என் மலர்

  நீங்கள் தேடியது "Nubia"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நுபியா நிறுவனம் தனது ரெட் மேஜிக் 3, ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் நுபியா பாட்ஸ் உள்ளிட்ட சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. #Nubia  நுபியா நிறுவனம் இந்தியாவில் மூன்று சாதனங்களை மே மாதத்தில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. புதிய நுபியா சாதனங்களின் அறிமுக தேதி பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இவை மே 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  நுபியா ரெட் மேஜிக் 3, வளையக்கூடிய நுபியா ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் நுபியா பாட்ஸ் இயர்போன் என மூன்று சாதனங்கள் மே மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

  நுபியா தனது ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் நுபியா பாட்ஸ் சாதனத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போன் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை அந்நிறுவன பொது மேலாளர் தனது வெய்போவில் தெரிவித்தார்.  அந்த வகையில் புதிய ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 12 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரேசர் போன் 2 போட்டியாக அமைந்திருக்கிறது. 

  ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் ஏர் மற்றும் லிக்விட் டூயல்-கூலிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இது உயர் ரக கேம்களை விளையாடும் போது ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ளும். இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் 4D ஷாக் வைப்ரேஷன் மோட்டார், டி.டி.எஸ். 7.1 3D சரவுண்ட் சவுண்ட் வழங்கப்படுகிறது. 

  ரெட் மேஜிக் 3 மட்டுமின்றி ஸ்மார்ட்வாட்ச் சாதனமும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த சாதனத்தில் 4.0 இன்ச் வளையக்கூடிய OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் வியர் 2100 சிப்செட், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. நுபியா ஆல்ஃபா சாதனம் 500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நுபியா பிராண்டு ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் போன் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. #nubia  நுபியா பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி உலகின் முதல் அணியக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் இந்த சாதனம் காட்சிப்படுத்தப்பட்டது. 

  புதிய சாதனத்தில் மடிக்கும் திறன் கொண்ட OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனத்தின் 5ஜி வெர்ஷனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக நுபியா அறிவித்துள்ளது. இதற்கென நுபியா சீனா யுனிகாம் நிறுவனத்துடன் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.  நுபியா ஆல்ஃபா சிறப்பம்சங்கள்:

  - 4.01 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே
  - குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 2100 பிராசஸர்
  - 1 ஜி.பி. ரேம்
  - 8 ஜி.பி. மெமரி
  - 5 எம்.பி. பிரைமரி கேமரா, 82-டிகிரி வைடு-ஆங்கிள் லென்ஸ், f/2.2
  - பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன்
  - உடற்பயிற்சி, ஆரோக்கியத்தை காக்கும் அசிஸ்டண்ட் வசதி
  - உறக்கம், ஓட்ட பயிற்சிகளை டிராக் செய்யும் திறன்
  - மியூசிக் பிளேபேக்
  - இதய துடிப்பு சென்சார்
  - 4ஜி மற்றும் இசிம் 
  - வைபை, ப்ளூடூத்
  - 500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  அணியக்கூடிய ஸ்மார்ட்போனுடன் நுபியா பிராண்டு வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தையும் நுபியா ஏற்கனவே சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்திருந்தது.   நுபியா பாட்ஸ் சிறப்பம்சங்கள்:

  - ப்ளூடூத் 5 மற்றும் குவால்காம் ஆப்ட் எக்ஸ்
  - LDS லேசர் ஆண்டெனா
  - 45-டிகிரி எர்கோனோமிக் வடிவமைப்பு
  - 6.2 கிராம் எடை
  - MEMS மைக்ரோபோன்
  - 55 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - 410 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சார்ஜிங் கேஸ்

  நுபியா ஆல்ஃபா 4ஜி பிளாக் வெர்ஷன் விலை சீனாவில் 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.36,225) என்றும் 18 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட பேண்ட் கொண்ட 4ஜி கோல்டு வெர்ஷன் விலை 4499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.46,620) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  நுபியா பாச்ஸ் விலை 799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.8,280) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் விற்பனையில் நுபியா ஆல்ஃபா வாங்குவோருக்கு நுபியா பாட்ஸ் இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான நுபியா தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Nubia #FoldableSmartphone  நுபியா நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 25 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக ஸ்மார்ட்போனின் டீசர்களை வெளியிட்டு வந்த நுபியா தற்சமயம் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மற்றும் நேரம் உள்ளிட்டவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  ஹூவாய் நிறுவனத்தைத் தொடர்ந்து நுபியா தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அறிமுகம் பற்ற அறிவித்திருக்கிறது. நுபியாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீனா யுனிகாம் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி இருப்பது உறுதியாகியிருக்கிறது.

  புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நுபியா நிறுவனம் நுபியா α என அழைக்கிறது. ஏற்கனவே 2018 ஐ.எஃப்.ஏ. விழாவில் நுபியா தனது அதிநவீன மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக நுபியா α இருக்கும் என்றும் இதில் வளைந்த OLED ஸ்கிரீன் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்திருந்தது.  நுபியா நிறுவன தலைமை செயல் அதிகாரி நி ஃபெய் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனினை அதன் ப்ரோடோடைப் சார்ந்த வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரிவித்திருக்கிறார். மேலும் புதிய சாதனம் அன்றாட பயன்பாடுகளுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

  பார்சிலோனாவில் அடுத்த வாரம் துவங்க இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் சாம்சங், ஹூவாய், சியோமி போன்ற நிறுவனங்களும் தங்களது மடிக்கக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்ய இருக்கின்றன. அந்த வரிசையில் தற்சமயம் நுபியாவும் இணைந்திருக்கிறது.

  சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தவிர 5ஜி தொழில்நுட்பமும் அதிக முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நுபியா நிறுவனம் ரெட் மேஜிக் என்ற பெயரில் புதிய கேமிங் போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #NubiaRedMagic #gaming  நுபியா நிறுவனம் இந்தியாவில் ரெட் மேஜிக் கேமிங் போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட் மேஜிக் கேமிங் போன் முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

  ரெட் மேஜிக் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், புதிய வெக்டார் வடிவமைப்பு, ஏர்-கூல்டு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் ஸமார்ட்போனின் பின்புறம் மெட்டல் பாடியில் ஒன்பது ஏர் ஸ்லாட்கள் இடம்பெற்றுள்ளது. இது ஸ்மார்ட்போனில் கேமிங் செய்யும் போது மொபைல் சூடாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

  இந்த ஸ்மார்ட்போன் மும்மடங்கு அனோடைஸ் செய்யப்பட்ட ஏவியேஷன்-கிரேடு அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பிரத்யேக கேமிங் பட்டனை க்ளிக் செய்யும் போது, ஸ்மார்ட்போனின் பேக்கிரவுண்ட் நெட்வொர்க்கை குறைத்து, அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., நோட்டிஃபிகேஷன் உள்ளிட்டவற்றை பிளாக் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

  நுபியா ஸ்மார்ட்போனிற்கென 128 கேம்களை ஆப்டிமைஸ் செய்து, கேமின் லோடிங் வேகத்தை 50% வரை அதிகப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.  நுபியா ரெட் மேஜிக் சிறப்பம்சங்கள்:

  - 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே
  - 2.45 ஜிகாஹெர்ட்ஸ் 835 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
  - அட்ரினோ 540 GPU
  - 8 ஜி.பி. ரேம்
  - 128 ஜி.பி. மெமரி
  - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் நுபியா ரெட் மேஜிக் ஓ.எஸ்.
  - டூயல் சிம் ஸ்லாட்
  - 24 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 6P லென்ஸ், டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
  - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
  - கைரேகை சென்சார்
  - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், TAS2555 ஆம்ப்ளிஃபையர், டி.டி.எஸ். ஆடியோ
  - பிரத்யேக கேமிங் பட்டன்
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
  - 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - ஃபாஸ்ட் சார்ஜிங்

  இந்தியாவில் நுபியா ரெட் மேஜிக் ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 20ம் தேதி முதல் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஸ்மார்ட்போனினை முதலில் வாங்கும் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரெட் மேஜிக் நெர்ட்ஸ் இயர்போன்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான நுபியா தனது புதிய கேமிங் ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் 10 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. #nubia #gaming  இசட்.டி.இ. நிறுவனத்தின் துணை பிரான்டான நுபியா விரைவில் புதிய கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே புதிய ஸ்மார்ட்போனின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. 

