search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்   வட்டார அளவிலான பள்ளிகளுக்கு  இடையே நடந்த செஸ் போட்டி-  கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவில் பள்ளிகளுக்கிடையே செஸ் போட்டியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்து மாணவியுடன் செஸ் விளையாடிய போது எடுத்தபடம்.

    கிருஷ்ணகிரியில் வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடந்த செஸ் போட்டி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • வட்டார அளவிலான போட்டிகள் பர்கூர் மற்றும் சூளகிரி வட்டாரங்களிலும் நடைபெறுகிறது.
    • வருகிற 25ம் தேதியன்று மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது என்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வட்டார அளவில் பள்ளிகளுக்கிடையே செஸ் போட்டி நடந்தது. இந்த போட்டியினை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து, மாணவர்களுடன் செஸ் விளையாடினார்.

    பின்னர் அவர் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.

    இதையொட்டி கிருஷ்ண கிரி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் செஸ் போட்டிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரி வட்டார அளவிலான 175 பள்ளிகளை சேர்ந்த 550 மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற செஸ் போட்டி இன்று (நேற்று) நடைபெறுகிறது.

    இப்போட்டியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவியர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுகின்றனர். இதே போல் வட்டார அளவிலான போட்டிகள் பர்கூர் மற்றும் சூளகிரி வட்டாரங்களிலும் நடைபெறுகிறது. வருகிற 25ம் தேதியன்று மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது என்றார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் சர்தார், கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் திவ்யலட்சுமி, சிதம்பரம், சைமன்ஜார்ஜ், ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×