search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5ஜி"

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. #Oppo



    சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் அமைந்திருக்கும் தனது ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தில் சர்வதேச சந்தை மற்றும் இந்தியாவுக்கான 5ஜி மொபைல் போன் உபகரணங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

    வியாபாரத்திற்கு ஏற்ப தற்சமயம் இருப்பதை விட இருமடங்கு புதிய ஊழியர்களை அடுத்த மூன்றாண்டுகளில் பணியமர்த்த ஒப்போ திட்டமிட்டுள்ளதாக ஒப்போ மொபைல் இந்தியா துணை தலைவர் மற்றும் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தின் தலைவர் தஸ்லீம் ஆரிஃப் தெரிவித்தார்.

    இந்திய சந்தை வளர்ந்து வருகிறது. இந்திய சந்தையில் அதிக கவனம் செலுத்துகிறோம். இந்திய நுகர்வோருக்கென பிரத்யேக புதுமைகளை அறிமுகம் செய்யவே இந்தியாவின் ஐதராபாத் நகரில் சொந்தமாக ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை துவங்கி இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.



    ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தின் மூலம் பல்வேறு புதுவித தொழில்நுட்ப சாதனங்களை அறிமுகம் செய்ய முடியும். இத்துடன் இவை இந்திய நுகர்வோரின் பிரச்சனைகளை சரிசெய்யும் விதமாகவும் இருக்கும் என அவர் ஆரிஃப் தெரிவித்தார். இந்திய சந்தைக்கான சாதனங்கள் மட்டுமின்றி சர்வதேச சந்தைக்கு தேவையான 5ஜி சார்ந்த அம்சங்களுக்கான பணிகளும் ஐதராபாத் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தில் நடைபெறுகிறது.

    இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சரி செய்யும் நோக்கில் அதிகளவு பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். மேலும் எங்களது நிறுவனம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பொருந்தும் வகையில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். இத்துடன் ஒப்போ நிறுவனம் ஸ்டார்ட்-அப் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனையை குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து துவங்க இருக்கிறது. #OnePlus #5G



    ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனைகளை துவங்க இருக்கிறது. இதற்கென ஒன்பிளஸ் நிறுவனம் குவால்காமுடன் இணைந்திருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ப்ரோடோடைப் சாதனத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்தது.

    இத்துடன் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் வெளியாகும் என அறிவித்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 5ஜி சேவை வழங்கும் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாகவும், இது 5ஜி வசதி கொண்ட சாதனங்களில் முதன்மையாதாக இருக்கும் ஒன்பிளஸ் அறிவித்திருந்தது.



    குவால்காமின் 800 சீரிஸ் ஸ்னாப்டிராகன் பிராசஸர்களை எங்களின் முதல் தலைமுறை சாதனத்தில் இருந்து தொடர்ச்சியாக வழங்கி வருகிறோம். இந்த கூட்டனியின் மூலம் உலகிற்கு மிகச்சிறப்பான 5ஜி சாதனத்தை கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறது என ஒன்பிளஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

    இதுதவிர ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில 5ஜி வசதி வழங்கப்படாது என்றும், 5ஜி சேவைக்கென புதிய சாதனம் அறிமுகமாகும் என ஒன்பிளஸ் அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களிலும் ஒன்பிளஸ் நிறுவனம் 5ஜி சேவைக்கென தனி சாதனங்களை அறிமுகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    5ஜி சேவைக்கான கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதாசாதனத்தின் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. 5ஜி சேவைக்கென தனி சாதனங்களை அறிமுகம் செய்வதன் மூலம் 5ஜி இல்லாத சாதனங்களை தற்போதைய வழக்கத்தை மாற்றாமல், குறைந்த விலையில் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய முடியும்.
    ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MWC2019 #OnePlus5G



    ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டு இயங்கும் தனது முதல் ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. 

    ஒன்பிளஸ் ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் மற்றும் குவால்காம் ஆர்.எஃப். தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருக்கிறது.



    சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவின் குவால்காம் டெக்னாலஜீஸ் அரங்கில் ஒன்பிளஸ் 5ஜி கிளவுட் கேமிங்கின் எதிர்கால செட்டிங்கை செயல்படுத்தி காண்பித்தது. இதற்கு பயனர்களிடம் ஸ்மார்ட்போன் மற்றும் கேம்பேட் மட்டும் இருந்தாலே போதுமானது. கிளவுட் பிராசசிங் மற்றும் 5ஜி செயல்பாடு மூலம் பயனர்கள் ஆன்லைனில் மிகப்பெரிய கேம்களையும் சீராக விளையாட முடியும்.

