search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விரைவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் நுபியா
    X

    விரைவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் நுபியா

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான நுபியா தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Nubia #FoldableSmartphone



    நுபியா நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 25 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக ஸ்மார்ட்போனின் டீசர்களை வெளியிட்டு வந்த நுபியா தற்சமயம் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மற்றும் நேரம் உள்ளிட்டவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ஹூவாய் நிறுவனத்தைத் தொடர்ந்து நுபியா தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அறிமுகம் பற்ற அறிவித்திருக்கிறது. நுபியாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீனா யுனிகாம் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி இருப்பது உறுதியாகியிருக்கிறது.

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நுபியா நிறுவனம் நுபியா α என அழைக்கிறது. ஏற்கனவே 2018 ஐ.எஃப்.ஏ. விழாவில் நுபியா தனது அதிநவீன மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக நுபியா α இருக்கும் என்றும் இதில் வளைந்த OLED ஸ்கிரீன் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்திருந்தது.



    நுபியா நிறுவன தலைமை செயல் அதிகாரி நி ஃபெய் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனினை அதன் ப்ரோடோடைப் சார்ந்த வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரிவித்திருக்கிறார். மேலும் புதிய சாதனம் அன்றாட பயன்பாடுகளுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

    பார்சிலோனாவில் அடுத்த வாரம் துவங்க இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் சாம்சங், ஹூவாய், சியோமி போன்ற நிறுவனங்களும் தங்களது மடிக்கக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்ய இருக்கின்றன. அந்த வரிசையில் தற்சமயம் நுபியாவும் இணைந்திருக்கிறது.

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தவிர 5ஜி தொழில்நுட்பமும் அதிக முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×