search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்காசி"

    • கார்த்திகை மாதத்தில் சோமவாரம் பெண்களால் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    • நாகர் சிலைகளுக்கு பால், பழங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தென்காசி:

    கார்த்திகை மாதம் என்றாலே அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம். அதேபோல் கார்த்திகை மாதத்தில் சோமவாரம் பெண்களால் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த ஆண்டு சோமவாரம் இன்று காலை முதல் கடைபிடிக்கப்பட்டது.

    இதற்காக குற்றாலத்தில் அதிகாலை முதல் பெண்கள் கூட்டம் அலைமோதியது. குற்றாலநாதர் கோவில் அருகே உள்ள நாகர் சிலைகளுக்கு பால், பழங்கள் கொண்டு அபிஷேகம் செய்து பெண்கள் கற்பூரம் ஏற்றி பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து சோமவரத்தை கடைப்பிடித்தனர்.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் சுரண்டையில் தொடங்கிய பேரணி பாவூர்சத்திரம் வருகை தந்தது.
    • கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தென்காசி:

    தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17-ந் தேதி நடை பெறுகிறது. இதனையொட்டி இளை ஞரணி நிர்வாகிகள் கன்னியாகுமரியில் இருந்து சேலம் வரை 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் திட்டமிட்டு இரு சக்கர வாகன பேரணியை நடத்தி வருகின்றனர். இந்த பேரணியானது தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு வருகை தந்தது.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் சுரண்டையில் தொடங்கிய பேரணி பாவூர்சத்திரம் வருகை தந்தது.

    பேரணிக்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், கல்லூரணி ஊராட்சி தலைவர், குல சேகரப்பட்டி மதிச்செல்வன், நிர்வாகிகள் குருசிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தேசிய கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பால் இந்தியா ஸ்வச் பாரத் என்னும் தேசிய அளவிலான கையெழுத்துப் போட்டி, கட்டுரை போட்டி, வண்ணம் தீட்டுதல் போட்டி, படம் வரைதல் போட்டி மற்றும் போஸ்டர் தயாரித்தல் போன்ற பல்வேறு வகையான போட்டிகளை இந்தியா முழுவதும் நடத்தியது.

    பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் தேசிய அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

    இதில் 5-ம் வகுப்பு மாணவன் அபினவ் ஜெய் வண்ணம் தீட்டுதல் போட்டியிலும், 7-ம் வகுப்பு மாணவன் முஹம்மது சுலை மான் கையெழுத்து போட்டி யிலும் தேசிய அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மேலும் 12 பேர் கையெழுத்து போட்டியிலும், 3 பேர் வண்ணம் தீட்டுதல் போட்டியிலும், 3 பேர் கட்டுரை போட்டியிலும் பள்ளி அளவில் முதலிடம் பெற்றனர். பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை பள்ளி தாளாளர் சேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
    • மருத்துவர் அக்கினோ விமல் நவீன பாடத்திட்டமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள பழைய குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் போதகர் ஜான் கென்னடி யின் சிறப்பு பிரார்த்தனையுடன் ஆவுடையானூர் மருத்துவர் சி. தர்மராஜ் பள்ளிக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து தென்காசி கலெக்டர் ரவிச்சந்திரன் பள்ளியின் கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் கலெக்டர் ரவிச்சந்திரன், மருத்துவர்கள் அன்புமலர், மதுபாலா, ராஜேஸ்வரி, தார்ஷினி சினோலா விமல் மற்றும் பள்ளியின் செயலாளர் கிரேஸ் கஸ்தூரி பெல் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து சாரா லாசர் பிரார்த்தனை செய்தார். பள்ளியின் முதல் தளம் போதகர் ஜெப ரெத்தினம் , இரண்டாவது தளம் போதகர் கிங்ஸ்லி ஜான் ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    போதகர் ஜெயஹர் தாமஸ் பள்ளியின் கலைய ரங்கத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தை பிரார்த்தனை யுடன் தொடங்கி வைத்தார். பள்ளியின் இயக்குநர் மருத்துவர் பிராம்டன் ரெத்தின பெல் வரவேற்றார். மருத்துவர் திருவன், மருத்துவர் தர்மராஜை அறிமுகப்படுத்தி னார். ராம்ஜி, மருத்துவர் அக்கினோ விமல், ஐ.எப்.எஸ், நார்வே ராஜ்ஜியத்திற்கான இந்திய அரசு தூதுவரை அறி முகப்படுத்தினார்.

