search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய கட்டிடம் திறப்பு விழா"

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
    • மருத்துவர் அக்கினோ விமல் நவீன பாடத்திட்டமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள பழைய குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் போதகர் ஜான் கென்னடி யின் சிறப்பு பிரார்த்தனையுடன் ஆவுடையானூர் மருத்துவர் சி. தர்மராஜ் பள்ளிக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து தென்காசி கலெக்டர் ரவிச்சந்திரன் பள்ளியின் கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் கலெக்டர் ரவிச்சந்திரன், மருத்துவர்கள் அன்புமலர், மதுபாலா, ராஜேஸ்வரி, தார்ஷினி சினோலா விமல் மற்றும் பள்ளியின் செயலாளர் கிரேஸ் கஸ்தூரி பெல் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து சாரா லாசர் பிரார்த்தனை செய்தார். பள்ளியின் முதல் தளம் போதகர் ஜெப ரெத்தினம் , இரண்டாவது தளம் போதகர் கிங்ஸ்லி ஜான் ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    போதகர் ஜெயஹர் தாமஸ் பள்ளியின் கலைய ரங்கத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தை பிரார்த்தனை யுடன் தொடங்கி வைத்தார். பள்ளியின் இயக்குநர் மருத்துவர் பிராம்டன் ரெத்தின பெல் வரவேற்றார். மருத்துவர் திருவன், மருத்துவர் தர்மராஜை அறிமுகப்படுத்தி னார். ராம்ஜி, மருத்துவர் அக்கினோ விமல், ஐ.எப்.எஸ், நார்வே ராஜ்ஜியத்திற்கான இந்திய அரசு தூதுவரை அறி முகப்படுத்தினார்.

    தொடர்ந்து பேசிய மாவட்ட கலெக்டர் தென்காசி மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவதை தமது சிறப்புரையில் குறிப்பிட்டார். மருத்துவர் அக்கினோ விமல் நவீன பாடத்திட்டமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார். முக்கியப் பிரமுகர்களாக கடையநல்லூர் எம்.எல்.ஏ. கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, குற்றாலம் பேரூராட்சி தலைவர் கணேஷ் தாமோதர பாண்டியன், ஆயிரப்பேரி ஊராட்சி தலைவர் சுடலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவை பள்ளி தாளாளர் ஆர்.ஜே.வி.பெல், பள்ளி செயலாளர் கிரேஸ் கஸ்தூரி பெல், பள்ளி இயக்குநர் மருத்துவர் பிராம்டன் ரெத்தின பெல், பள்ளி அறங்காவலர் தார்ஷினி ஷினோலா, டாக்டர் பபிதா ஆகியோர் பள்ளி திறப்பு விழாவை ஒருங்கிணைத்தனர். முடிவில் பள்ளியின் தாளாளர் ஆர்.ஜே.வி. பெல் நன்றி கூறினார்.

    ×