search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிராக்டர்"

    • 8 பயனாளிகளுக்கு ரூ.44 ஆயிரத்து 640 மதிப்பில் தையல் எந்திரம் வழங்கினார்.
    • பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 112 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    நாட்டின் 75 -வது சுதந்திர தின விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மூவர்ணத்தில் பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா ஆகியோர் திறந்தவெளி ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வை–யிட்டனர். முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளை கலெக்டர் கவுரவித்தார்.

    இதையடுத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    பல்வேறு திட்ட பணியில் சிறப்பாக பணிபுரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பேரு உதவி புரிந்த 25 பேருக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். தொடர்ந்து 8 பயனாளிகளுக்கு ரூ.44 ஆயிரத்து 640 மதிப்பில் தையல் இயந்திரம் வழங்கினார். பயனாளிகள் ஐந்து பேருக்கு இரண்டு பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதியாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கினார். நெல் பயிர் விளைச்சல் போட்டியில் வென்ற நான்கு பேருக்கு ரூ.40 ஆயிரம் வழங்கி கௌரவித்தார். சமூகநல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர விரைவு உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவி தொகை, முதியோர் உதவி தொகை பெறும் 20 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. தாட்கோ மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. போர், போரை ஒத்த நடவடிக்கையில் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களுக்கான வருடாந்திர குடும்ப பராமரிப்பு மானியம் 2 பேருக்கு ரூ.75 ஆயிரம் வழங்கினார். விவசாயிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இதே போல் பல்வேறு திட்டத்தின் கீழ் பயனாளி–களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மொத்தம் 84 பயனாளிகளுக்கு ரூ.1,00,36,964 (ரூ. 1 கோடியே 36 ஆயிரத்து 964) மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இது தவிர பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 112 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    இதையடுத்து பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாட்டுப்புற பாடல், கிராமிய நடனம், நம்ம ஊரு தஞ்சாவூர் கிராமிய பாடல், பரதம் மற்றும் கிராமிய பாடல், நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மாணவ- மாணவிகளின் இந்த கலைநிகழ்ச்சியை அனைவரும் பார்த்து ரசித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்திரா, ஸ்ரீகாந்த், சரக டி.ஐ.ஜி. கயல்விழி, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், போலீசார்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாஜக சார்பில் கிணத்துக்கடவில் டிராக்டர் பேரணி,டிராக்டர் அணி வகுப்பு நடைபெற்றது.
    • டிராக்டர் 75 என்ற வடிவில் அணி வகுத்துநிறுத்தப்பட்டது.

    பொள்ளாச்சி:

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் கிணத்துக்கடவில் டிராக்டர் பேரணி,டிராக்டர் அணி வகுப்பு நடைபெற்றது. 75 டிராக்டர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றன.

    75வது சுதந்திர தினத்தை குறிக்கும் டிராக்டர் 75 என்ற வடிவில் அணி வகுத்துநிறுத்தப்பட்டது. நிகழ்ச்சியை மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம்தொடங்கி வைத்தார். மாவட்டத்தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார்.

    விவசாய அணி மாவட்டத்தலைவர் தர்மபிரகாஷ் வரவேற்றார். மாவட்ட பார்வை யாளர்மோகன்மந்தராச்சலம், நிர்வாகிகள் குமரேசன், ஆனந்த், மகேஷ், ரவி உட்பட பலர்பங்கேற்றனர்.

    • மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த 2 டிராக்டர்களில் ஒரு டிராக்டர் வாலிபர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • முத்துப்பேட்டை போலீசார் விபத்து ஏற்படுத்திய இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்து ஓட்டி வந்தவரை கைது செய்தனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த செம்படவன்காடு கிழக்கு கடற்கரை சாலையில் சிக்கன் கார்னர் உள்ளது. இதில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஹாஜா நகரை சேர்ந்த ஹபிபுல்லா மகன் பயாஸ் அகமது (வயது 22), அதிராம்பட்டினம் சின்ன நெசவுதெருவை சேர்ந்த அப்துல் காதர் மகன் ஷகீல் அகமது(18) ஆகிய இருவரும் வேலை பார்த்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்றிரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் இருவரும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது முத்துப்பேட்டை அருகே பாமணி ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே அனுமதியில்லாமல் மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த 2 டிராக்டர்கள் ஒன்றோடு ஒன்று போட்டிபோட்டுக்கு கொண்டு முன்னே சென்றபோது இதில் ஒரு டிராக்டர் வாலிபர்கள் இருவரும் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பயாஸ் அகமது, ஷகீல் அகமது ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனைக்கண்ட அப்பகுதியினர் இருவரையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை போலீசார் விபத்து ஏற்படுத்திய இரண்டு டிராக்டரையும் பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த முத்துப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியை சேர்ந்த டிரைவர் கார்த்தி(38) என்பவரை கைது செய்தனர். மற்றொரு டிரைவரை தேடி வருகின்றனர்.

    • சேலம் கருப்பூர் அருகே சிமெண்ட் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நான்கு கால் காலம் பகுதியில் ெரயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது.

    இதற்காக சேலம் கருப்பூர் பகுதியில் இருந்து ஒரு டிராக்டரில் சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிய ஒரு டிராக்டர் புறப்பட்டது. இந்த டிராக்டரை முருகேசன் (வயது 24)என்பவர் ஓட்டி சென்றார்.

    கருப்பூர் கோகுல் கிரானைட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த வேகத்தடையில் டிராக்டர் ஏரி இறங்கிய போது நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சிமெண்ட் மூடிகளுக்குள் சிக்கிய முருகேசன் பலத்த காயமடைந்தார் .அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு உயிருக்கு போராடிய நிலையில் தீவிர சிகிச்சையில் அவர் உள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர் .சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனை அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர் .சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • டிராக்டர் ஒன்று பின்னோக்கி வந்து கொண்டிருக்கும்போது குழந்தை மீது மோதியது.
    • குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் கோழிப்பண்ணை உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த அன்சாய் பசு மாட்டாரி அவரது மனைவி ஆசாரி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதில் புஞ்சா என்ற ஆண் குழந்தை உள்ளது.

    நேற்று மாலை அப்பகுதியில் டிராக்டர் ஒன்று பின்னோக்கி வந்து கொண்டிருக்கும்போது புஞ்சை மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
    • தளவாய் புரம் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது புத்தூர் கண்மாய் பகுதியில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளுவது தெரிய வ ந்தது.

    இதனை தொடர்ந்து மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மணல் அள்ளிய ஆறுமுகம், பிரவின்காந் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடமுருட்டி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
    • அதிலிருந்த ஆட்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட டிராக்டரை வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று இரவுநேர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இனாம்கிளியூர் என்ற கிராமத்தில், குடமுருட்டி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது பதிவு எண் இல்லாத ஒரு டிராக்டர் மணலுடன் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்த ஆட்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட டிராக்டரை வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தப்பி சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

    ×