search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திர தினம்"

    • கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு
    • சுதந்திர தினத்தையொட்டி போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

    நாகர்கோவில், ஆக.14-

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நாளை (15-ந்தேதி) நடை பெறும் சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் நலத்திட்ட உதவி களையும் வழங்குகிறார்.

    இதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுற் கொள்கிறார். பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடக்கிறது. சுதந்திர தினத்தையொட்டி போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

    அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்த ஒத்திகை நிகழ்ச்சியை ஆர். டி.ஓ சேதுராமலிங்கம் பார்வையிட்டார்.

    சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தபபட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் போலீ சாரின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடலோர காவல்படையினர் நவீன படகுகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள். சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது கடற்கரை கிராமங்களில் சுற்றி திரிகிறார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள லாட்ஜ்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    சுசீந்திரம் தாணுமாலையன் சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாவட்ட எல்லை பகுதியில் உள்ள களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலை யங்களில் உள்ள பார்சல்கள் முழுமையாக சோதனைக்கு பிறகு வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ரெயில்களில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ரெயில்வே தண்ட வாளங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இரவு 2 ஷிப்டுகளாக போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோ வில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • நாடு முழுவதும் நாளை 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.
    • கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர் யாதவ் ஆகியோர் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் நாளை 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவன தலைவர் டாக்டர் தேவநாதன் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் கோல்டன் அபுபக்கர், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர் யாதவ், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமை தீவிர பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரெயில்வே போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின விழா அமைதியான முறையில் நடைபெறும் வகையில் மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல் சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இரவு நேர ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமை தீவிர பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் ஈரோடு ரெயில்வே போலீசார் சார்பில் காவிரி ஆற்றில் உள்ள ரெயில்வே இரும்பு பாலத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரெயில்வே போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆங்கிலேயர்களுக்கு அடி பணியாமல் உயிரை துறந்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வீரவணக்கம்.
    • நமது முன்னோர்கள் நமக்காகவும் நமது வருங்கால தலைமுறையினருக்கும் பெற்று தந்த சுதந்திரத்தை பேணி காக்க வேண்டியது நமது கடமை.

    நாடு முழுவதும் நாளை 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். 77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் அதை பெறுவதற்கு நமது சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்வோம். உயிர் கொடுத்து ரத்தம் சிந்தி நாட்டின் விடுதலை மட்டுமே லட்சியமாக கொண்டு போராடிய அவர்கள் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு காரணம். ஆங்கிலேயர்களுக்கு அடி பணியாமல் உயிரை துறந்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வீரவணக்கம்.

    நமது முன்னோர்கள் நமக்காகவும் நமது வருங்கால தலைமுறையினருக்கும் பெற்று தந்த சுதந்திரத்தை பேணி காக்க வேண்டியது நமது கடமை. நமது சுதந்திரத்தை படிப்படியாக பறிக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக நாம் குரல் கொடுப்போம். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் நாளை நடைபெறும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மீறினால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    சுதந்திர தினத்தையொட்டி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்.

    தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்)கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் கடைகளுக்கு அருகில் உள்ள மதுபான கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான கூடங்கள் அனைத்தும் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினத்தன்று மூடப்பட வேண்டும்.

    அன்றைய தினத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அதேபோல் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தால் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் மற்றும் மது கூட உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி ஆகியோர் தெரிவித்தனர்.

    • செங்கோட்டையில் இருந்து 300 மீட்டருக்குள் துணை ராணுவப்படை நிறுத்தப்பட்டுள்ளது
    • பாதுகாப்பில் தேசிய பாதுகாப்புப்படை, சிறப்புப் பாதுகாப்புக்குழு, மத்திய ஆயுதக் காவல் படைகள், டெல்லி போலீசார்

    நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (செவ்வாக்கிழமை) டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 9-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார். விழாவில் முப்படை அணிவகுப்பை பிரதமர் நரேந்திரமோடி பார்வையிடுகிறார்.

    தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்படும். பின்னர் கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து மூவர்ண பலூன்கள் வானில் பறக்க விடப்படும். விழாவில் நாடு முழுவதும் இருந்து சுமார் 1,800 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக டெல்லி செங்கோட்டையை சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    செங்கோட்டையில் இருந்து 300 மீட்டருக்குள் துணை ராணுவப்படை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேசிய பாதுகாப்புப்படை, சிறப்புப் பாதுகாப்புக்குழு, மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் டெல்லி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    சுதந்திர தினத்தன்று டெல்லி விமான நிலையத்தில் திட்டமிடப்படாத விமானங்கள் புறப்படுவதற்கும் தரை இறங்குவதற்கும் சில மணி நேரம் தடைவிதிக்கப்படும். எனினும் வழக்கமாக செல்லும் விமானங்கள் புறப்பட எந்த பாதிப்பும் இருக்காது.

    இந்திய விமானப்படை, எல்லைப் பாதுகாப்புப்படை மற்றும் ராணுவ விமானப் படையின் ஹெலிகாப்டர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. இது தவிர, கவர்னர்கள் மற்றும் முதல்-மந்திரிகள் பயணம் செய்யும் மாநில ஹெலிகாப்டர்கள் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    டெல்லியில் ஆகஸ்ட் 16-ந்தேதி வரை டிரோன்கள் மற்றும் பாராகிளைடிங் தடை செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை மற்றும் ராஜ்காட் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    செங்கோட்டையின் வாயில்களுக்கு உள்ளேயும் வெளியேயும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். 10 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தற்காலிக கட்டுப்பாட்டு அறை மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பகின்றன. செங்கோட்டைப் பகுதியைச் சுற்றியுள்ள 300-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் தொலைநோக்கியுடன் போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதனிடையே பல இடங்களில் பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டதால் கூடுதல் பாதுகாப்பு வழங்க உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பல்வேறுநாட்டு தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த மாநாடு சுதந்திர தின முக்கிய கருப்பொருளாக உள்ளது.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. துணை ராணுவம் மற்றும் போலீசார் முக்கிய இடங்களில் ரோந்து சென்று வருகிறார்கள். ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது.

    டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் சதி வேலைகளில் ஈடுபடாமல் தடுக்க எல்லையில் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பிரதமருக்கான இடத்தில் அதிகாரி ஒருவர் நின்று அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். முப்படை வீரர்கள் மிடுக்குடன் அணி வகுத்துச் சென்றனர். இதையொட்டி டெல்லியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.  

    • வேறுயாரும் தேசியக் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
    • உதவி இயக்குனர் அலுவலக எண்.044-2723 7175 மற்றும் 74026 06005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறும்.

    மேலும், அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவல கங்களில் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும்.

    அவர்களுக்கு பதிலாக வேறுயாரும் தேசியக் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவர்களின் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிராம ஊராட்சிகளில் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சினை இருந்தால் காஞ்சிபுரம் உதவி இயக்குனர் அலுவலக எண்.044-2723 7175 மற்றும் 74026 06005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சுதந்திரதினத்தையொட்டி இன்று முதல் 15-ந்தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி
    • சமூக வலைத்தள முகப்பில் உள்ள படத்தை தேசியக்கொடியாக மாற்ற வேண்டுகோள்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் முகப்பில் தேசிய கொடியை வைத்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி இயக்கத்தின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில், நமது சமூக ஊடக கணக்குகளில் முகப்பில் தேசிய கொடி படத்தை வைக்க வேண்டுகோள் விடுக்கிறேன். இதன் மூலம் நமது அன்புக்குரிய நாட்டிற்கும் நமக்கும் இடையே உள்ள பிணைப்பை ஆழப்படுத்தும் இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ள முகப்பு படத்தை தேசியக்கொடியை வைத்துள்ளார்.

    • சுதந்திர தினவிழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • சுதந்திரதினத்தன்று முதலமைச்சரை காவல்துறை வாகன அணி வகுப்புடன் அழைத்து வருவது போன்று ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    76-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் (15-ந்தேதி) நாடு முழுவ தும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    சென்னை காமராஜர் சாலையில் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    சுதந்திர தினவிழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி இதற்கான இறுதி ஒத்திகை நிகழ்ச்சி இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்தது. இதில் போலீசார் சீருடையில் அணி வகுத்தனர்.

    இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் சுதந்திரதினத்தன்று முதலமைச்சரை காவல்துறை வாகன அணி வகுப்புடன் அழைத்து வருவது போன்று ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

    அதனை தொடர்ந்து கமாண்டோ படை, குதிரைப் படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படைப்பிரிவினர் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டு தேசிய கொடியைஏற்றி பேசுவது போன்று ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    அதன் பின் தகைசால் தமிழர் விருது, ஏபிஜே அப்துல்கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா உள்ளிட்ட விருதுகள் வழங்குவது போன்று ஒத்திகை நடந்தது.

    இதையொட்டி இன்று காலை காமராஜர் சாலை பகுதியில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    காலை 8 மணி முதல் ஒத்திகை நிகழ்ச்சி முடிவடைந்த 10 மணி வரையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை, கொடிமரச் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது

    போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகையையொட்டி இன்று சென்னை தலைமைச்செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளம், மற்றும் காமராஜர் சாலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதில் ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

    • சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
    • தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    சென்னை:

    77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்றும் அனைத்து மாநிலங்களிலும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

    தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள். சந்தேக நபர்களின் நடமாட்டத்தை கண்டறிந்து கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மீனவ கிராமங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. கடலோர பகுதிகளிலோ அல்லது கடல் பகுதியிலோ மர்மமான முறையில் ஏதாவது பொருட்கள் தென்பட்டால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக மீனவ கிராமங்களையொட்டி உள்ள போலீசாரும் மரைன் போலீசாரும் கூட்டாக மீனவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள்.

    சுதந்திர தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.

    இதையொட்டி அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவில்கள், வணிக வளாகங்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இது தவிர லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் கடந்த வாரம் முதலே சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் போது சந்தேகத்துக்கு இடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    விடுதிகளில் தங்குபவர்கள் பற்றிய முழு விவரங்களையும் லாட்ஜ் உரிமையாளர்கள் வாங்கி வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்து முக்கிய கோவில்கள் அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகங்கள் ஆகியவற்றிலும் போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதிகளில் நாச வேலைக்கு யாரேனும் திட்டமிட்டு உள்ளார்களா? என்பதை கண்டறிந்து அதனை முறியடிக்கும் வகையில் ரெயில்வே போலீசார் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி வைக்கிறார். இதையொட்டி, அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோட்டையை சுற்றி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    இன்றும், நாளையும் மாநிலம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தின பாதுகாப்பு தொடர்பான இந்த நடவடிக்கைகளை வருகிற 16-ந் தேதி வரை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    • வோடபோன் ஐடியா தனது பயனர்களுக்கு அசத்தலான சலுகைகள் அறிவித்து இருக்கிறது.
    • சுதந்திர தினத்தை ஒட்டி இந்த சலுகைகள் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    வோடபோன் ஐடியா (வி) நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவை ஆகஸ்ட் 12-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 18-ம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது. மேலும் இவை வி அதிகாரப்பூர்வ செயலியில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    வி சுதந்திர தின சலுகை விவரங்கள்:

    ரூ. 199 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட ரிசார்ஜ்களுக்கு அதிகபட்சம் 50 ஜிபி வரையிலான டேட்டா.

    ரூ. 50, ரூ. 75, ரூ. 1449 மற்றும் ரூ. 3 ஆயிரத்து 099 ரிசார்ஜ்களுக்கு உடனடி தள்ளுபடி.

    வி செயலியில் "ஸ்பின் தி வீல்" பரிசு போட்டி நடைபெறுகிறது. இதில் பயனர்களுக்கு ரிசார்ஜ் சலுகைகள் அல்லது டேட்டா பேக், சோனிலிவ் சந்தா மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    இந்த சலுகைகள் அனைத்தும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்கான வி செயலியில் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும்.
    • சுதந்திர தினத்தன்று விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நாடு முழுவதும் 15ம் தேதி சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில் வருகிற 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அனைத்து மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    ×