search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஸ் போட்டி"

    • செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • இது போன்ற வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை இந்த செஸ் விளையாட்டு நமக்கு கற்றுத்தருகிறது.

    விருதுநகர்

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (28-ந் தேதி) முதல் 10-ந் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கிறது.

    இதையொட்டி விருதுநகர் மருத்துவக்கல்லூரி கலைய–ரங்கில் மாவட்டத்தில் பல்வேறு கட்டங்களாக நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தனர்.

    கலெக்டர் மேகநாத–ரெட்டி தலைமை தாங்கி செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    விழாவில் கலெக்டர் பேசுகையில், இந்த விளையாட்டில் ஒரு நகர்வில் வெற்றி பெற முடியாது. தொடர்ச்சியாக ஒவ்வொரு படியாக நகர்ந்து, தோல்விகளையும் சந்தித்து தான் வெற்றி பெற முடியும். இது போன்ற வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை இந்த செஸ் விளையாட்டு நமக்கு கற்றுத்தருகிறது.

    எனவே அனைவரும் படிப்பிலும், இது போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபடுத்திக்கொண்டு தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார்.

    முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி சிலம்பாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் ஊர்வலமாக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி வரை எடுத்து செல்லப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, சிவகாசி சார் ஆட்சியர் பிருத்திவிராஜ், கோட்டாட்சியர்கள் கல் ய ா ண குமார்(அருப்புக்கோட்டை), அனிதா(சாத்தூர்), திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தெய்வேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாமல்லபுரத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டி மற்றும் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவுள்ளனர்.
    • சர்வதேச அளவிலான சர்வதேச போட்டியில் பார்வையாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதை யொட்டி கடந்த 2-ம் தேதி மற்றும் 15-ம் தேதி என 2 நாட்கள் பள்ளி மாணவ, மாணவர்களுக்கிடையே செஸ் விளையாட்ட போட்டிகள் நடந்தது. அப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான செஸ் போட்டி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இந்த போட்டியினை மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) முத்துமாரி தொடங்கி வைத்தார்.

    மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கேடயம், இரண்டாம் பரிசாக ரூ.800க்கான காசோலை மற்றும் கேடயம், மூன்றாம் பரிசாக ரூ.500க்கான காசோலை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை செஸ் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாமல்லபுரத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டி மற்றும் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவுள்ளனர்.

    அதே போல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான சர்வதேச போட்டியில் பார்வையாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

    மாமல்லபுரத்திற்கு செல்லவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு பெங்களூர் முதல் சென்னை வரை சென்று வர விமானம் மூலம் இலவசமாக அழைத்து செல்லப்படவுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நகர்மன்ற தலைவர் பரிதாநாவப், துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, பள்ளி தலைமை ஆசிரியர் சேரலாதன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 

    • மரக்கன்றுகள் நடப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக 288 ஊராட்சிகளில் செஸ் போர்டில் உள்ள 64 கட்டங்கள் குறித்து அனைத்து ஊராட்சிகளிலும் 64 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் தொடங்கிவைத்து மரக்கன்றுகளை நட்டார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
    • காவல் கண்காணிப்பாளர் நல்லு, எழுமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. காவல் கண்காணிப்பாளர் நல்லு, எழுமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    11, 14 மற்றும் 17 வயதினருக்கான போட்டி மற்றும் 17 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டி என 4 பிரிவுகளாக நடந்த போட்டியில் உசிலம்பட்டி, எழுமலை, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30-க்கும் அதிகமான பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகளும், 50-க்கும் மேற்பட்ட 17 வயதிற்கு மேற்பட்டோரும் கலந்து கொண்டனர்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் நல்லு, டாக்டர் விஸ்வநாதன் ஆகியோர் வழங்கினர்.

    • திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தொடங்கி வைத்தார் .
    • இளைஞரணி அமைப்பாளர்எம்.எஸ்.ஆர். ராஜ், திலக்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    44 -வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு பள்ளி கல்வித்துறை சார்பில் திருப்பூர் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டியை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தொடங்கி வைத்தார் . இதில் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. நாகராஜ், 36-வது வார்டு கவுன்சிலரும் கல்வி குழு தலைவருமான திவாகர், 22 -வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்எம்.எஸ்.ஆர். ராஜ், திலக்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • திண்டுக்கல் மாவட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.
    • பள்ளி மாணவ, மாணவிகள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்,மாணவ,மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தினேஷ்குமார், மாவட்ட அவைத்தலைவர் மோகன், மாவட்ட துணைச் செயலாளா் ராஜாமணி, ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளா் ஜோதீஸ்வரன், ஒட்டன்சத்திரம் நகர செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவருமான வெள்ளைச்சாமி, தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன்,

    ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன், நகரமன்ற தலைவர் திருமலைச்சாமி மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர்பொன்ராஜ், ஒன்றியக் குழு பெருந்தலைவர் சத்தியபுவனா, அய்யம்மாள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகரமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • ஆற்காடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது
    • ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செஸ் போட்டி நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆற்காடு நகரமன்ற தலைவர்தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை தாக்கிபோட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

    இதில் கல்விக் குழு தலைவர் ராஜலட் சுமிதுரை, மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாவைபழனி விஜயகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ரிஷிவந்தியம் அரசு பள்ளியில் செஸ் போட்டிநடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்குகிறது. இதையொட்டி பள்ளி கல்வித்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் வட்டார அளவிலாள செஸ் போட்டி ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் என்று 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.

