search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்ட பணிகள்"

    அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று ஆய்வு

    கன்னியாகுமரி, மார்ச்.14-

    தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ. பெரிய சாமி நேற்று இரவு கார் மூலம் கன்னியா குமரி வந்தார். அங்கு வந்து அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதன் பிறகு அவர் இரவு கன்னியா குமரியில் தங்கினார். பின்னர் அமைச்சர் ஐ. பெரிய சாமி இன்று காலை கன்னியா குமரி அருகே உள்ள கோவளம் சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் தூய்மை இந்தியா திட்டம்மற்றும் 15 -வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ்சுற்றுலா பயணிகளுக்குவசதியாக நவீன கழிப்பறை கட்டும் பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன் பிறகு ஒற்றையால் விளை அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள், நண்பர்கள் நட்புறவு திட்டத்தின் கீழ் ரூ.68 லட்சத்து25 ஆயிரம் செலவில்4 வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்டும்பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு லீபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆமணக்கன்விளை அரசு தொடக்கப்பள்ளி யில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 69 ஆயிரம் செலவில் சத்துணவு திட்ட சமையலறை கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

    அதைத் தொடர்ந்து சுவாமிதோப்பு பதிசாலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 99 ஆயிரம் செலவில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அவருடன் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட திட்ட அதிகாரி பாபு, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியதி.மு.க. செயலாளர் பாபு, மாநில தி.மு.க. வர்த்தக அணி இணைசெயலாளர்தாமரை பாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலைபேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கொட்டாரம் பேரூர்தி.மு.க. செயலாளர்வைகுண்ட பெருமாள், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர். எஸ்.பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்ப ரதி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் நீல பாலகிருஷ்ணன், கோவளம் பஞ்சாயத்து தலைவர் ஸ்டெனி, லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் சாந்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • காந்தி பூங்கா சீரமைப்பு பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காரிமங்கலம், 

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பஞ்சாயத்துகளில் மத்திய மாநில அரசு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறிப்பாக பெரியாம்பட்டி முதல் நிலை பஞ்சாயத்தில் சமத்துவ புர சீரமைப்பு பணிகள், பூலாபட்டி சாலையில் சமுதாயக்கூடம் மற்றும் பூங்கா பணிகள், தொகுப்பு வீடு ஆகியவற்றையும் பைசுஅள்ளி பஞ்சாயத்தில் வேளாண்மை துறை சார்பில் நடந்த ஏரி தூர் வாரும் பணி, திண்டல் பஞ்சாயத்தில் பூந்தோட்டம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து காரிமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சியில் நடந்து வரும் எரிவாயு தகனமேடை மற்றும் காந்தி பூங்கா சீரமைப்பு பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, கலைவாணி, பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, பஞ்சாயத்து தலைவர்கள் ஜெயலட்சுமி சங்கர், உமா குப்புராஜ் செயற்பொறியாளர்கள் முருகன், அன்பழகன், செயலாளர்கள் முருகன், குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • புதுப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றியக் குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா முன்னிலை வகித்தார்.

    புதுப்பாளையம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் செலவினங்கள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் பொன்னி, பாரதிதாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராயர், உள்பட ஒன்றிய கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் தீர்மானங்களை அலுவலர் ரவி வாசித்தார்.

    • அத்தியூர் ஊராட்சியில் திட்ட பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
    • தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடைபெறுகிறது

    அகரம்சீகூர்:

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் உள்ளாட்சி நிதியிலிருந்து ரூ.55.32 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் துவக்கி வைத்தார்கள். அத்தியூர் (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளையும், அத்தியூர் ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள தார்சாலை பணிகளையும், பெண்ணகோணம் ஊராட்சியில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள தார்சாலை பணிகளையும், திருமாந்துரை ஊராட்சியில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள தார்சாலை பணிகளையும், ஊராட்சி பொது நிதியிலிருந்து அத்தியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.5.32 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தினையும், திருமாந்துரை, நோவா நகர் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும் அமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னப் பையன், செல்வகுமார் வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருதத்தூர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒகளூர் அன்பழகன், கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன், பெண்ணகோணம் ஜெயலட்சுமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பெரு கருப்பையா, பழனிவேல், ஆண்டாள் குடியரசு , மாவட்ட விவசாய தொழிலாளர் அமைப்பாளர் புகழேந்தி, அத்தியூர் கிளைச் செயலாளர் லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • சிவகங்கை மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்கப்படுவதை பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், சிங்கம்புணரி மற்றும் நெற்குப்பை ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையினை எதிர்நோக்கி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு உபகரணங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஓய்வு அறை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, திருப்பத்தூர்-காரைக்குடி ரோடு வார்டு 10ல் கைவண்டி மூலம் முதல்நிலை சேகரம் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்கப்படுவதை பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022-ம் ஆண்டின் கீழ் ரூ.195 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் தென்மாபட்டு பகுதியில், தூய்மை பாரத திட்டம் 2021-22-ம் ஆண்டின் கீழ் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கழிப்பிடம், புதுப்பட்டி வார்டு2-ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ம் ஆண்டின் கீழ் மருதாண்டி ஊரணியில் ரூ.53.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய நடைபாதை, தடுப்புச்சுவர் அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, பேரூராட்சித் தலைவர்கள் கோகிலாராணி (திருப்பத்தூர்), புசலான் (நெற்குப்பை), அம்பலமுத்து (சிங்கம்புணரி), உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பேரூராட்சி துணைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    • மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
    • மக்கள் பயன்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், செயல்படுத்த வேண்டிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    இதில் மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்களில் வருவாய்த்துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் முடிவுற்று மக்கள் பயன்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்க செய்ய வேண்டும். நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என பேசினார்.

