search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடற்கரை கிராமங்கள்"

    • கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு
    • சுதந்திர தினத்தையொட்டி போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

    நாகர்கோவில், ஆக.14-

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நாளை (15-ந்தேதி) நடை பெறும் சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் நலத்திட்ட உதவி களையும் வழங்குகிறார்.

    இதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுற் கொள்கிறார். பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடக்கிறது. சுதந்திர தினத்தையொட்டி போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

    அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்த ஒத்திகை நிகழ்ச்சியை ஆர். டி.ஓ சேதுராமலிங்கம் பார்வையிட்டார்.

    சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தபபட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் போலீ சாரின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடலோர காவல்படையினர் நவீன படகுகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள். சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது கடற்கரை கிராமங்களில் சுற்றி திரிகிறார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள லாட்ஜ்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    சுசீந்திரம் தாணுமாலையன் சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாவட்ட எல்லை பகுதியில் உள்ள களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலை யங்களில் உள்ள பார்சல்கள் முழுமையாக சோதனைக்கு பிறகு வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ரெயில்களில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ரெயில்வே தண்ட வாளங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இரவு 2 ஷிப்டுகளாக போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோ வில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×