என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுராந்தகம் அருகே மின் கம்பம் முறிந்து விழுந்ததில் காயம் அடைந்த சிறுமி பலி
- கடந்த 5-ந்தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த போது மின் கம்பம் முறிந்து விழுந்ததில் கிருத்திகா படுகாயம் அடைந்தார்.
- செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே அவுரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருத்திகா (11). 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 5-ந்தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த போது மின் கம்பம் முறிந்து விழுந்ததில் கிருத்திகா படுகாயம் அடைந்தார்.
இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி இறந்தார். மாணவியின் உறவினர்கள் அவுரிமேடு அருகே மதுராந்தகம் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story






