search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ZTE"

    • சீனாவின் ஹுவாய் மற்றும் இசட்.டி.ஈ. ஆகியவைதான் ஜெர்மனிக்கு பாகங்களை வழங்கி வருகிறது
    • பல்வேறு நாடுகள் சீனாவை சார்ந்திருப்பதை குறைத்து கொள்ள முடிவு செய்திருக்கின்றன

    மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்கு வர்த்தகத்தில் பெரும்பங்களிப்பை சீனா வழங்கி வருகிறது.

    5ஜி செல்போன் தொழில்நுட்பத்தில் ஜெர்மனிக்கு தேவைப்படும் அதி உயர்தொழில்நுட்பத்திற்கான முக்கிய பாகங்களையும் உதிரி பாகங்களையும் சீனாவின் முக்கிய நிறுவனங்களான ஹுவாய் (Huawei) மற்றும் இசட்.டி.ஈ. (ZTE) ஆகியவைதான் வழங்கி வருகிறது.

    தற்போது ஜெர்மனியின் உள்துறை அமைச்சகம், சீனாவின் தயாரிப்புகளால் தேசிய பாதுகாப்புக்கான ஆபத்துக்கள் வரக்கூடும் எனவும் அதனால் அதனை தடுக்கும் விதமாக 5ஜி தொழில்நுட்பத்தில் சீனாவின் ஹுவாய் மற்றும் இசட்.டி.ஈ., ஆகியவற்றின் தயாரிப்புகளை முற்றிலும் தங்கள் நாட்டிலிருந்தே நீக்கிவிட முடிவு செய்திருக்கிறது.

    "டீ ரிஸ்கிங்" (de-risking) எனப்படும் அபாயங்களிலிருந்து விலகி இருத்தலுக்கான இந்த முடிவின்படி ஜெர்மனியின் மென்பொருள் மற்றும் இணைய கட்டமைப்பில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த தளங்களிலிருந்தும் அந்நிறுவனங்களின் தயாரிப்புகளை நீக்க வேண்டும் என ஜெர்மனி முடிவெடுத்திருக்கிறது. மேலும், இனியும் அவற்றை இறக்குமதி செய்யவோ பயன்படுத்தவோ வேண்டாம் என உறுதியாக உள்ளது. அந்நாட்டிலேயே உள்ள சில முன்னணி அலைபேசி சேவை நிறுவனங்கள் இவற்றை எதிர்த்தாலும், அரசங்கம் இந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளது. ஜெர்மனியில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களையும் இந்த இரு நிறுவனங்களின் தயாரிப்புகளிலிருந்து விலகியிருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.

    பல்வேறு தொழில்நுட்பங்களிலும் உயர் தொழில்நுட்பங்களிலும் சீனா எனும் ஒரே நாட்டை சார்ந்திருப்பதை அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் படிப்படியாக குறைத்து கொள்ள முடிவு செய்திருப்பதை தொடர்ந்து ஜெர்மனியும் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.

    "ஜெர்மனி உண்மையிலேயே எங்கள் நாட்டு தயாரிப்புகளால் அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து உள்ளதை நிரூபிக்காமல் இத்தகைய முடிவை எடுத்தால் நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்" என இத்தகவல் வெளியானதும் சீனா காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    இந்தியாவில் கோவிட்-19 காலகட்டத்திலிருந்து உள்நாட்டு தயாரிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக எடுக்கப்படும் முடிவுகள், தற்போது சீனாவை சார்ந்திருப்பதை உலகம் குறைத்து கொள்ள முன்வரும் வேளையில், இந்திய பொருளாதாரத்திற்கு பலனளிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • ZTE நிறுவனத்தின் புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஆக்சன் 40 அல்ட்ரா மாடலை போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ZTE நிறுவனம் ஆக்சன் 40 அல்ட்ரா ஸ்பேஸ் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ZTE கடந்த மே மாத வாக்கில் அறிமுகம் செய்த ஒரிஜினல் ஆக்சன் 40 அல்ட்ரா மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதில் அதிகபட்சம் 18 ஜிபி ரேம், 1 டிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் டிசைனும் புதிதாக உள்ளது.

    ஸ்பேஸ் எடிஷன் மாடலின் டிசைன் டைம் டிராவலில் லைட் அண்ட் ஷேடோவை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பேக் கவர் செராமிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக நானோ-கேஸ்டிங் வழிமுறை பின்பற்றப்பட்டு உள்ளது. இதில் மூன்றாம் தலைமுறை அண்டர்-ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 6.8 இன்ச் AMOLED ஃபிலெக்சிபில் வளைந்த ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், டூயல் சேனல் விசி லிக்விட் கூல்டு வேப்பரைசர் உள்ளது.

