search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி பலி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில மாதங்களாக மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • சிறுமி உயிரிழப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் ராஜபாண்டி நகர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார்.

    உடனே சிறுமியை மீட்டு அவரது குடும்பத்தினர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடந்த சில மாதங்களாக மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், பலியான சிறுமி கடுமையாக காய்ச்சல் பாதிப்பிற்கு பிறகே அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தார். காய்ச்சல் பாதிப்பு முற்றிய நிலையில் இருந்தது. டெங்கு காய்ச்சலால் சிறுமி இறக்கவில்லை என்றார்.

    • சிறுமியை அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • அனுசியா ஸ்ரீ கடந்த 3 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    கோவை,

    கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள மூவர் நகரைச் சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி. இவரது மகள் அனுசியாஸ்ரீ (வயது6). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அனுசியா ஸ்ரீ கடந்த 3 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

    ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதனை அடுத்து அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கூறினார்.

    உடனடியாக சிறுமியை அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அனுசுயா ஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

    • பாண்டியா கிராமத்தில் 3 வயது சிறுமி ஒருவர் தெருவில் விளையாடி கொண்டிருந்தார்.
    • சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பரேலி:

    உத்தரபிரதேச மாநிலம் பரேலி சிபி கஞ்ச் பகுதியில் உள்ள பாண்டியா கிராமத்தில் 3 வயது சிறுமி ஒருவர் தெருவில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது கூட்டமாக வந்த நாய்கள், அந்த சிறுமியை கடித்தன. இதில் படுகாயம் அடைந்த சிறுமி அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் நாயை விரட்டிவிட்டு சிறுமியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அந்த சிறுமியின் உடலில் 200-க்கும் மேற்பட்ட நாய் கடி இருந்ததாக தெரிவித்தனர்.

    நாய் கடித்து 3 வயது சிறுமி கொடூரமாக இறந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வணிக வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் காவலாளி சம்பத் கேட்டை பூட்டுவதற்காக இரும்பு கதவை சாத்தினார்.
    • வணிக வளாகத்துக்கு ஆசை ஆசையாக தந்தையை பார்க்க வந்த சிறுமி பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    சென்னை நம்மாழ்வார்பேட்டை சிவகாமிபுரம் பரகாரோடு பகுதியில் வசித்து வருபவர் சங்கர். டிரைவரான இவர் கீழ்ப்பாக்கம் ஹர்லிக்ஸ் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    அடுக்குமாடிகளை கொண்ட இந்த வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன. இந்த கட்டிடத்தில் உள்ள தனியார் துணிக்கடைக்கு சொந்தமான அடுக்குமாடி வாகன நிறுத்தும் வசதியும் வணிக வளாகத்தில் செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகன நிறுத்தும் இடத்தில் தான் சங்கர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    துணிக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் கார்களை அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்துக்கு கொண்டு சென்று விடுவது, பின்னர் அந்த கார்களை எடுத்து வந்து வாடிக்கையாளர்களிடம் ஒப்படைப்பது போன்ற பணிகளை சங்கர் செய்து வந்தார்.

    தினமும் வேலை முடிந்ததும் கணவர் சங்கரை அழைத்துச் செல்ல மனைவி வாணி, வணிக வளாகத்துக்கு வருவார். இதன்படி நேற்று இரவு 9 மணி அளவில் வாணி வந்தார்.

    அப்போது தந்தையை பார்ப்பதற்காக 5 வயது மகளான ஹரிணியும் உடன் வந்திருந்தார். இருவரும் சங்கரை எதிர்பார்த்து வணிக வளாகத்தின் வாயிலில் இரும்பு கதவு அருகே நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது வணிக வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் 65 வயது காவலாளி சம்பத் என்பவர் கேட்டை பூட்டுவதற்காக இரும்பு கதவை சாத்தினார். இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக இரும்பு கதவு திடீரென கீழே விழுந்தது. இதில் சிறுமி ஹரிணி சிக்கிக்கொண்டாள்.