    • வட்டார அளவிலான போட்டிகள் பர்கூர் மற்றும் சூளகிரி வட்டாரங்களிலும் நடைபெறுகிறது.
    • வருகிற 25ம் தேதியன்று மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது என்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வட்டார அளவில் பள்ளிகளுக்கிடையே செஸ் போட்டி நடந்தது. இந்த போட்டியினை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து, மாணவர்களுடன் செஸ் விளையாடினார்.

    பின்னர் அவர் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.

    இதையொட்டி கிருஷ்ண கிரி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் செஸ் போட்டிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரி வட்டார அளவிலான 175 பள்ளிகளை சேர்ந்த 550 மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற செஸ் போட்டி இன்று (நேற்று) நடைபெறுகிறது.

    இப்போட்டியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவியர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுகின்றனர். இதே போல் வட்டார அளவிலான போட்டிகள் பர்கூர் மற்றும் சூளகிரி வட்டாரங்களிலும் நடைபெறுகிறது. வருகிற 25ம் தேதியன்று மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது என்றார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் சர்தார், கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் திவ்யலட்சுமி, சிதம்பரம், சைமன்ஜார்ஜ், ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு செஸ் போட்டி நடந்தது சோளிங்கர் முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.

    அந்த போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட சார்பில் மாணவ மாணவிகளை தேர்வு செய்யும் விதமாக ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் மாவட்ட அளவிலான மாணவ மாணவிகளுக்கு செஸ் போட்டி மாவட்ட ஆட்சித் தலைமையில் போட்டியை துவக்கி வைத்தார்.

    மாவட்டம் முழுவதும் 1462 மன மாணவர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்து மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் போட்டி கலந்து கொள்ள உள்ளனர். இதேபோல சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் மாவட்ட செஸ் போட்டி நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் மேரிஷெரின் தலைமை தாங்கினார். சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு செஸ் போட்டியை தொடங்கி வைதத்தார்.

    செஸ் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட அரசு பள்ளியில் இருந்து 196 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அப்போது காங்கிரஸ் நகர தலைவர் கோபால் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வட்டார அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றது.
    • வட்டார வேளாண்மை அட்மா குழு தலைவர் எஸ்.சி.சக்கரவர்த்தி சதுரங்கப் போட்டியை தொடங்கி வைத்தார்.

    வாழப்பாடி:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வட்டார அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றது.

    விழாவிற்கு, தலைமை ஆசிரியர் ரவிசங்கர் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர்புகழ் தலைமை வகித்தார். வட்டார வேளாண்மை அட்மா குழு தலைவர் எஸ்.சி.சக்கரவர்த்தி சதுரங்கப் போட்டியை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் எம்ஜிஆர் பழனிசாமி, அரிமா சங்க பட்டயத் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர், போட்டியில் ஆர்வத்தோடு பங்குபெற்ற மாணவமாணவியர் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

    மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் பி.சி.செல்வம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கோபிநாத், குணாளன், ரமணி ஆகியோர், வெற்றிப்பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவமாணவியருக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை, உடற்கல்வி இயக்குநர் குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிமுருகன், ராமமூர்த்தி, செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான செஸ் போட்டிகள் 2நாட்கள் நடக்கிறது.
    • மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்தலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சதுரங்க ஒலிம்பியாட் என்பது மனிதகுலத்தின் புத்தி கூர்மை வாய்ந்த சிறந்த படைப்புத் திறனை உடைய சிந்தனைகளின் சங்கமிக்கும் போட்டியாகும். மேலும் சதுரங்க வீரர்களும், சதுரங்க விளையாட்டின் மீது ஆர்வமுடையவர்களும் முக்கியமாக எதிர்பார்க்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.

    சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்த முதல் அதிகாரப்பூர்வ சதுரங்க ஒலிம்பியாட் போட்டி 1927-ம் ஆண்டு லண்டனில் நடந்தது. சதுரங்க ஒலிம்பியாட்ஸ் போட்டிகள் ஆண்டுதோறும் அவ்வப்போது நடைபெற்று வந்தது.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், இதற்கு முன்னதாக 2018-ம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பியாட்டில் அதிகளவு பங்கேற்பான 176 நாடுகளின் பங்கேற்பை மிஞ்சும் வகையில் தற்போது 187 நாடுகளின் சாதனைப் பங்கேற்பை எதிர் நோக்கியுள்ளது. இந்த சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள், இந்திய சதுரங்க போட்டிகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனித்தன்மை உடையதாக நடைபெற உள்ளது.

    இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்துத்துறைகள் ஒருங்கிணைந்து பல்வேறு போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், அனைத்துத் தரப்பு சதுரங்க விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, ஊரக வளர்ச்சி முகமை புதிய அலுவலக கூட்டரங்கில் நாளை (21-ந் தேதி) 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், நாளை மறுநாள் (22-ந்தேதி) மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது.

    இந்த சதுரங்கப்போட்டியில் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×