என் மலர்

  தொழில்நுட்பம்

  நுபியா ஸ்மார்ட்வாட்ச், ரெட் மேஜிக் 3, பாட்ஸ் இயர்போன் இந்திய வெளியீடு உறுதியானது
  X

  நுபியா ஸ்மார்ட்வாட்ச், ரெட் மேஜிக் 3, பாட்ஸ் இயர்போன் இந்திய வெளியீடு உறுதியானது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நுபியா நிறுவனம் தனது ரெட் மேஜிக் 3, ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் நுபியா பாட்ஸ் உள்ளிட்ட சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. #Nubia  நுபியா நிறுவனம் இந்தியாவில் மூன்று சாதனங்களை மே மாதத்தில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. புதிய நுபியா சாதனங்களின் அறிமுக தேதி பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இவை மே 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  நுபியா ரெட் மேஜிக் 3, வளையக்கூடிய நுபியா ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் நுபியா பாட்ஸ் இயர்போன் என மூன்று சாதனங்கள் மே மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

  நுபியா தனது ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் நுபியா பாட்ஸ் சாதனத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போன் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை அந்நிறுவன பொது மேலாளர் தனது வெய்போவில் தெரிவித்தார்.  அந்த வகையில் புதிய ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 12 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரேசர் போன் 2 போட்டியாக அமைந்திருக்கிறது. 

  ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் ஏர் மற்றும் லிக்விட் டூயல்-கூலிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இது உயர் ரக கேம்களை விளையாடும் போது ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ளும். இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் 4D ஷாக் வைப்ரேஷன் மோட்டார், டி.டி.எஸ். 7.1 3D சரவுண்ட் சவுண்ட் வழங்கப்படுகிறது. 

  ரெட் மேஜிக் 3 மட்டுமின்றி ஸ்மார்ட்வாட்ச் சாதனமும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த சாதனத்தில் 4.0 இன்ச் வளையக்கூடிய OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் வியர் 2100 சிப்செட், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. நுபியா ஆல்ஃபா சாதனம் 500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
  Next Story
  ×