search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gaming Phone"

    சியோமி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை கேமிங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BlackShark2 #GamingPhone



    சியோமியின் பிளாக் ஷார்க் தனது பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் மார்ச் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக பிளாக் ஷார்க் ஹெலோ கேமிங் போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வழங்கப்படுகிறது. முன்னதாக விவோ தனது கேமிங் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஐகூ என அழைக்கப்டுகிறது. 

    பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனில் லிக்விட் கூலிங் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்படும் என பிளாக் ஷார்க் தலைமை செயல் அதிகாரி பீட்டபர் தெரிவித்திருக்கிறார். இது டவர் போன்ற சர்வதேச கூலிங் அமைப்பாகும். இதுபற்றிய முழு விவரங்கள் விழா அரங்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.



    சீன வலைதளமான அன்டுடு (AnTuTu) பட்டியலில் இந்த ஸ்மார்ட்போன் 359973 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இது கேமிங் போன்களில் இரண்டாவது இடமாகும். முதலிடத்தில் சியோமியின் Mi 9 இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 371849 புள்ளிகளை பெற்றிருக்கிறது. அதன்படி புதிய பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போனில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வெர்ஷன் மற்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். 

    இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் 2340x1080 பிக்சல் டிஸ்ப்ளே மற்றும் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச் மற்றும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    நுபியா நிறுவனம் ரெட் மேஜிக் என்ற பெயரில் புதிய கேமிங் போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #NubiaRedMagic #gaming



    நுபியா நிறுவனம் இந்தியாவில் ரெட் மேஜிக் கேமிங் போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட் மேஜிக் கேமிங் போன் முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ரெட் மேஜிக் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், புதிய வெக்டார் வடிவமைப்பு, ஏர்-கூல்டு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் ஸமார்ட்போனின் பின்புறம் மெட்டல் பாடியில் ஒன்பது ஏர் ஸ்லாட்கள் இடம்பெற்றுள்ளது. இது ஸ்மார்ட்போனில் கேமிங் செய்யும் போது மொபைல் சூடாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

    இந்த ஸ்மார்ட்போன் மும்மடங்கு அனோடைஸ் செய்யப்பட்ட ஏவியேஷன்-கிரேடு அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பிரத்யேக கேமிங் பட்டனை க்ளிக் செய்யும் போது, ஸ்மார்ட்போனின் பேக்கிரவுண்ட் நெட்வொர்க்கை குறைத்து, அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., நோட்டிஃபிகேஷன் உள்ளிட்டவற்றை பிளாக் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    நுபியா ஸ்மார்ட்போனிற்கென 128 கேம்களை ஆப்டிமைஸ் செய்து, கேமின் லோடிங் வேகத்தை 50% வரை அதிகப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    நுபியா ரெட் மேஜிக் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே
    - 2.45 ஜிகாஹெர்ட்ஸ் 835 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 540 GPU
    - 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் நுபியா ரெட் மேஜிக் ஓ.எஸ்.
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 24 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 6P லென்ஸ், டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், TAS2555 ஆம்ப்ளிஃபையர், டி.டி.எஸ். ஆடியோ
    - பிரத்யேக கேமிங் பட்டன்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்தியாவில் நுபியா ரெட் மேஜிக் ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 20ம் தேதி முதல் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஸ்மார்ட்போனினை முதலில் வாங்கும் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரெட் மேஜிக் நெர்ட்ஸ் இயர்போன்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    அசுஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனத்தின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் ஆகும். #AsusRogphone



    அசுஸ் ரோக் (ROG) போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அசுஸ் நிறுவனத்தின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் ஆகும்.

    புதிய அசுஸ் ரோக் போனில் 6.00 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED HDR டிஸ்ப்ளே, கேமிங் ஹெச்.டி.ஆர்., மொபைல் ஹெச்.டி.ஆர். உள்ளிட்டவை ஸ்னாப்டிராகன் 845 உதவியுடன் பிரத்யேக டிஸ்ப்ளே சிப் மூலம் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் அசுஸ் ரோக் போனில் கேம்கூல் சிஸ்டம் மூலம் ஸ்மார்ட்போனின் வெப்பம் குறைக்கப்படுகிறது.

