புத்தாண்டு கொண்ாட்டத்தில் பரிதாபம்: நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பலி

தனது குடும்பதினருடன் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு விடுதியின் மாடிக்கு சென்றார். உடனடியாக சஹானாைவ தூக்கிக்கொண்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
புத்தாண்டு கொண்ாட்டத்தில் பரிதாபம்: நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பலி
Published on

விழுப்புரம்:

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தியை சேர்ந்தவர் பரந்தாமன். இவர் தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் புத்தாண்டு கொண்டாடு வதற்காக குடும்பத்துடன் ஆரோவில் வந்தார். அப்போது வானூர் அருகே பூத்துறையில் விடுதி எடுத்து தங்கினார். நேற்று தனது குடும்பதினருடன் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு விடுதியின் மாடிக்கு சென்றார். அப்போது பரந்தாமணின் மகள் சஹானா (வயது 6). திடீரென மாயமானாள்.

அதிர்ச்சியடைந்த பரந்தா மன் தனது மகளை விடுதி யில் தேடினார். அப்போது அவரது மகள் சஹானா அங்குள்ள நீச்சல் குளத்தில் மிதந்தார். பதறிபோன அவர் உடனடியாக சஹானாைவ தூக்கிக்கொண்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி சஹானா இறந்தார். இதுகுறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com