search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்களூர் மற்றும் நல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில்  ஊரக வளர்ச்சித்  துறையில் மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்   கலெக்டர் தலைமையில் நடந்தது
    X

    கலெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

    மங்களூர் மற்றும் நல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

    • மங்களூர் மற்றும் நல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • மக்காத குப்பை, தண்ணீர் மற்றும் கிராம சுகாதாரம் கணினி ஒளித்திரை மூலம் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், மங்களூர் மற்றும் நல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி துறையால் மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகள் குறித்தும், திட்ட பயனாளிகளின் வீடுகளை முன்னேற்றத்திற்கு கொண்டு வர வேண்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாதிரி கிராமமான சிறுகரம்பலூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட கழிப்பறை, மக்கும் குப்பை, மக்காத குப்பை, தண்ணீர் மற்றும் கிராம சுகாதாரம் குறித்து கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு கணினி ஒளித்திரை மூலம் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. பின்னர் ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் கோரிக்கை களை மாவட்ட கலெக்டரிடம் மனுவாக அளித்தனர்.

    Next Story
    ×