    பிரத்யேக அல்ட்ராசோனிக் பட்டன்கள் ஸ்மார்ட்போனின் வலது புறம் மற்ரும் இடது புறங்களில் வழங்கப்பட்டுள்ளது. இவை லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்டிரெயிட் மோட்களுக்கு ஏற்ற வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பட்டன்களை ஸ்மார்ட்போனில் பல்வேறு அம்சங்களை இயக்குவதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    இந்த பட்டன்களை கேமிங் அல்லாத அம்சங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். கேம்களில் ஃபோர்ஸ் ஃபீட்பேக் அம்சத்திற்கென அதிர்வுகளை வழங்க அதிநவீன ஹேப்டிக் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் வைஜிக் சான்று பெற்ற 802.11ad 60GHz வைபை, 2x2 MIMO மற்றும் வைபை டைரக்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருக்கும் போர்ட்டில் ஜிகாபிட் ஈத்தர்நெட் வசதியை சப்போர்ட் செய்யும். பயனர்கள் இதனை யு.எஸ்.பி. டைப்-சி வழியாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றுடன் ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் யு.எஸ்.பி. உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது.

    அசுஸ் ரோக் போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு 30 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போன் 0-60% சார்ஜ் ஆக 33 நிமிடங்களும், 85% வரையிலான சார்ஜ் ஆக ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும். ஸ்மார்ட்போனின் பின்புறம் இடம்பெற்று இருக்கும் லோகோ நீங்கள் தேர்வு செய்யும் நிறத்தில் பல்வேறு வகைகளில் மிளரச் செய்யும். 



    அசுஸ் ரோக் போன் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெதச்.டி.+ 18:9 90Hz, AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - கேமிங் ஹெச்.டி.ஆர். மற்றும் மொபைல் ஹெச்.டி.ஆர்.
    - 2.96 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ரோக் கேமிங் X மோட் யு.ஐ.
    - டூயல் சிம்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 1.4µm பிக்சல், 1/2.55″ சோனி IMX363 சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்
    - இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - முன்பக்கம் டூயல் 5-மேக்னெட் ஸ்பீக்கர், டூயல் NXP 9874 ஸ்மார்ட் ஆம்ப்ளிஃபையர், ஹை-ரெஸ் ஆடியோ, டி.டி.எஸ். 
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புதிய அசுஸ் ரோக் போன் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் அசுஸ் ரோக் போன் விலை ரூ.69,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனினை பயனர்கள் 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியில் வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
    சியோமியின் பிளாக் ஷார்க் தனது புதிய கேமிங் போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 10 ஜி.பி. வரை ரேம் வழங்கப்பட்டுள்ளது. #BlackSharkHelo #gaming



    சியோமியின் பிளாக் ஷார்க் ஹீலோ கேமிங் போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் 6.01 இன்ச் FHD + AMOLED டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். வசதி, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம், இரண்டு லிக்விட் கூலிங் பைப்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இது ஸ்மார்ட்போனின் சி.பி.யு. கோர் வெப்பத்தை 12-டிகிரி வரை சூடாகாமல் பார்த்துக் கொள்ளும் என பிளாக் ஷார்க் தெரிவித்துள்ளது. இதன் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புறம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் RGB லோகோ ஏ.ஐ. கேமிங் லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் பிரத்யேக டூ-ஸ்டேஜ் ஷார்க் கீ தலைசிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. கூடுதலாக கழற்றக்கூடிய கேம்பேட் இடதுபுறம் வழங்கப்பட்டுள்ளது. 



    சியோமி பிளாக் ஷார்க் ஹீலோ சிறப்பம்சங்கள்

    - 6.01 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 டிஸ்ப்ளே
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி 
    - 10 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஜாய் UI
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.75, 1.25µm பிக்சல், டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 1.0µm பிக்சல், f/1.75
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 1.0µm,  f/2.2
    - கைரேகை சென்சார்
    - டூயல் ஸ்மார்ட் PA, ஹைபை ஆடியோ, டூயல் முன்பக்க ஸ்பீக்கர்கள்
    - உயர் ரக கேமிங் மோடிற்கென இரு-ஸ்டேக் ஷார்க் கீ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவிக் சார்ஜ் 3.0

    சியோமி பிளாக் ஷார்க் ஹீலோ ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.33,920) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.37,100) என்றும் 10 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.44,520) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இதன் விற்பனை அக்டோபர் 30ம் தேதி முதல் துவங்குகிறது.
    ×