18GB ரேம், 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

ZTE நிறுவனத்தின் புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஆக்சன் 40 அல்ட்ரா மாடலை போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
18GB ரேம், 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்
Published on

ZTE நிறுவனம் ஆக்சன் 40 அல்ட்ரா ஸ்பேஸ் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ZTE கடந்த மே மாத வாக்கில் அறிமுகம் செய்த ஒரிஜினல் ஆக்சன் 40 அல்ட்ரா மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதில் அதிகபட்சம் 18 ஜிபி ரேம், 1 டிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் டிசைனும் புதிதாக உள்ளது.

ஸ்பேஸ் எடிஷன் மாடலின் டிசைன் டைம் டிராவலில் லைட் அண்ட் ஷேடோவை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பேக் கவர் செராமிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக நானோ-கேஸ்டிங் வழிமுறை பின்பற்றப்பட்டு உள்ளது. இதில் மூன்றாம் தலைமுறை அண்டர்-ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 6.8 இன்ச் AMOLED ஃபிலெக்சிபில் வளைந்த ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், டூயல் சேனல் விசி லிக்விட் கூல்டு வேப்பரைசர் உள்ளது.

ZTE ஆக்சன் 40 அல்ட்ரா ஸ்பேஸ் எடிஷன் அம்சங்கள்:

6.8 இன்ச் 2480x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்

அட்ரினோ nxt-gen GPU

12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி

18 ஜிபி ரேம், 1 டிபி மெமரி

ஆண்ட்ராய்டு 12 மற்றும் மை ஒஎஸ் 12

டூயல் சிம் ஸ்லாட்

64MP பிரைமரி கேமரா, OIS

64MP அல்ட்ரா வைடு லென்ஸ்

64MP டெலிபோட்டோ கேமரா, எல்இடி ஃபிளாஷ்

16MP அண்டர் ஸ்கிரீன் கேமரா

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6E, பளூடூத் 5.2

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ZTE ஆக்சன் 40 அல்ட்ரா ஸ்பேஸ் எடிஷன் பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை 5898 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 67 ஆயிரத்து 220 என துவங்குகிறது. இதன் 18 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மாடல் விலை 7698 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 87 ஆயிரத்து 735 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. விற்பனை சீன சந்தையில் டிசம்பர் 6 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com