search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பூர் ஒன்றியத்தில் ரூ.55.32 லட்சத்தில்   வளர்ச்சி திட்ட பணிகள்
    X

    வேப்பூர் ஒன்றியத்தில் ரூ.55.32 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்

    • அத்தியூர் ஊராட்சியில் திட்ட பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
    • தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடைபெறுகிறது

    அகரம்சீகூர்:

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் உள்ளாட்சி நிதியிலிருந்து ரூ.55.32 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் துவக்கி வைத்தார்கள். அத்தியூர் (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளையும், அத்தியூர் ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள தார்சாலை பணிகளையும், பெண்ணகோணம் ஊராட்சியில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள தார்சாலை பணிகளையும், திருமாந்துரை ஊராட்சியில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள தார்சாலை பணிகளையும், ஊராட்சி பொது நிதியிலிருந்து அத்தியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.5.32 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தினையும், திருமாந்துரை, நோவா நகர் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும் அமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னப் பையன், செல்வகுமார் வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருதத்தூர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒகளூர் அன்பழகன், கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன், பெண்ணகோணம் ஜெயலட்சுமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பெரு கருப்பையா, பழனிவேல், ஆண்டாள் குடியரசு , மாவட்ட விவசாய தொழிலாளர் அமைப்பாளர் புகழேந்தி, அத்தியூர் கிளைச் செயலாளர் லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×