search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணி"

    • நியாயமான முறையில் தரமான சேலை நெய்யும் பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
    • ஆன்லைன் மூலம் நடக்கும் விற்பனைகளுக்கு வரைமுறை ஏற்படுத்திடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், இடங்கண சாலை, தாரமங்கலம், மகுடஞ்சாவடி, நகரம். ஒன்றியம் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் பல லட்சம் பேர் வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். தரமற்ற சூரத் சேலைகள் விற்பனையினாலும், வெளி மாநிலங்களில் இருந்து கள்ளச் சந்தை மூலம் சேலைகள் விற்பனைக்கு வந்ததாலும், எந்த ஒழுங்குமுறையும் இல்லாமல் ஆன்லைனில் சேலை விற்பனை செய்வதாலும், நியாயமான முறையில் தரமான சேலை நெய்யும் பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு தரமற்ற சூரத் சேலைகள் விற்பனையாவதை தடுத்து, கள்ள சந்தைகள் மூலம் விற்பனை செய்வதை தடுத்திடவும், ஆன்லைன் மூலம் நடக்கும் விற்பனைகளுக்கு வரைமுறை ஏற்படுத்திடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இப்பகுதியில் சேலை நெசவு விசைத்தறி தொழிலாளர்களுக்கு விரைவாக சங்கம் அமைத்துக் கொடுத்து. சங்கங்கள் மூலம் சேலைகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து, தரமான சேலைகளை வாங்குவதற்கு பொது மக்களிடையே விழிப்புணர்வு செய்து, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட விசைத்தறி தொழிலாளர்களுக்கு தே.மு.தி.க.வின் சார்பாக ஆதரவு குரல் என்றைக்கும் இருக்கும். அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் உடனடியாக அரசு கவனம் செலுத்தி அவர்களுடைய உழைப்பில் உருவாகும் அந்த சேலை, வேட்டி போன்ற துணிகளுக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சேலம் சூரமங்கலத்தை அடுத்த சேலத்தாம்பட்டியை சேர்ந்தவர் குமார் , மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி, இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
    • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலத்தை அடுத்த சேலத்தாம்பட்டியை சேர்ந்தவர் குமார் , மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (29), இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் குமார் கடந்த தீபாவளி பண்டிகையன்று குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். மேலும் தீபாவளிக்கு புதிய ஆடைகள் எதுவும் எடுத்து கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ரேவதி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை பார்த்த உறவினர்கள்அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சக்கரசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர், கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • கடந்த 3 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகள் படிக்கவும் முடியவில்லை.

    சேலம்:கண்ணில் கருப்பு துணி கட்டி கலெக்டர் அலுவலகம் வந்த தொழிலாளிகள்கண்ணில் கருப்பு துணி கட்டி கலெக்டர் அலுவலகம் வந்த தொழிலாளிகள்

    சேலம் மாவட்டம் ஓமலூர் சக்கரசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர், கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து ஒருவரை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனர்.

    இதையடுத்து மனு அளித்துவிட்டு வந்து நிருபர்களிடம் பெரியஅண்ணன் கூறும்போது, எனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தேன். தற்போது விவசாயம் நலிவடைந்து விட்டதால் விசைத்தறி தொழில் செய்வதற்காக எந்திரத்திற்கு ரூ.10 லட்சம் வங்கியில் கடனை பெற்றேன்.

    இதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு மின் இணைப்பு கேட்டு 17 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்திய உள்ளேன். ஆனால் இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை. இது குறித்து மின்சாரத்துறை அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்தேன்.

    பின்னர் மின்சாரத்துறை சார்பில் மின் இணைப்பு வழங்குவதற்காக அதிகாரி மற்றும் ஊழியர்கள் வருகை புரிந்தனர். அப்போது அருகில் இருந்த வசதி படைத்த மணி உள்ளிட்டோர் மின் இணைப்பு வழங்க கூடாது என தடுத்துள்ளனர். மேலும் மின்சாரத் துறை ஊழியர்களுகடகு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் மின்சார துறை அதிகாரிகள் மின் இணைப்பு வழங்காமல் சென்று விட்டனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகள் படிக்கவும் முடியவில்லை. வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றி வாழ்ந்து வருகிறோம். தற்போது கடன் பெற்ற இடத்தில் ஒரு வருடமாக வட்டி கட்ட முடியாத சூழ்நிலை உள்ளது.

    எனவே தொழில் தொடங்குவதற்கு மின் இணைப்பு அவசியம் என்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு எங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருட்டில் வாழக்கூடிய நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

    மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

    • மேயர் மகேஷ் சொந்த செலவில் வழங்கினார்
    • தூய்மை பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி தூய்மை பணியா ளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். மாநகர் நல அதிகாரி ராம்குமார் முன்னி லை வகித்தார். ஆணையர் ஆனந்த் மோகன் சிறப்புரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் தனது சொந்த செலவில் 1,286 தூய்மை பணியாளர்களுக்கு கரும்பு, சில்வர் பாத்திரம், கரண்டி, ஆண்களுக்கு வேட்டி மற்றும் சட்டை, பெண்களுக்கு சேலை ஆகியவற்றை வழ ங்கினார்.

    முன்னதாக மேயர் மகேஷ் பேசியதாவது அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேன். பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்ட உள்ளனர்.