    இதனை பார்த்த தாய் வாணி கூச்சல் போட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடி வந்து சிறுமியை மீட்டனர். இரும்பு கதவு வேகமாக விழுந்ததில் சிறுமி ஹரிணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    இதுபற்றி அறிந்ததும் சங்கரும் ஓடிவந்தார். மகளின் தலையில் இருந்து ரத்தம் பீரிட்டு வெளியேறியதை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர். உடனடியாக அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஹரிணியை சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹரிணிக்கு டாக்டர்கள் தலையில் கட்டு போட்டு சிகிச்சை அளித்தனர். சிறுமியின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    நள்ளிரவு 1.15 மணி அளவில் சிறுமி ஹரிணி உயிரிழந்தார். இதுபற்றி கேள்விப்பட்டதும், தந்தை சங்கர், தாய் வாணி ஆகியோர் கதறி அழுதனர். வணிக வளாகத்துக்கு ஆசை ஆசையாக தந்தையை பார்க்க வந்த சிறுமி திடீரென பலியான சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 304 ஏ.ஐ.பி.சி. (விபத்து மரணம்) என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இரும்பு கதவை சாத்திய காவலாளி சம்பத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இரும்பு கதவு விழுந்தது எப்படி? என்பது குறித்து வணிக வளாக பொறுப்பாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கட்டிட காவலாளி மற்றும் துணிக்கடையின் மேலாளர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவலாளியாக பணிபுரியும் தனது தந்தையை காண தாயுடன் வந்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள துணிக்கடையில் இரும்பு கேட் விழுந்ததில் காவலாளியின் 5 வயது மகள் பலத்த காயம் அடைந்தார்.

    காயம் அடைந்த சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    காவலாளியாக பணிபுரியும் தனது தந்தையை காண தாயுடன் வந்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாலையில் தனது 8 வயது பெண் குழந்தை ஜோஸ்னா அமுல்யாவை காணவில்லை என தந்தை தேடினார்.
    • நீச்சல் குளத்தில் குழந்தை மிதப்பதாக ஊழியர்கள் கூறினர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மப்பேடு பகுதியை சேர்ந்தவர் பிரேம் எட்வின் ராஜன். பொங்கல் விடுமுறை கொண்டாடுவதற்காக நேற்று குடும்பத்துடன் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோல்டன் சன் ரிசார்ட்டில் தங்கினார். மாலையில் தனது 8 வயது பெண் குழந்தை ஜோஸ்னா அமுல்யாவை காணவில்லை என தேடினார். அப்போது அங்குள்ள நீச்சல் குளத்தில் குழந்தை மிதப்பதாக ஊழியர்கள் கூறினர்.

    பதறியடித்து குழந்தையை தனது காரில் தூக்கிக்கொண்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    ஜோஸ்னா அமுல்யா 4ம் வகுப்பு படித்து வருகிறார். மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மானந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடந்த சில நாட்களாக குழந்தை சிவதர்ஷினி மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • மர்ம காய்ச்சலால் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே‌ மிகுந்த சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 37), இவரது மனைவி ஜெயஸ்ரீ (32). இந்த தம்பதிக்கு தர்ஷன் (9) என்ற மகனும், சிவதர்ஷினி என்ற (3½) மகளும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக குழந்தை சிவதர்ஷினி மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து சிவதர்ஷினியை அவரது பெற்றோர், பரமத்திவேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    குழந்தைக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து வந்ததால் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குழந்தை சிவதர்ஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மர்ம காய்ச்சலால் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சிறுமி டெங்கு காய்ச்சலால் இறந்திருக்கலாம் என்ற அச்சத்தால், அப்பகுதியில் காய்ச்சல் பரவாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் சுகாதாரத்துறையினர் முகாம் நடத்தி, அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்து காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தனது குடும்பதினருடன் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு விடுதியின் மாடிக்கு சென்றார்.
    • உடனடியாக சஹானாைவ தூக்கிக்கொண்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    விழுப்புரம்:

    சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தியை சேர்ந்தவர் பரந்தாமன். இவர் தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் புத்தாண்டு கொண்டாடு வதற்காக குடும்பத்துடன் ஆரோவில் வந்தார். அப்போது வானூர் அருகே பூத்துறையில் விடுதி எடுத்து தங்கினார். நேற்று தனது குடும்பதினருடன் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு விடுதியின் மாடிக்கு சென்றார். அப்போது பரந்தாமணின் மகள் சஹானா (வயது 6). திடீரென மாயமானாள்.