    ZTE ஆக்சன் 40 அல்ட்ரா ஸ்பேஸ் எடிஷன் அம்சங்கள்:

    6.8 இன்ச் 2480x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்

    அட்ரினோ nxt-gen GPU

    12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி

    18 ஜிபி ரேம், 1 டிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் மை ஒஎஸ் 12

    டூயல் சிம் ஸ்லாட்

    64MP பிரைமரி கேமரா, OIS

    64MP அல்ட்ரா வைடு லென்ஸ்

    64MP டெலிபோட்டோ கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    16MP அண்டர் ஸ்கிரீன் கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6E, பளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ZTE ஆக்சன் 40 அல்ட்ரா ஸ்பேஸ் எடிஷன் பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை 5898 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 67 ஆயிரத்து 220 என துவங்குகிறது. இதன் 18 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மாடல் விலை 7698 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 87 ஆயிரத்து 735 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. விற்பனை சீன சந்தையில் டிசம்பர் 6 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    • ZTE நிறுவனம் இன் ஸ்கிரீன் கேமரா சென்சார் கொண்ட புதிய அக்சான் 30S ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் மற்றும் அதிகபட்சமாக 12 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

    ZTE நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த அக்சான் 30 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ZTE அக்சான் 30S மாடலில் 6.92 இன்ச் FHD+OLED 10-பிட் பேனல் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 5 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், விசி லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 16MP இன்-டிஸ்ப்ளே கேமரா சென்சார், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP 120 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார், 4200 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ZTE அக்சான் 30S அம்சங்கள்:

    6.92 இன்ச் 2460x1080 பிக்சல் FHD+ OLED 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்

    அட்ரினோ 650 GPU

    8ஜிபி LPDDR5 ரேம், 128ஜிபி UFS3.1 மெமரி

    12ஜிபி LPDDR5 ரேம், 256ஜிபி UFS3.1 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் மைஒஎஸ்12

    64MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

    8MP அல்ட்ரா வைடு லென்ஸ்

    5MP மேக்ரோ லென்ஸ்

    2MP டெப்த் சென்சார்

    16MP செல்பி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6

    ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி

    4200 எம்ஏஹெச் பேட்டரி

    55 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1698 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரத்து 310 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 2198 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 24 ஆயிரத்து 995 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை சீனாவில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. 

    சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் மீது அமெரிக்கா சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகளை அந்நிறுவனம் மறுத்திருக்கிறது. #Huawei



    சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய், அமெரிக்க அதிகாரிகள் சுமத்திய அனைத்து குற்றசாட்டுகளையும் மறுத்ததோடு எவ்வித குற்ற சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளது. 

    ஹூவாய் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மீது 23 குற்றச்சாட்டுகளை அமெரிக்க நிதித்துறை எழுப்பியது. அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்ற சம்பவங்களில் ஹூவாய் நிறுவன மூத்த நிதி அலுவலர் மெங் வான்சௌக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது. 

    ஹூவாய் நிறுவனம் வர்த்தக ரகசியங்களை திருடியதாகவும், வங்கி ஊழல், விதிமுறை மீறல் மற்றும் அமெரிக்க அரசிடம் போலி அறிக்கைகளை வழங்கியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

    அமெரிக்க குற்றச்சாட்டுகளுக்கு ஹூவாய் நிறுவனம், டுவிட்டரில் பதில் அளித்துள்ளது. அதில், "ஹூவாய் நிறுவனமோ மற்றும் அதன் துணை நிறுவனங்களோ அமெரிக்க அரசு சுட்டிக்காட்டியிருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை. மேலும் ஹூவாய் மூத்த நிதி அலுவலர் மெங் எவ்வித தவறும் செய்யவில்லை. அமெரிக்க நீதிமன்றங்களும் இதேபோன்ற முடிவை எட்டும் என நம்புகிறோம்," என தெரிவித்துள்ளது. #Huawei
    இசட்.டி.இ. கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் இணைந்து உலகில் முதல் முறையாக 5ஜி தொழில்நுட்பத்தில் வாய்ஸ் கால் செய்து அசத்தியுள்ளன. #5G #ZTE



    இசட்.டி.இ. கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் மேற்கொண்டதாக அறிவித்துள்ளன. இதற்கு இசட்.டி.இ. உருவாக்கிய 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்பட்டது. ஷென்சென் 5ஜி சோதனை மையத்தில் உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

    சோதனை முயற்சியில் வாய்ஸ் கால் மட்டுமின்றி வீசாட் க்ரூப் கால், ஆன்லைன் வீடியோ மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவையும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. என்.எஸ்.ஏ. மோட் மூலம் கால் செய்யப்பட்ட வணிக ரீதியிலான முதல் சோதனை மையமாக சீனா யுனிகாம் நிறுவனத்தின் ஷென்சென் சோதனை மையம் இருக்கிறது.



