search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா நியூசிலாந்து டி20 தொடர்"

    பிக் பாஷ் டி20 லீக் தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் சிட்னி சிக்ர்ஸ் அணியை வீழ்த்தி மெல்போர்ன் ரெனேகட்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #BigBashLeague
    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனேகட்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சிட்னி சிக்சர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. ஜோஷ் பிலிப், டேனியல் ஹியூக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிலிப் 31 பந்தில் 52 ரன்களும், ஹியூக்ஸ் 32 பந்தில் 52 ரன்களும் விளாசினர். வின்ஸ் 28 ரன்களும், ஹென்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 28 ரன்களும் அடிக்க சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

    பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி களம் இறங்கியது. ஆரோன் பிஞ்ச் 44 ரன்களும், ஹார்பர் 36 ரன்களும், ஒயிட் 29 ரன்களும் சேர்த்தனர். கிறிஸ்டியன் ஆட்டமிழக்காமல் 14 பந்தில் 3 சிக்சருடன் 31 ரன்களும், ரிச்சர்ட்சன் 3 பந்தில் 9 ரன்களும் அடிக்க மெல்போர்ன் ரெனேகட்ஸ் 19.5 ஓவரில் 184 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மெல்போர்ன் ஸ்டார்ஸ். #BigBashLeague
    பிக் பாஷ் டி20 கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ், மெல்போர்ன் ரெனேகட்ஸ், சிட்னி சிக்சர்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் முதல இடம் பிடித்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் - 4-வது இடம் பிடித்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 5 ரன்னுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. ஆர்கி ஷார்ட் 35 ரன்களும், மெக்டெர்மோட் 53 ரன்களும், பெய்லி 37 ரன்களும் அடிக்க அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. மெல்மோர்ன் ஸ்டார்ஸ் அணியின் வொர்ரால் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் டங்க் (9), ஸ்டாய்னிஸ் (18) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.



    அதன்பின் வந்த ஹேண்ட்ஸ்காம்ப் 26 பந்தில் 35 ரன்களும், மேடின்சன் 9 பந்தில் 18 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த மேக்ஸ்வெல் 33 பந்தில் 43 ரன்களும், காட்ச் 22 பந்தில் 33 ரன்களும் அடிக்க மெல்போர்ன் ஸ்டார்ஸ் 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெறும் 2-வது அரையிறுதிப் போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் ஐபிஎல் அட்டவணையை வெளியிட வாய்ப்பே இல்லை என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #IPLSeason2019
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால், பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில்தான் நடைபெறும் என தெரிவித்தார்.

    ஐபிஎல் தொடர் மார்ச் 23-ந்தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள நிலையில் அட்டவணை வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணையை வெளியிட வாய்ப்பே இல்லை என்று பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
    ஹேமில்டனில் நடைபெற்று வரும் 3-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ரன் விகிதம் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் வந்தது.



    அணியின் எண்ணிக்கை 80 ஆக இருக்கும்போது குல்தீப் யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். செய்பெர்ட் 25 பந்தில் 43 ரன் எடுத்து அவுட்டானார்.

    அதிரடியாக ஆடிய முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து குல்தீப் பந்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோம் 30 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது. மிச்செல் 19 ரன்னுடனும், டெய்லர் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இதனால் இந்தியாவிற்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #NZvIND
    இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட்டான சையத் முஸ்தாக் அலி தொடருக்கான தமிழ்நாடு அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். #Ashwin
    சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 21-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரை சூரத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர்களான முரளி விஜய், அபினவ் முகுந்த், பாபா அபரஜித் ஆகியோர் இடம் பெறவில்லை. இதுகுறித்து தேர்வாளர் ஒருவர் கூறும்போது, ‘‘முரளி விஜய், அபினவ் முகுந்த், அபரஜித் ஆகியோர் தங்களது திறமைகளை நிரூபித்த வீரர்கள்.

    எனவே புதிய வீரர்களை களம் இறக்க விரும்புகிறோம். சுழற்பந்து வீச்சாளர் வருண் தோள்பட்டை காயம் காரணமாக விளையாடவில்லை என்றார்.

    தமிழ்நாடு அணி வருமாறு:-

    அஸ்வின் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணைக்கேப்டன்), ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஹரி நிஷாந்த், ஷாருக்கான், பாபா இந்திரஜித், விவேக், நடராஜன், முகமது, கவுசிக், சாய்கிஷோர், முருகன் அஸ்வின், சதுர்வேத், விஜய் சங்கர், அதிசயராஜ் டேவிட்சன், அபிஷேக் தன்வார்.
    நியூசிலாந்து அணியைச் சேர்ந்த முன்னாள் அதிரடி மன்னன் பிரெண்டன் மெக்கல்லம் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #McCullum
    நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி வருகிறார்.