    அதிர்ச்சியடைந்த பரந்தா மன் தனது மகளை விடுதி யில் தேடினார். அப்போது அவரது மகள் சஹானா அங்குள்ள நீச்சல் குளத்தில் மிதந்தார். பதறிபோன அவர் உடனடியாக சஹானாைவ தூக்கிக்கொண்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி சஹானா இறந்தார். இதுகுறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீடுகளின் மேற்கூரையில் இருந்து மர்ம நபர்கள் சிலர் இஸ்ரேல் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
    • சிறுமியின் மரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் யாயிர் லாபிட் வருத்தம் தெரிவித்ததோடு, அவளது குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் இருக்கும் பாலஸ்தீன அகதிகள் முகாமில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி அவர்களை கைது செய்ய இஸ்ரேல் ராணுவம் அங்கு தேடுல் வேட்டையில் ஈடுபட்டது.

    அப்போது அங்குள்ள வீடுகளின் மேற்கூரையில் இருந்து மர்ம நபர்கள் சிலர் இஸ்ரேல் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இஸ்ரேல் வீரர்கள் அவர்களை குறிவைத்து பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

    அப்போது இஸ்ரேல் வீரர்கள் சுட்டதில் ஒரு வீட்டில் இருந்த 16 வயது பாலஸ்தீன சிறுமியின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அவள் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தாள். இஸ்ரேல் ராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீன சிறுமி உயிரிழந்தது அங்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே சிறுமியின் மரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் யாயிர் லாபிட் வருத்தம் தெரிவித்ததோடு, அவளது குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் தொடர்ந்து விசாரணை நடத்தும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

    • கடந்த 5-ந்தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த போது மின் கம்பம் முறிந்து விழுந்ததில் கிருத்திகா படுகாயம் அடைந்தார்.
    • செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே அவுரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருத்திகா (11). 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 5-ந்தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த போது மின் கம்பம் முறிந்து விழுந்ததில் கிருத்திகா படுகாயம் அடைந்தார்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி இறந்தார். மாணவியின் உறவினர்கள் அவுரிமேடு அருகே மதுராந்தகம் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பலியான சிறுமிகளின் உடல்கள் தேனி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
    • பலியான சிறுமிகளின் குடும்பத்திற்கு நிவாரண தொகை பெற்றுத்தருவது குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரம் பாவலர்தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் நிகிதாஸ்ரீ (வயது 7). 2ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் இடுக்கி மாவட்டம் உடும்பன் சோலையில் தனது மனைவியுடன் தங்கி ஏலத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகள் சுபஸ்ரீ (6) பண்ணைப்புரத்தில் தனது தாத்தா வீட்டில் வளர்ந்து வந்தார். இவரும் அதே பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை சிறுமிகள் 2 பேரும் அங்குள்ள மகளிர் சுகாதார வளாகம் அருகே விளையாடிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அதன் அருகே அமைக்கப்பட்டு இருந்த செப்டிக் டேங்க் தொட்டி மீது ஏறினர். அந்த தொட்டியின் மூடி சேதமடைந்திருந்ததால் திடீரென இருவரும் உள்ளே விழுந்து மூழ்கினர். உடனே அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.

    பின்னர் அவர்களை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்கு முன்பே அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பழுதடைந்த செப்டிக் டேங்க் தொட்டியை சீரமைக்க கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் 2 உயிர்கள் பலியாகியுள்ளது என்று தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பலியான சிறுமிகளின் உடல்கள் தேனி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பண்ணைப்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமியை பணியிட மாற்றம் செய்ய பேரூராட்சிகளின் உதவி இயக்குனருக்கு கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கலெக்டர் முரளிதரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேலும் அவர் தெரிவிக்கையில், பலியான சிறுமிகளின் குடும்பத்திற்கு நிவாரண தொகை பெற்றுத்தருவது குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். மாவட்டத்தில் இதுபோன்று மூடப்படாமல் ஆபத்தான முறையில் உள்ள குழிகள், தொட்டிகள் இருந்தால் அதனை அந்தந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

    • சிறுமி இலக்கியா, வீட்டின் அருகே தொட்டாரெட்டிகுப்பம் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
    • பலத்த காயம் அடைந்த இலக்கியா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள முக்கரம்பாக்கம் ஊராட்சி, திடீர் புரம், அன்னாவரம் காலனியை சேர்ந்தவர் பிரபு. இவரது மகள் இலக்கியா (வயது 5). சிறுமி இலக்கியா, வீட்டின் அருகே தொட்டாரெட்டிகுப்பம் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

    அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் இலக்கியா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இலக்கியா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மற்றொரு சம்பவம்...

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ் (44). இவர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலேஸ்வரம் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது முகேஷ் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

    இதுகுறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×