    ஸ்னாப்டிராகனின் எலைட் கேமிங் அம்சங்கள் மற்றும் ஆப்டிமைசேஷன்களை கொண்டு பயனர்கள் இதுவரை இல்லாத அளவு ஹெச்.டி. தரத்தில் கேமிங் அனுபவத்தை பெற முடியும். ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையை வழங்க ஒன்பிளஸ் பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டுள்ளது.

    லண்டனில் சீரான 5ஜி சேவையை வழங்கும் நோக்கில் இ.இ. நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது.
    ஹூவாய் நிறுவனம் உலகின் அதிவேக மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. #MWC2019 #ConnectingTheFuture



    ஹூவாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் உலகின் அதிவேக மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

    ஹூவாயின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மேட் எக்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் டூயல்-ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்தவரை ஹூவாயின் மேட் எக்ஸ் உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் அதிவேக மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. 

    ஸ்மார்ட்போனின் பின்புறம் இருக்கும் இரண்டாவது டிஸ்ப்ளேவை கொண்டு பிரைமரி கேமரா மூலம் செல்ஃபி எடுக்க முடியும். 8 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் நாட்ச் போன்ற இடையூறின்றி ஃபுல் டிஸ்ப்ளே அனுபவத்தை வழங்குகிறது. 

    மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் 6.6 இன்ச் (2480x1148 பிக்சல்) மெயின் டிஸ்ப்ளேவும், ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8-இன்ச் மெயின் டிஸ்ப்ளே (2480x2200 பிக்சல்), ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் பின்புறம் 6.4 இன்ச் (25:9. 2480x892 பிக்சல்) டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.



    ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் உலகில் முதன் முறையாக 7 என்.எம். 5ஜி மல்டி-மோட் மோடெம் வழங்கி இருக்கிறது. இத்துடன் பலோங் 5000 பிளஸ் கிரின் 980 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ஹூவாயின் நானோ மெமரி கார்டுகளை சப்போர்ட் செய்கிறது.

    ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் வெறும் 11 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. அதிவேக 5ஜி வசதியை வழங்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    இத்துடன் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 55 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை வெறும் 30 நிமிடங்களில் 85 சதவிகிதம் அளவு சார்ஜ் செய்துவிடும். இத்துடன் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் இருக்கும் பவர் பட்டனிலேயே கைரேகை சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது.



    ஹூவாய் மேட் எக்ஸ் சிறப்பம்சங்கள்:

    - மடிக்கப்பட்ட நிலையில் 6.6 இன்ச் 2480x1148 பிக்சல் மெயின் டிஸ்ப்ளே
    - திறக்கப்பட்ட நிலையில் 8.0 இன்ச் 2480x2200 பிக்சல் மெயின் டிஸ்ப்ளே 
    - மடிக்கப்பட்ட நிலையில் பின்புறம் 6.4 இன்ச் 25:9. 2480x892 பிக்சல் டிஸ்ப்ளே
    - 7 என்.எம். 5ஜி மல்டி-மோட் மோடெம்
    - பலோங் 5000 பிளஸ் கிரின் 980 பிராசஸர்
    - 8 ஜி.பி. ரேம்
    - 512 ஜி.பி. மெமரி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 55 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் வசதி
    - கைரேகை சென்சார்

    ஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை இன்டர்ஸ்டெலார் புளு என ஒற்றை நிறத்தில் கிடைக்கிறது. 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை 2229 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,79,579) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #MiMIX35G



    சியோமி நிறுவனம் Mi மிக்ஸ் 3 5ஜி, தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. முன்னதாக Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 

    சியோமியின் Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம், கூகுள் ஏ.ஆர். கோர் வசதி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், ஏ.ஐ. வாய்ஸ் அசிஸ்டன்ட், பிரத்யேக ஏ.ஐ. பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 1.4µm பிக்சல், OIS, டூயல் பிக்சல் ஆட்டோ ஃபோக்கஸ், இரண்டாவது 12 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், சாம்சங் S5K3M3+ சென்சார், 24 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX576 சென்சார், 2 எம்.பி. DOF சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி Mi மிக்ஸ் 3 சிறப்பம்சங்கள்:

    - 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:5:9 டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர் 
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, 26 எம்.எம். வைடு-ஆங்கிள் லென்ஸ், 1/2.6″ சோனி IMX363, f/1.8, 1.4µm பிக்சல், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K3M3+, 1.0 µm பிக்சல், f/2.4
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா, சூப்பர் பிக்சல், சோனி IMX576
    - 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா (DOF), OV02A10 சென்சார்
    - கைரேகை சென்சார்
    - 5ஜி சப்6, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5, வைபை, யு.எஸ்.பி. டைப்-சி
    - 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவிக் சார்ஜ் 4.0 பிளஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
    - 10W Qi வயர்லெஸ் சார்ஜிங்

    சியோமி Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனிக்ஸ் பிளாக் மற்றும் சஃபையர் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 599 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.48,260) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை மே மாதத்தில் துவங்குகிறது.
    ஒப்போ நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. #MWC2019 #5GSmartphone



    ஒப்போ நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது.  புதிய 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் கொண்டிருக்கிறது. 

    ஸ்மார்ட்போன் வெளியாகும் வரை அதன் பெயரை ரகசியமாக வைக்க ஒப்போ முடிவு செய்துள்ளது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் பார்க்க ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் ஃபைண்ட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் 5ஜி ப்ரோடோடைப் மாடல் ஒன்றையும் ஒப்போ அறிமுகம் செய்தது.

    ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 5ஜி ப்ரோடோடைப் மாடல் டெவலப்பர் வெர்ஷன் என்றும் இதில் தகவல் பரிமாற்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. 5ஜி சேவையை வழங்குவதற்கென ஒப்போ நிறுவனம் ஸ்விஸ்காம், டெல்ஸ்ட்ரா, ஆப்டஸ் மற்றும் சிங்டெல் உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டுள்ளது.



    இதுதவிர ஒப்போ 5ஜி லேண்டிங் ப்ராஜெக்ட் எனும் திட்டத்தை ஒப்போ அறிவித்திருக்கிறது. இத்துடன் மென்பொருள் டெவலப்பர்களுடன் இணைந்து 5ஜி கிளவுட் கேமிங் சேவையை வழங்கவும் ஒப்போ திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஒப்போ பிரீனோ என்ற பெயரில் ஏ.ஐ. வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை தனது சாதனங்களில் வழங்க இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போன் மட்டுமில்லாமல் வரும் நாட்களில் குவால்காம் மற்றும் எரிக்சன் நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஒப்போ அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போனுடன் 5ஜி மொபைல் கிளவுட் கேமிங் சேவையும் அறிமுகம் செய்ய ஒப்போ திட்டமிட்டுள்ளது.
    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான நுபியா தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Nubia #FoldableSmartphone



    நுபியா நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 25 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக ஸ்மார்ட்போனின் டீசர்களை வெளியிட்டு வந்த நுபியா தற்சமயம் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மற்றும் நேரம் உள்ளிட்டவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ஹூவாய் நிறுவனத்தைத் தொடர்ந்து நுபியா தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அறிமுகம் பற்ற அறிவித்திருக்கிறது. நுபியாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீனா யுனிகாம் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி இருப்பது உறுதியாகியிருக்கிறது.

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நுபியா நிறுவனம் நுபியா α என அழைக்கிறது. ஏற்கனவே 2018 ஐ.எஃப்.ஏ. விழாவில் நுபியா தனது அதிநவீன மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக நுபியா α இருக்கும் என்றும் இதில் வளைந்த OLED ஸ்கிரீன் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்திருந்தது.



    நுபியா நிறுவன தலைமை செயல் அதிகாரி நி ஃபெய் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனினை அதன் ப்ரோடோடைப் சார்ந்த வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரிவித்திருக்கிறார். மேலும் புதிய சாதனம் அன்றாட பயன்பாடுகளுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

    பார்சிலோனாவில் அடுத்த வாரம் துவங்க இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் சாம்சங், ஹூவாய், சியோமி போன்ற நிறுவனங்களும் தங்களது மடிக்கக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்ய இருக்கின்றன. அந்த வரிசையில் தற்சமயம் நுபியாவும் இணைந்திருக்கிறது.