    நாகர்கோவில் மாநகரை பொருத்தமட்டியில் தூய்மை பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாக்கடையை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.

    எனவே தூய்மை பணியா ளர்களை கவுரவப்படுத்தும் விதமாக இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாகராட்சி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை திறந்து வைக்க வருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்துள்ளோம். அவர் பிப்ரவரி 2-வது வாரத்தில் வருவதாக கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வ குமார், அக ஸ்டினா கோகில வாணி, கவுன்சிலர்கள் நவீன்குமார்,டி.ஆர். செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுமைகளும், மாற்றங்களும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக திகழ்கிறது.
    • மின் பயன்பாடு, தொழிலாளர் தேவை குறையும். அதேநேரம், துணி உற்பத்தி அதிகரிக்கும்.

    திருப்பூர்,

    திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி சங்கிலியில்மு தல் நிலையில் உள்ளது நிட்டிங். நூலை துணியாக்கி, பின்னலாடை தயாரிப்புக்கு நிட்டிங் நிறுவனங்கள் கைகொடுக்கின்றன.துவக்க காலங்களில் உள்நாட்டில் தயாரான கையால் சுற்றும் நிட்டிங் எந்திரங்களே பயன்பாட்டில் இருந்தன. காலப்போக்கில் அறிமுகமான வெளிநாட்டு எந்திரங்கள்,நிட்டிங் துறையின் நவீன மயமாக்கலுக்கு கைகொடுத்தன. துணியின் தன்மை மற்றும் தரத்தை பொறுத்தே, பின்னலாடைகளின் ஆடைகளின் தரம் முதலானவை அமைகின்றன.

    திருப்பூர் நிட்டிங் துறையினர், சர்வதேச அளவில் அறிமுகமாகும் நவீன எந்திரங்களை உடனடியாக கண்டறிந்து நிறுவி பின்னல் துணி தயாரிப்பை தொடர்ந்து மேம்படுத்திவருகின்றனர்.நிட்டிங்கில் ஏற்பட்டுவரும் புதுமைகளும், மாற்றங்களும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக திகழ்கிறது.

    தைவான், ஜெர்மனி, சீனா உள்பட பல்வேறு நாட்டு நிறுவனங்கள் தொடர் ஆராய்ச்சிகள் மூலம், அதிக உற்பத்தி திறன் மிக்க நிட்டிங் எந்திரங்களை உருவாக்கிவருகின்றன.குளிர் கால பின்னலாடை தயாரிப்புக்கு ரிப் நிட்டிங் எந்திரங்கள் கைகொடுக்கின்றன. ஜெர்மனி நாட்டு நிறுவனம் இதுவரை இல்லாதவகையில் அதிவேக இயங்கு திறன் மிகுந்த ரிப் நிட்டிங் எந்திரத்தை தயாரித்து, அறிமுகப்படுத்தியுள்ளது.

    பயன்பாட்டில் உள்ள எந்திரங்களைவிட இப்புதிய எந்திரத்தில் நாளொன்றுக்கு கூடுதலாக 250 கிலோ துணி உற்பத்தி செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து தென்னிந்திய இறக்குமதி எந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் சங்க (சிம்கா) தலைவர் விவேகானந்தன் கூறியதாவது:-

    ரிப் நிட்டிங் எந்திரத்தில் இருபுறமும் பின்னல் முடிச்சு கொண்ட துணி தயாரிக்கலாம். சாதாரண பின்னல் துணி 140 முதல் 180 ஜி.எஸ்.எம்.,ல் எடை குறைவாக இருக்கும். ரிப் நிட்டிங் எந்திரத்தில் 200 முதல் 220 ஜி.எஸ்.எம்.,ல் அதிக எடையுள்ள துணி தயாரிக்கப்படுகிறது.அந்தவகையில் இந்த எந்திரம் குளிர் கால ஆடை ரகங்கள் தயாரிப்புக்கு கைகொடுக்கிறது. திருப்பூரில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரிப் நிட்டிங் எந்திரங்கள் 25 முதல் 30 ஆர்.பி.எம்., வேகத்திலும், நாளொன்றுக்கு 300 முதல் 350 கிலோ துணி உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளன.ஜெர்மனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள அதிநவீன எந்திரம் 50 ஆர்.பி.எம்., என்கிற அதிவேக இயங்கு திறன் கொண்டது. எந்திரத்தில் நாளொன்றுக்கு 550 கிலோ துணி உற்பத்தி செய்யமுடியும்.மூன்று எந்திரத்திற்கு பதில் இந்தப் புதுவகை ரிப் நிட்டிங் எந்திரம் இரண்டை மட்டும் நிறுவினால் போதும். இதனால் நிறுவனங்களின் முதலீடு வெகுவாக குறையும். நிறுவனத்தில் இடம் மீதமாகும். மின் பயன்பாடு, தொழிலாளர் தேவை குறையும். அதேநேரம், துணி உற்பத்தி அதிகரிக்கும்.

    போட்டி நிறைந்த உலகில், செலவினங்களை குறைத்து, உற்பத்தியை அதிகரிப்பதற்கு, இத்தகைய புதிய தொழில்நுட்பங்கள் இன்றியமையாததாகின்றன.நிட்டிங் துறையில் ஏற்பட்டுவரும் தொழில்நுட்ப மாறுதல்கள், ஒட்டுமொத்த பின்னலாடை துறையையும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அழைத்துச்செல்லும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×