    சீனா யுனிகாம் நிறுவனம் 5ஜி சேவை வழங்க சோதனை செய்யும் முதல் இடமாக ஷென்செனை தேர்வு செய்தது. இந்த வட்டாரம் முழுக்க நெட்வொர்க் உபகரணங்களை கட்டமைப்பது, சிறப்பு சேவைகளை வழங்குவது, ரோமிங் மற்றும் இண்டர்கனெக்ஷன் உள்ளிட்டவற்றை பலகட்டங்களில் சீனா யுனிகாம் சோதனை செய்து வருகிறது.

    சோதனைகளில் இசட்.டி.இ. 5ஜி என்ட்-டு-என்ட் தீர்வுகளான ரேடியோ அக்சஸ் நெட்வொர்க், கோர் நெட்வொர்க், டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க் மற்றும் இன்டலிஜென்ட் டிவைஸ் உள்ளிட்டவை அடங்கும். இதுதவிர இந்த சோதனைகளில் 5ஜி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்களும் சீராக இயங்கச் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான நுபியா தனது புதிய கேமிங் ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் 10 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. #nubia #gaming



    இசட்.டி.இ. நிறுவனத்தின் துணை பிரான்டான நுபியா விரைவில் புதிய கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே புதிய ஸ்மார்ட்போனின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. 

    சமீபத்தில் சியோமி மற்றும் ரேசர்போன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கேமிங் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், நுபியா நிறுவனம் ரெட் மேஜிக் மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்கிறது. நுபியா நிறுவனத்தின் முதல் கேமிங் போன் கிரவுட்ஃபன்டிங் தளம் மூலம் விற்பனைக்கு வந்தது. 

    இந்நிலையில் ரெட் மேஜிக் 2 ஸ்மார்ட்போனின் சில முக்கிய சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் 10 ஜி.பி. ரேம், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சீன சமூக வலைதளமான வெய்போவில் நுபியா ரெட் மேஜிக் 2 ஸ்மார்ட்போனின் புதிய டீசரை வெளியிட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: வெய்போ

    புதிய டீசரின் படி ரெட் மேஜிக் 2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 10 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. முந்தைய ரெட் மேஜிக் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் புதிய ரெட் மேஜிக் 2 ஸ்மார்ட்போனில் 4டி கேமிங் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் லிக்விட் மற்றும் ஏர்-கூலிங் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகிறது. நுபியாவின் முந்தைய கேமிங் போனில் ஏர்-கூலிங் தொழில்நுட்பம் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. டீசரில் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்து எவ்வித தகவலும் இடம்பெறாத நிலையில், நுபியா பொது மேளாலர் வெய்போ பதிவில் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் அக்டோபர் 31ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என குறிப்பட்டிருந்தார்.

    நுபியா ரெட் மேஜிக் 2 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2160 பிக்சல் LTPS TFT டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
    - 10 ஜி.பி. ரேம்
    - 24 எம்.பி. பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    இசட்.டி.இ. நுபியா பிரான்டு உலகின் அதிநவீன அணியக்கூடிய ஸ்மார்ட்போனினை ஐ.எஃப்.ஏ. 2018 விழாவில் டீஸ் செய்துள்ளது. #smartphone

     

    இசட்.டி.இ. நிறுவனத்தின் நுபியா பிரான்டு உலகின் அதிநவீன அணியக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசரை ஐ.எஃப்.ஏ. 2018 விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நுபியா α என அழைக்கப்படுகிறது. புதிய சாதனம் வெறும் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி இது புதிய வகை ஆகும். புதிய சாதனம் குறித்த வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

    வீடியோவில் சாதனத்தை மணிக்கட்டில் அணிந்து கொள்வது போன்றும், பெரிய வளைந்த OLED தொடுதிரை, முன்க்கம் கேமரா மற்றும் மைக்ரோபோன், இருபுறங்களிலும் பட்டன்கள் இடம்பெற்றிருக்கிறது. பின்புறம் சார்ஜிங் பின்கள் மற்றும் இதய துடிப்பு சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.



    இத்துடன் மெட்டல் ஸ்டிராப், பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சாதனத்தின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் விற்பனை குறித்து இசட்.டி.இ. எவ்வித தகவலையும் வழங்கவில்லை. இம்முறை வெளியிட்டிருக்கும் வீடியோவின் படி சாதனம் கான்செப்ட் வடிவில் இல்லை என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.

    வீடியோவில் புதிய சாதனம் பார்க்க நன்றாக காட்சியளிக்கும் நிலையில், இதன் பேட்டரி பேக்கப் விவரங்கள் அறியப்படவில்லை. வழக்கமான எல்இடி மற்றும் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்குவதில்லை.

    அந்த வகையில் புதிய சாதனம் குறித்த மற்ற விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்க்ப்படுகிறது.

    புதிய அணியக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோவை கீழே காணலாம்..,


    ×