search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாசில்தார்"

    • அதிகார வரம்புக்கு மீறி செயல்பட்டதாக தாசில்தார் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • மதுரை கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரது 2-வது மகன் ஜெயபிரகாஷ். இவர் கோவையில் மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். ஜெயபிரகாஷ் நகை, பணம், சொத்துக்களை ஏமாற்றி அபகரித்ததாக, பெற்றோர் மற்றும் முதியோர் நலன் பராமரிப்பு சட்டத்தின் கீழ் புகார் மனு ஒன்றை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து இருந்தார்.

    சதாசிவம் கொடுத்த புகார் மனு தொடர்பாக மதுரை வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. இதன் மீதான விசாரணைக்கு வந்திருந்த சதாசிவத்திடம், பெற்ற மகன் மீது புகார் கொடுத்து உள்ளீர்கள். இது தவறு என்று அதிகாரி ஒருவர் அறிவுரை கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் சதாசிவம் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் கலெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது மதுரை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும், தாசில்தா ருமான செல்வராஜன் என்பவர் மேற்கண்ட செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அதிகார வரம்புக்கு மீறி செயல்பட்டதாக தாசில்தார் செல்வராஜனை தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

    • முதுகுளத்தூர் அருகே மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
    • நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் ஜெயக்குமார் வரவேற்றார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழத்தூவல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் தலைமையில், தாசில்தார் சிவகுமார் முன்னிலையில் நடந்தது. நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் ஜெயக்குமார் வரவேற்றார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் வழங்கினார். மொத்தம் 219 மனுக்கள் பெறப்பட்டன.

    இதில் 20 பேருக்கு முதியோர் உதவித்தொகையும், 4 பேருக்கு வீட்டுமனை பட்டாவும், 6 பேருக்கு பட்டா மாறுதல் மற்றும் விவசாயிகளுக்கு வேளாண்மை கருவிகளும் வழங்கப்பட்டன. கீழத்தூவல் கிராமத்தில் உள்ள ரேசன் கடையை உதவி கலெக்டர் ஆய்வு செய்தார். ரேசன் கடை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கண்டிப்பாக வேலை நாட்களில் திறந்து பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    முகாமில் முதுகுளத்தூர் ேவளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன், வழங்கல் அலுவலர் கதிரவன், மண்டல துணை தாசில்தார்கள் முருகேஷ், மீனாட்சி சுந்தரம், வருவாய் ஆய்வாளர் சேது மாணிக்கம், கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர் காத்தாயி திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருவாய்த் துறையில் நிர்வாக காரணங்களுக்காக தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தாராக சைலஜா மாற்றப்பட்டுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வருவாய்த் துறையில் நிர்வாக காரணங்களுக்காக8 தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, திருப்பூர்இந்து சமய அறநிலையத்துறைஉதவியாளர் அலுவலகதனி தாசில்தாராக இருந்தகோபாலகிருஷ்ணன், திருப்பூர் வடக்கு தாசில்தாராகவும், வடக்கு தாசில்தாராக பணியாற்றி வந்த கனகராஜ் இந்து சமய அறநிலை ய துறை உதவியாளர் அலுவலக தனிதாசில்தாராகவும், தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றி வந்த தங்கவேலு,ஊத்துக்குளி தாசில்தாராகவும், ஊத்துக்குளி தாசில்தாராக பணியாற்றி வந்த சைலஜா, தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

    இதுபோல் திருப்பூர் டாஸ்மாக் கிடங்குமேலாளராக பணியாற்றிவந்த செல்வி, மடத்துக்குளம் தாசில்தாராகவும்,மடத்துக்குளம் தாசில்தாராக பணியாற்றி வந்த சபாபதி டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், உடுமலை ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தவிவேகானந்தன் உடுமலைசமூக பாதுகாப்பு திட்டதனிதாசில்தாராகவும், உடுமலை சமூகப் பாதுகாப்புதிட்ட தனி தாசில்தாராக பணியாற்றி வந்த ஜலஜா,உடுமலை ஆர்டிஓ. வின்நேர்முக உதவியாளராகவும்பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் வினீத்உத்தரவிட்டார்.

    • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் துார் வாரும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
    • நகராட்சி ஆணையாளர் மற்றும் பல்லடம் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள வடுகபாளையம் பகுதியில் குட்டை உள்ளது .இந்தக்குட்டையை பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் துார் வாரும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

    குட்டை துார் வாரும் பணி நடந்து வரும் சூழலில் இங்குள்ள புறம்போக்கு இடத்தில் தனி நபர்களுக்கு புதிதாக வழித்தடம் தடம் விட்டு பணிகள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே குட்டையை அளவீடு செய்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வார்டு கவுன்சிலர்கள் ஈஸ்வரமூர்த்தி (காங்கிரஸ்), சசிரேகா ரமேஷ்குமார் (பா.ஜ.க,) ஆகியோர் நகராட்சி ஆணையாளர் மற்றும் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் விரைவில் அளவீடு பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் குட்டையை அளவீடு செய்து உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொங்கலுார் ஆர்.ஐ., கேத்தனூர் வி.ஏ.ஓ. ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 410 வாக்குச்சாவடிகள் உள்ளன.
    • 31.3.2023-க்குள் இந்த பணியை முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

    பல்லடம் :

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கவும், போலி வாக்காளர்களை ஒழிக்கவும் வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த 1.8.2022 முதல் தொடங்கி உள்ளது. வரும் 31.3.2023-க்குள் இந்த பணியை முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

    கடந்த ஒரு மாதமாக ஏராளமான வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து வருகின்றனர்.இதன்படி பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 410 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மற்றும் பச்சாபாளையம் அரசு நடுநிலை பள்ளி வாக்கு சாவடிகளில் நடந்த சிறப்பு முகாமை தாசில்தார் நந்த கோபால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் தாசில்தார் உள்பட 4 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
    • கடந்த 2011-ம் ஆண்டு போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்ததாக தெரிகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 334. 75 சதுர மீட்டர் நிலம் உள்ளது.

    இந்த நிலத்தை சூலக்கரையை சேர்ந்த நாராயணன், சின்னமுத்து, அருப்புக்கோட்டை மண்டல முன்னாள் துணை தாசில்தார் ரவிச்சந்திரன், சூலக்கரை முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி கணபதி சுப்புராம் ஆகியோர் கடந்த 2011-ம் ஆண்டு போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்ததாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கதிர்வேல் இது தொடர்பாக விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி நில மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் சூலக்கரை போலீசார் ஓய்வு பெற்ற துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    ×