    தொடர்ந்து பேசிய மாவட்ட கலெக்டர் தென்காசி மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவதை தமது சிறப்புரையில் குறிப்பிட்டார். மருத்துவர் அக்கினோ விமல் நவீன பாடத்திட்டமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார். முக்கியப் பிரமுகர்களாக கடையநல்லூர் எம்.எல்.ஏ. கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, குற்றாலம் பேரூராட்சி தலைவர் கணேஷ் தாமோதர பாண்டியன், ஆயிரப்பேரி ஊராட்சி தலைவர் சுடலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவை பள்ளி தாளாளர் ஆர்.ஜே.வி.பெல், பள்ளி செயலாளர் கிரேஸ் கஸ்தூரி பெல், பள்ளி இயக்குநர் மருத்துவர் பிராம்டன் ரெத்தின பெல், பள்ளி அறங்காவலர் தார்ஷினி ஷினோலா, டாக்டர் பபிதா ஆகியோர் பள்ளி திறப்பு விழாவை ஒருங்கிணைத்தனர். முடிவில் பள்ளியின் தாளாளர் ஆர்.ஜே.வி. பெல் நன்றி கூறினார்.

    • துறவி கொலையில் முகமது அலி, சுடலைக்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
    • கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரன்படி கொலையாளிகள் 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசியில் தென்பழனி ஆண்டவர் கோவில் பின்புறம் உள்ள படித்துறையில் துறவி ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பான விசாரணையில் முகமது அலி மற்றும் சுடலைக்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரன்படி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், கொலையாளிகள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளை மத்திய சிறையில் அடைத்தார்.

    • சூரசம்ஹாரம் நாளை (18-ந் தேதி) கோவில் கடற்கரை பகுதியில் நடைபெறுகிறது.
    • கந்த சஷ்டி திருவிழாவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முருக பக்தர்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்வார்கள்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை அவரது அலுவலகத்தில் பழனி நாடார் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை 18-ந் தேதி (சனிக்கிழமை) கோவில் கடற்கரை பகுதியில் நடைபெறுகிறது. இந்த கந்த சஷ்டி திருவிழாவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முருக பக்தர்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்வார்கள்.

    நாளை தமிழகம் முழுவதும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட முருக பக்தர்கள் வழி பாடு செய்யமுடியாத சூழ்நிலை யில் உள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி வருகிற 25-ந் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து நாளை (சனிக்கிழமை) மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    நிகழ்ச்சியின் போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் உதய கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆடை அலங்கார அணிவகுப்பினை நடத்தினர்.
    • 6, 7-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் குழு நடனமும் அரங்கேற்றப்பட்டது.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டப்பட்டது. மாணவி ஹர்ஷிதா ஸ்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி ஆஹிலா வரவேற்று பேசினார். இதில் மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் குழுவாக இணைந்து உபயோகமற்ற காகிதங்களை மறுசுழற்சி செய்யும் விதமாக பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஆடை அலங்கார அணிவகுப்பினை நடத்தினர். மாணவி காளிபிரியா பரதநாட்டியம் ஆடினார். 6, 7-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் குழு நடனமும் அரங்கேற்றப்பட்டது.

    9-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் குழுவாக இணைந்து கிருஷ்ண பெருமான், பூமாதேவியர் நரகாசுரனை வதம் செய்த நிகழ்ச்சியை நாடகமாக நடித்து காட்டினர். சுற்றுச்சூழல் மாசு இல்லாத தீபாவளி பண்டிகை கொண்டாடும் முறையை பற்றி பிளஸ்-1 மாணவர்கள் மவுன நாடகம் நடித்து காட்டினர். முடிவில் மாணவி ஸ்ரீனிகா நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை பாரத் கல்வி குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கி அய்யாத்துரை பாண்டியன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.
    • நிகழ்ச்சியில், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சங்கரன்கோவிலில் உள்ள விண்மின் இல்லத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கி, உணவு பரிமாறி குழந்தைகளோடு இணைந்து தீபாவளியை அ.தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உற்சாகமாக கொண்டாடினார்.

