கவுண்டம்பாளையம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி

சிறுமியை அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அனுசியா ஸ்ரீ கடந்த 3 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
கவுண்டம்பாளையம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி
Published on

கோவை,

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள மூவர் நகரைச் சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி. இவரது மகள் அனுசியாஸ்ரீ (வயது6). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

அனுசியா ஸ்ரீ கடந்த 3 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதனை அடுத்து அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கூறினார்.

உடனடியாக சிறுமியை அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அனுசுயா ஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

X

Maalai Malar
www.maalaimalar.com