  சமீபத்தில் சியோமி மற்றும் ரேசர்போன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கேமிங் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், நுபியா நிறுவனம் ரெட் மேஜிக் மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்கிறது. நுபியா நிறுவனத்தின் முதல் கேமிங் போன் கிரவுட்ஃபன்டிங் தளம் மூலம் விற்பனைக்கு வந்தது. 

  இந்நிலையில் ரெட் மேஜிக் 2 ஸ்மார்ட்போனின் சில முக்கிய சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் 10 ஜி.பி. ரேம், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சீன சமூக வலைதளமான வெய்போவில் நுபியா ரெட் மேஜிக் 2 ஸ்மார்ட்போனின் புதிய டீசரை வெளியிட்டுள்ளது.


  புகைப்படம் நன்றி: வெய்போ

  புதிய டீசரின் படி ரெட் மேஜிக் 2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 10 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. முந்தைய ரெட் மேஜிக் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் புதிய ரெட் மேஜிக் 2 ஸ்மார்ட்போனில் 4டி கேமிங் வழங்கப்படலாம் என தெரிகிறது.

  புதிய ஸ்மார்ட்போனில் லிக்விட் மற்றும் ஏர்-கூலிங் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகிறது. நுபியாவின் முந்தைய கேமிங் போனில் ஏர்-கூலிங் தொழில்நுட்பம் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. டீசரில் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்து எவ்வித தகவலும் இடம்பெறாத நிலையில், நுபியா பொது மேளாலர் வெய்போ பதிவில் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் அக்டோபர் 31ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என குறிப்பட்டிருந்தார்.

  நுபியா ரெட் மேஜிக் 2 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

  - 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2160 பிக்சல் LTPS TFT டிஸ்ப்ளே
  - குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
  - 10 ஜி.பி. ரேம்
  - 24 எம்.பி. பிரைமரி கேமரா
  - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
  - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இசட்.டி.இ. நுபியா பிரான்டு உலகின் அதிநவீன அணியக்கூடிய ஸ்மார்ட்போனினை ஐ.எஃப்.ஏ. 2018 விழாவில் டீஸ் செய்துள்ளது. #smartphone

   

  இசட்.டி.இ. நிறுவனத்தின் நுபியா பிரான்டு உலகின் அதிநவீன அணியக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசரை ஐ.எஃப்.ஏ. 2018 விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நுபியா α என அழைக்கப்படுகிறது. புதிய சாதனம் வெறும் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி இது புதிய வகை ஆகும். புதிய சாதனம் குறித்த வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

  வீடியோவில் சாதனத்தை மணிக்கட்டில் அணிந்து கொள்வது போன்றும், பெரிய வளைந்த OLED தொடுதிரை, முன்க்கம் கேமரா மற்றும் மைக்ரோபோன், இருபுறங்களிலும் பட்டன்கள் இடம்பெற்றிருக்கிறது. பின்புறம் சார்ஜிங் பின்கள் மற்றும் இதய துடிப்பு சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.  இத்துடன் மெட்டல் ஸ்டிராப், பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சாதனத்தின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் விற்பனை குறித்து இசட்.டி.இ. எவ்வித தகவலையும் வழங்கவில்லை. இம்முறை வெளியிட்டிருக்கும் வீடியோவின் படி சாதனம் கான்செப்ட் வடிவில் இல்லை என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.

  வீடியோவில் புதிய சாதனம் பார்க்க நன்றாக காட்சியளிக்கும் நிலையில், இதன் பேட்டரி பேக்கப் விவரங்கள் அறியப்படவில்லை. வழக்கமான எல்இடி மற்றும் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்குவதில்லை.

  அந்த வகையில் புதிய சாதனம் குறித்த மற்ற விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்க்ப்படுகிறது.

  புதிய அணியக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோவை கீழே காணலாம்..,


  ×