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தவிர 5ஜி தொழில்நுட்பமும் அதிக முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமி நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவி்ல் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #Xiaomi #MWC2019
     


    சியோமி நிறுவனம் பிப்ரவரி 24 ஆம் தேதி புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான அழைப்பிதழ்களை அந்நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி பிப்ரவரி 24 ஆம் தேதி காலை 10.30 CET மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 3.00 மணி) துவங்குகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் சியோமி நிறுவனம் தனது Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என தெரிவித்திருந்தன. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் சியோமி Mi9 ஸ்மார்ட்போனினை இவ்விழாவில் காட்சிப்படுத்தலாம் என கூறப்படுகிறது.



    இம்மாத துவக்கத்தில் நடந்து முடிந்த சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சியோமி எவ்வித சாதனங்களையும் அறிமுகம் செய்யவில்லை என்பதால், சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் தனது சாதனங்களை அறிமுகம் செய்யவிருக்கிறது. பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறும் விழாவில் புதிய சாதனத்தை அறிமுகம் செய்வது பற்றி சியோமி சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    எனினும், சியோமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்த Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷனை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சியோமி தனது 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என தெரிவித்திருந்தது.



    Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த நுகர்வோர் மின்சாதன விழாவில் குவால்காம் தனது 5ஜி மோடெம் 2019 ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக சுமார் 30 சாதனங்களில் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 X 5ஜி ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் சாம்சங் 2019 ஆண்டிற்கான தனது முதற்கட்ட ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    இந்திய டெலிகாம் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்க தயாராகி வருகிறது. #RelianceJio #Jio5G



    இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்கும் முதல் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருக்கும் என தெரிகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் 5ஜி தொழில்நுட்ப வசதி கொண்ட மொபைல் போன்களுடன் 5ஜி சேவைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    5ஜி சேவைகளுடன் அதற்கான சாதனங்களை வழங்குவது பற்றிய விவாதங்களில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கென ரிலையன்ஸ் ஜியோ மற்றும் மொபைல் போன் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த ஆண்டு அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா மற்றும் சீனாவில் 5ஜி சேவைகள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவைகளை அடுத்த ஆண்டு துவக்கத்தில் வழங்கலாம் என கூறப்படுகிறது.

    5ஜி சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் ஜூலை மாதத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெலிகாம் நிறுவனங்கள் தரப்பில் உபகரணங்களை சோதனை செய்யும் பணிகளும் ஏற்கனவே நிறைவுற்றுவிட்டது. 5ஜி சேவை அறிமுகமானதும்  அவற்றுக்கான சாதனங்கள் மற்றும் மொபைல் டெலிபோன் சேவை விரிவடையும். 



    முதற்கட்டமாக 5ஜி சேவைகள் ஃபிளாக்‌ஷிப் சாதனங்களில் மட்டும் வழங்கப்படலாம் என கூறப்படும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ பட்ஜெட் விலை சாதனங்களிலும் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் போதுமான சாதனங்கள் இதுவரை வெளியாகாததால் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை தள்ளிவைக்க கோரிக்கை விடுத்தன. மத்திய அரசு சார்பில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சேவைகளுடன் புதிய தொழில்நுட்பத்தை இயக்கும் திறன் கொண்ட சாதனங்களையும் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

    இதுதவிர சியோமி நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று சாம்சங், ஹூவாய், எல்.ஜி. போன்ற நிறுவனங்களும் தங்களது 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    எல்.ஜி. நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள் மற்றும் சில சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. #MWC2019 #5G



    எல்.ஜி. நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் ஜி8 ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி வழங்கப்படாது என தகவல் வெளியானது. இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 24 ஆம் தேதி சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் வேப்பர் சேம்பர் பயன்படுத்தப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் வேப்பர் சேம்பர் ஸ்மார்ட்போன்களில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

    இந்த வேப்பர் சேம்பர் எல்.ஜி. வி40 தின்க் ஸ்மார்ட்போனின் ஹீட் பைப்-ஐ விட 2.7 மடங்கு பெரியது என்றும் இதில் இருமடங்கு அதிகளவு நீர் இருப்பதாக எல்.ஜி. தெரிவித்துள்ளது. வேப்பர் சேம்பரில் செம்பு பகுதி பெரியதாக இருப்பதால் ஸ்மார்ட்போனில் ஏற்படும் வெப்பம் அதிவேகமாக குறைக்கப்படும்.



