை தொடங்க வேண்டும், நாகப்பட்டினம் - தஞ்சாவூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கோடியக்கரையை பறவைகள் சரணாலயமாக அறிவித்து சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதியும் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர்

    அற்புதராஜ் ரூஸ்வெல்ட் நன்றி கூறினார்.

    • கோழி, நாய்களை போன்று தெரு, வீதிகளை ஒட்டிய தோட்டம், சாலையோரங்களில் இரை தேடுகின்றன.
    • மயில், எலி, மான் போன்றவை விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாக மாறியுள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் மயில்களின் இனப்பெருக்கம் அதிகமாகி கொண்டே செல்வது விவசாயிகளுக்கு தீராத தலைவலியாக மாறி வருகிறது.விவசாய நிலங்களில் எங்கு நோக்கினும் மயில்களை பார்க்க கூடிய சூழல் உருவாகி விட்டது. மனிதர்கள் நெருங்கினாலே, ஓடி ஒளியும் மயில்கள் இன்று மனிதர்களின் சுவாசத்தை உணர்ந்து, அவர்களோடு நேசம் கொள்ள துவங்கியிருக்கின்றன.உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் மயில்களுக்கு தானியம் வழங்கி, மக்கள் பழக்கப்படுத்திக் கொண்டதால் வளர்ப்பு பறவையாகவே மாறி வருகின்றன.

    கோழி, நாய்களை போன்று தெரு, வீதிகளை ஒட்டிய தோட்டம், சாலையோரங்களில் இரை தேடுகின்றன.இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:-

    விவசாய நிலம், குடியிருப்பு பகுதிகளில் உள்ள பாம்புகளை மயில்கள் தங்களுக்கு உணவாக்கிக் கொள்ளும். இதன் மூலம் பாம்புகளின் இனப்பெருக்கம் கட்டுக்குள் இருக்கும். மயில்கள் இடும் முட்டைகளை, பாம்புகள் உணவாக்கிக் கொள்ளும். மயில்களை, காட்டுப்பூனை, நரி உள்ளிட்ட விலங்கினங்கள் உணவாக்கிக் கொள்ளும். இதன் மூலம் மயில்களின் இனப்பெருக்கம் கட்டுக்குள் இருக்கும்.விவசாய நிலங்களில் உள்ள எலிகளை பாம்புகள் தங்களுக்கு உணவாக்கிக்கொள்ளும். அதன் மூலம் விவசாய நிலங்களில் எலித்தொல்லை கட்டுக்குள் இருக்கும். இப்படி ஒவ்வொரு விலங்கினங்களின் உணவுச்சங்கிலியில் பிற விலங்கினங்களின் தொடர்புடையவையாக இருந்தது.ஆனால் இன்று அந்த நிலை மாறி, உணவுச்சங்கிலி அறுந்ததால் மயில், எலி, மான் போன்றவை விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாக மாறியுள்ளன. எனவே வனம் அதுசார்ந்த பகுதிகள் இல்லாத திருப்பூரின் புறநகர் பகுதிகளில் மயில்கள் சரணாலயம் போன்ற பிரத்யேக வாழ்விடங்களை உருவாக்குவது மட்டுமே தீர்வு என்றனர்.

    ×