சுதந்திர தின ஸ்பெஷல்.. பயனர்களுக்கு சூப்பர் சலுகைகள் அறிவித்த வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா தனது பயனர்களுக்கு அசத்தலான சலுகைகள் அறிவித்து இருக்கிறது. சுதந்திர தினத்தை ஒட்டி இந்த சலுகைகள் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
சுதந்திர தின ஸ்பெஷல்.. பயனர்களுக்கு சூப்பர் சலுகைகள் அறிவித்த வோடபோன் ஐடியா
Published on

வோடபோன் ஐடியா (வி) நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவை ஆகஸ்ட் 12-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 18-ம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது. மேலும் இவை வி அதிகாரப்பூர்வ செயலியில் மட்டுமே வழங்கப்படுகிறது.

வி சுதந்திர தின சலுகை விவரங்கள்:

ரூ. 199 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட ரிசார்ஜ்களுக்கு அதிகபட்சம் 50 ஜிபி வரையிலான டேட்டா.

ரூ. 50, ரூ. 75, ரூ. 1449 மற்றும் ரூ. 3 ஆயிரத்து 099 ரிசார்ஜ்களுக்கு உடனடி தள்ளுபடி.

வி செயலியில் "ஸ்பின் தி வீல்" பரிசு போட்டி நடைபெறுகிறது. இதில் பயனர்களுக்கு ரிசார்ஜ் சலுகைகள் அல்லது டேட்டா பேக், சோனிலிவ் சந்தா மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்த சலுகைகள் அனைத்தும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்கான வி செயலியில் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com