    நேற்று அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிராக மெக்கல்லம் 39 பந்தில் 51 ரன்கள் சேர்த்தார். போட்டி முடிந்த பின், இந்த சீசனோடு பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து பிரெண்டன் மெக்கல்லம் கூறுகையில் ‘‘2019-ல் உலகின் பல்வேறு இடங்களில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் பங்கேற்று விளையாடுவேன். அதன்பின் பயிற்சியாளர் பதவி குறித்து யோசிப்பேன்’’ என்றார்.
    பிக் பாஷ் டி20 லீக் தொடரின் 46-வது ஆட்டத்தில் சிட்னி தண்டரை 27 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ் #BigBashT20League
    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற 46-வது ஆட்டத்தில் சிட்னி தண்டர் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனேகட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. டாப் ஆர்டர் வீரர்களான ஹார்வோ (8), ஆரோன் பிஞ்ச் (10), ஹார்பர் (10), கூப்பர் (4) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    முகமது நபி 34 பந்தில் 36 ரன்களும், பாய்ஸ் ஆட்டமிழக்காமல் 22 பந்தில் 51 ரன்களும் அடிக்க மெல்போர்ன் ரெனேகட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 141 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் களம் இறங்கியது. மெல்போர்ன் அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் சிட்னி தண்டர் 19.1 ஓவரில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் மெல்போர்ன் ரெனேகட்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேன் ரிச்சர்ட்ஸ் 3 விக்கெட்டும், பாய்ஸ் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    மெல்போர்ன் ரெனேகட்ஸ் 13 போட்டிகளில் விளையாடி 8 வெற்றியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 11 போட்டிகளில் 9 வெற்றியுடன் 18 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. சிட்னி தண்டர் 12 போட்டிகளில் 5 வெற்றிகள், 6 தோல்விகள், ஒரு முடிவு இல்லை நிலையுடன் 11 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியைச் சேர்ந்த பெர்குசன் 48 பந்தில் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். #BigBashLeague
    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பெர்த் ஸ்கார்சர்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பெர்த் ஸ்கார்சர்ஸ் தொடக்க பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் அதிரடியால் (55 பந்தில் 96 ரன்கள்) 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

    பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சிட்னி தண்டர் களம் இறங்கியது. தொடக்க பேட்ஸ்மேன் வாட்சன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து விக்கெட் கீப்பர் கில்கெஸ் உடன் பெர்குசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிட்னி  ஸ்கார்சர்ஸ் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தது.

    இதனால் 6.4 ஓவரில் 50 ரன்னைத் தொட்ட சிட்னி தண்டர், 10.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. பெர்குசன் 24 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். கில்கெஸ் 36 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 14.3 ஓவரில் 138 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது.

    அடுத்து வந்த டேவ்சிச், சாம்ஸ் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆனால் பெர்குசன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 53 பந்தில் 113 ரன்கள் குவிக்க சிட்னி தண்டர் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சிட்னி சிக்சர்ஸ் அணி. #BigBashLeague
    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஜேம்ஸ் வின்ஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ஜோர்டான் சிக் ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 41 ரன்களில் அவுட்டானார். வின்ஸ் 75 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால், சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

    பிரிஸ்பேன் ஹீட் சார்பில் ஜோஷ் லலோர் 5 விக்கெட் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணி களமிறங்கியது.

    ஆனால், சிட்னி சிக்சர்ஸ் அணியின் அபாரமான பந்து வீச்சில் சிக்கி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், பிரிஸ்பேன் ஹீட் அணி 18.1 ஓவரில் 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 75 ரன்கள் எடுத்த ஜேம்ஸ் வின்ஸ் ஆட்ட நாயகனாக தேவு செய்யப்பட்டார். #BigBashLeague
    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ். #BigBashLeague
    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில் சிக்கிய மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியினர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 

    இறுதியில், மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி 19.3 ஓவரில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக மொகமது நபி 28 ரன்னும், டாம் கூப்பர் 24 ரன்னும் எடுத்தனர்.

    மெல்போர்ன் ஸ்டார்ஸ் சார்பில் ஸ்டோனிஸ் 3 விக்கெட்டும், ஜாக்சன் பேர்ட், பிளங்கெட், சம்பா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் மார்க் ஸ்டோனிசின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 19.2 ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் 124 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டோனிஸ் 70 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். #BigBashLeague
    பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக்கில் சிட்னி தண்டர், பிரிஸ்பேன் ஹீட், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன. #BigBashT20League
    பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக்கில் நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் சிட்னி தண்டர் - அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சி்ட்னி தண்டர் கேப்டன் ஷேன் வாட்சன் (68), சங்கா (30) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அடிலெய்டு களம் இறங்கியது. இங்க்ராம் 48 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்த அணி 97 ரன்னில் சுருண்டது. இதனால் சிட்னி தண்டர் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் பிரையன்ட் (44), மெக்கல்லம் (69), கிறிஸ் லின் (66) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.

    பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி களம் இறங்கியது. பிரிஸ்பேன் ஹீட் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 91 ரன்னில் சுருண்டது. இதனால் பிரிஸ்பேன் ஹீட் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    3-வது ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெர்த் ஸ்கார்சர்ஸ் 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க பேட்ஸ்மேன் பான்கிராப்ட் ஆட்டமிழக்காமல் 87 ரன்களும், டர்னர் 30 பந்தில 60 ரன்களும் குவித்தனர்.
    ஐபிஎல் 2019 சீசன் இந்தியாவில்தான் நடைபெறும், மார்ச் 23-ல் போட்டி தொடங்கும் என்று நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 சீசன் வெற்றிகரமான முடிவடைந்துள்ளன. 12-வது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர் தென்ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது ஐபிஎல் தொடர் தென்ஆப்பிரிக்காவிலும், 2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டது.

    இந்த முறை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முயற்சி செய்து வந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவரான வினோத் ராய் டெல்லியில் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பேச்சுவார்த்தையில் ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் 23-ந்தேதி தொடங்குகிறது. போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
    ×