தீபாவளிக்கு துணி வாங்கி கொடுக்காததால் இளம்பெண் தற்கொலை

சேலம் சூரமங்கலத்தை அடுத்த சேலத்தாம்பட்டியை சேர்ந்தவர் குமார் , மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி, இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
தீபாவளிக்கு துணி வாங்கி கொடுக்காததால் இளம்பெண் தற்கொலை
Published on

சேலம்:

சேலம் சூரமங்கலத்தை அடுத்த சேலத்தாம்பட்டியை சேர்ந்தவர் குமார் , மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (29), இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் குமார் கடந்த தீபாவளி பண்டிகையன்று குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். மேலும் தீபாவளிக்கு புதிய ஆடைகள் எதுவும் எடுத்து கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ரேவதி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனை பார்த்த உறவினர்கள்அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com