    • கலெக்டர் ஆய்வு
    • குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் அம்மணாங்கோயில் ஊராட்சியில் கள்ளியூரில் ரூ.17.32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பள்ளி வகுப்பறைகள் கட்டுமான பணி, ரூ.4.55 லட்சம் மதிப்பில் கழிவறைகள் கட்டுமான பணி, நாயணத்தியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் ரூ.1.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணி, பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 மதிப்பில் கட்டப்பட்டுவரும் கட்டுமான பணி, அக்ராகரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.98 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிறுபாலம் அமைக்கும் பணி, ரூ.7.00 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி கட்டடம் அமைக்கும் பணி, 15-வது மத்திய நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.6.00 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் புதிய நீர்நிலை உருவாக்கும் (அமிர்தசர்வர்) பணி, மல்லப்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.88 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பல்வேறு வகையான மரங்களுக்கு நீர்பாசனத்திற்காக மணிவரப்பு அமைக்கும் பணி என மொத்தம் ரூ.49.10 லட்சம் மதிப்பில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளின் போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களிடம் ஊதியம் சரியாக வழங்குப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். இவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குள் காலதாமின்றி உடனடியாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் நடைபெற்று வருகின்ற பள்ளி வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுச்சுவர் ஆகிய கட்டுமான பணி, புதிய நீர்நிலை உருவாக்கும் பணி, பல்வேறு வகையான மரங்களுக்கு நீர்பாசனத்திற்க்காக மணிவரப்பு அமைக்கும் பணி ஆகிய பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், முருகேசன், உதவி பொறியாளர் சேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மங்களூர் மற்றும் நல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • மக்காத குப்பை, தண்ணீர் மற்றும் கிராம சுகாதாரம் கணினி ஒளித்திரை மூலம் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், மங்களூர் மற்றும் நல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி துறையால் மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகள் குறித்தும், திட்ட பயனாளிகளின் வீடுகளை முன்னேற்றத்திற்கு கொண்டு வர வேண்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாதிரி கிராமமான சிறுகரம்பலூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட கழிப்பறை, மக்கும் குப்பை, மக்காத குப்பை, தண்ணீர் மற்றும் கிராம சுகாதாரம் குறித்து கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு கணினி ஒளித்திரை மூலம் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. பின்னர் ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் கோரிக்கை களை மாவட்ட கலெக்டரிடம் மனுவாக அளித்தனர்.

    • கலெக்டர் நேரில் ஆய்வு
    • மழை நீர் தொட்டிகள் அமைக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

     ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை, முதுமலை, சேரங்கோடு மற்றும் நெலாக்கோட்டை ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட புத்தூர் வயல் பகுதியில் ரூ.8.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர்அம்ரித் நேரில் பார்வையிட்டார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க, மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலம் ஊட்டி, நீலகிரி குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம், ஆகிய 4 நகராட்சிப் பகுதிகளில் பொது மக்களின் தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து, அதனை விரைவாகவும், தரமாகவும், முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட புத்தூர்வயல் பகுதியில், பழங்குடியினருக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தலா ரூ.3 லட்சம் வீதம், ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் 32 பழங்குடியினர் மக்களுக்காக வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், ஸ்ரீமதுரை ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், பயனாளி ஒருவரது வீட்டின் அருகில், ரூ.281 லட்சம் மதிப்பில், 10 ஆடுகள் கொண்டு, ஆட்டுகொட்டாய் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டேன்.

    அதே ஊராட்சியில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வீடுகளையும், முதுமலை ஊராட்சியில், 15-வது நிதிமானிய குழு திட்டத்தின் கீழ், குனில் பகுதியில் ரூ.5.14 லட்சம் மதிப்பீட்டில், மழைநீர் செல்லும் (வடிகால்) கால்வாய் முடிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டேன்.

    அதனைத் தொடர்ந்து, கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சேரங்கோடு ஊராட்சி அய்யன்கொல்லி பகுதியில் ரூ.48.65 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் கிராம ஊராட்சி சந்தை அமைக்கும் பணியினையும், நெலாக்கோட்டை ஊராட்சி, அம்பலமூலாவில் பிரதான் மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.7 கோடி மதிப்பில் அம்பலமூலா முதல் கொட்டாடு வரை மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணியினையும், நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட அம்பலமூலா பகுதியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும்,

    நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வட்டக்கொல்லி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் ரூ.2.09 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பண்ணைக் குட்டையினையும் என மொத்தம் ரூ.8.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும் அவ்வாறு கட்டப்படும் வீடுகளில், மழை நீர் தொட்டிகள் அமைக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதுபோல மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலம் பல்வேறு வளர்ச்சிதிட்டப் பணிகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் மூலம் நடைபெற்று வருகிறது. பொது மக்களின் தேவைக்கு ஏற்ப 4 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 4 நகராட்சி பகுதிகளில் இது போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×