    சேம்பரில் இருக்கும் நீர் செம்பு பகுதியில் ஏற்படும் வெப்பத்தை குறைத்து ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் பார்த்து கொள்ளும். இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இது எல்.ஜி. வி40 தின்க் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருப்பதை விட 20% அதிகம் ஆகும்.

    புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனில் 5ஜி வழங்கப்படுகிறது என்றாலும், ஸ்மார்ட்போனின் பேட்டரி அதிகளவு பயன்படுத்தப்படாது என எல்.ஜி. தெரிவித்துள்ளது. கொரியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதில் எல்.ஜி. கவனமாக இருக்கிறது.
    இசட்.டி.இ. கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் இணைந்து உலகில் முதல் முறையாக 5ஜி தொழில்நுட்பத்தில் வாய்ஸ் கால் செய்து அசத்தியுள்ளன. #5G #ZTE



    இசட்.டி.இ. கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் மேற்கொண்டதாக அறிவித்துள்ளன. இதற்கு இசட்.டி.இ. உருவாக்கிய 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்பட்டது. ஷென்சென் 5ஜி சோதனை மையத்தில் உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

    சோதனை முயற்சியில் வாய்ஸ் கால் மட்டுமின்றி வீசாட் க்ரூப் கால், ஆன்லைன் வீடியோ மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவையும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. என்.எஸ்.ஏ. மோட் மூலம் கால் செய்யப்பட்ட வணிக ரீதியிலான முதல் சோதனை மையமாக சீனா யுனிகாம் நிறுவனத்தின் ஷென்சென் சோதனை மையம் இருக்கிறது.



    சீனா யுனிகாம் நிறுவனம் 5ஜி சேவை வழங்க சோதனை செய்யும் முதல் இடமாக ஷென்செனை தேர்வு செய்தது. இந்த வட்டாரம் முழுக்க நெட்வொர்க் உபகரணங்களை கட்டமைப்பது, சிறப்பு சேவைகளை வழங்குவது, ரோமிங் மற்றும் இண்டர்கனெக்ஷன் உள்ளிட்டவற்றை பலகட்டங்களில் சீனா யுனிகாம் சோதனை செய்து வருகிறது.

    சோதனைகளில் இசட்.டி.இ. 5ஜி என்ட்-டு-என்ட் தீர்வுகளான ரேடியோ அக்சஸ் நெட்வொர்க், கோர் நெட்வொர்க், டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க் மற்றும் இன்டலிஜென்ட் டிவைஸ் உள்ளிட்டவை அடங்கும். இதுதவிர இந்த சோதனைகளில் 5ஜி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்களும் சீராக இயங்கச் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் சி.இ.எஸ். 2019 விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. #Samsung #5G



    தொழில்நுட்ப சந்தையில் மிகவும் பிரபலமான மற்றும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா (சி.இ.எஸ். 2019) இருக்கிறது. 2019 ஆண்டிற்கான சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறுகிறது.

    இவ்விழாவில் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் புதுவித சாதனங்கள் மற்றும் கான்செப்ட்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் மாடலை காட்சிக்கு வைத்திருக்கிறது. கண்ணாடி பெட்டியினுள் வயர்லெஸ் சார்ஜர் / டாக் மீது இந்த ஸ்மார்ட்போன் வைக்கப்பட்டிருக்கிறது.


    புகைப்படம் நன்றி: Business Insider

    ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனின் பவர் பட்டன், வால்யூம் ராக்கர் மற்றும் பிக்ஸ்பி பட்டன் உள்ளிட்டவை தெளிவாக காட்சியளிக்கிறது. எனினும், ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் காணப்படவில்லை. அந்த வகையில் காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் 5ஜி தொழில்நுட்பத்தின் பலன்களை செயல்படுத்தக் காட்ட பயன்படுத்தப்பட்டிருக்கலாம்,

    5ஜி தொழில்நுட்பத்தின் பயன்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை. சமீபத்தில் சாம்சங் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை அறிவித்தது. அந்த வகையில் புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன் பிப்ரவரி 20 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் பிப்ரவரி மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஒரு மாடலில் மட்டும் 5ஜி வசதி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
    ×