search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி:தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்- கலெக்டரிடம், பழனிநாடார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி:தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்- கலெக்டரிடம், பழனிநாடார் எம்.எல்.ஏ. கோரிக்கை

    • சூரசம்ஹாரம் நாளை (18-ந் தேதி) கோவில் கடற்கரை பகுதியில் நடைபெறுகிறது.
    • கந்த சஷ்டி திருவிழாவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முருக பக்தர்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்வார்கள்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை அவரது அலுவலகத்தில் பழனி நாடார் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை 18-ந் தேதி (சனிக்கிழமை) கோவில் கடற்கரை பகுதியில் நடைபெறுகிறது. இந்த கந்த சஷ்டி திருவிழாவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முருக பக்தர்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்வார்கள்.

    நாளை தமிழகம் முழுவதும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட முருக பக்தர்கள் வழி பாடு செய்யமுடியாத சூழ்நிலை யில் உள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி வருகிற 25-ந் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து நாளை (சனிக்கிழமை) மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    நிகழ்ச்சியின் போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் உதய கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×