    நிகழ்ச்சியில், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், குருவிகளும் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, கோவிந்தன், தேவர்குளம் கிளை செயலாளர் சண்முகசுந்தரம், களப்பாகுளம் பசும்பொன், களப்பாகுளம் கிளை செயலாளர் முருகன், எழில் நகர் கிளை செயலாளர் பாபு கதிரேசன், என்.ஜி.ஓ. காலனி கிளை செயலாளர் ராஜா, இருமன்குளம் பசும்பொன், சங்கரன்கோவில் காங்கேயன் என்ற கார்த்தி, இளைஞர் அணி பட்டு ராஜா, கார்த்திக் தங்கமுத்து, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன், ஞானசேகரன், மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • சிறப்பு கல்வி கடன் முகாம் வருகிற 18-ந் தேதி மற்றும் 28-ந் தேதி ஆய்க்குடியில் நடைபெறுகிறது.
    • முகாமில் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் உரிய ஆவணங்களுடன் பங்கு பெறலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகிற 18-ந் தேதி மற்றும் 28-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆய்க்குடி ஜே.பி.பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    அனைத்து கலை, பட்டய பொறியியல், மருத்துவம் உள்பட அரசு அங்கீகாரம் பெற்ற 3 ஆண்டிற்கு மேற் பட்ட அனைத்து கல்லூரி படிப்பிற்கான கல்வி கடனை எதிர்நோக்கி காத்தி ருக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், வாக்கா ளர் அடையாள அட்டை நகல், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 3, பான்கார்டு நகல், 10,11,12-ம் வகுப்பு மற்றும் தற்போது படித்துக் கொண்டு இருக்கும் மதிப்பெண் சான்றிதழ் நகல், சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம்.

    மேலும் பள்ளி மாற்று சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று நகல், சாதி சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், கல்லூரி கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட (கவுன்சிலிங் சான்று) சேர்க்கைக்கான ஆவண நகல் கல்லூரி சேர்க்கை கடித நகல், கல்லூரி கட்டண விபரங்களுக்கான சான்று நகல் கல்லூரியின் அப்ரூவல் சான்று நகல் மற்றும் கல்வி கடன் பெறும் வங்கியின் பெயர், வங்கி கணக்கு எண், பாஸ்புக் நகலுடன் முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்து பயன் பெறலாம்.

    தென்காசி மாவட்ட அனைத்து வங்கி ஒருங்கி ணைப்பாளர்களும் தங்கள் கிளைகளில் பரிசீல னையில் உள்ள கல்வி கடன் விண்ணப்பத்தினையும் மற்றும் 28-ந் தேதி வரை நடைபெறும் கல்வி கடன் முகாமில் பெறப்படும் அனைத்து கல்வி கடன் விண்ணப்பத்தினையும் பரிசீலனை செய்து தென்காசி மாவட்ட கல்வி கடன் இலக்கினை அடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயிற்சியாளர் ராஜகோபாலின் பணி சிறக்க போட்டி தேர்வர்கள் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் நூலகர்கள், தேர்வர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    மாவட்டமைய நூலகமாக தரம் உயர்ந்துள்ள தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக ஆங்கில புலமை மற்றும் பொது அறிவு வகுப்புகளை போட்டி தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக நடத்தி வரும் பணி நிறைவு செய்த இ.எஸ்.ஐ. மேலாளர் ராஜகோபால் 203 - வது வகுப்பினை நிறைவு செய்தார். பொது நல எண்ணத்துடன் பட்டதாரிகள் போட்டித்தேர்வை எதிர் கொள்ளும் வகையில் தயார்படுத்தி வரும் பயிற்சியாளர் பணி சிறக்க பொது நூலகத்துறை மற்றும் போட்டி தேர்வர்கள் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் சங்கரன், நூலகர்கள் பிரம நாயகம், சுந்தர், பாலசுப்பிர மணியன், நூலக பணியாளர்கள், கூட்டுறவு சிக்கன நாணய சங்க முன்னாள் தலைவர் கருப்பசாமி, தென்காசி மாவட்ட நூலக அலுவலக இளநிலை உதவியாளர் வினோத் மற்றும் போட்டித்தேர்விற்கு பயின்று வரும் தேர்வர்கள் பலர் கலந்து கொண்டு பயிற்சியாளரை பாராட்டினர்.

    • குற்றாலத்தில் குடோனில் வைத்து இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
    • ஆய்வின்போது கெட்டுப்போன, செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தென்காசி:

    தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் இனிப்புகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் தென்காசி அருகே பிரானூர் பார்டர் மற்றும் குற்றாலத்தில் குடோனில் வைத்து இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனை தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் நாக சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கு கெட்டுப்போன மற்றும் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட இனிப்புகள் 26 கிலோ, சவ்வரிசி 25 கிலோ, கெட்டுப்போன உளுந்து 3 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 250 கிராம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கு வைத்தே கிருமி நாசினி ஊற்றி அழிக்கப்பட்டது. மீண்டும் பயன்படுத்திய 15 லிட்டர் சமையல் எண்ணையும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

    ×