search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா நியூசிலாந்து டி20 தொடர்"

    இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன்களாக டு பிளிசிஸ், டுமினி நியமிக்கப்பட்டுள்ளனர்.
    இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. அதன்பின் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென்ஆப்பிரிக்கா 5-0 எனக் கைப்பற்றியது.

    இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. 3-வது போட்டி 22-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 24-ந்தேதியும் நடக்கிறது.

    முதல் போட்டிக்கு டு பிளிசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடைசி இரண்டு டி20 போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டுமினி கடைசி போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் சுரங்கா லக்மல், வாண்டர்சே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். #SAvSL
    இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற இர்ணடு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி இலங்கை அணி வரலாற்று சாதனைப் படைத்தது.

    தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுடன் முடிவடைந்த நான்கு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. கடைசி போட்டி 16-ந்தேதி கேப் டவுனில் நடக்கிறது.

    அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டியில் மோசமான ஆட்டத்தை இலங்கை அணி வெளிப்படுத்தியதால், டி20 தொடருக்கான அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் மற்றும் வாண்டர்சே ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    கர்நாடக மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிட முடிவானது. #ParliamentElection #Congress #JDS
    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 18, 23 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    இதையடுத்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி உடன்பாடு மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக களமிறங்கி உள்ள்ன.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிட இறுதிச்சுற்று பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே இன்று கையொப்பமானது. #ParliamentElection #Congress #JDS
    சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் இரண்டு சதங்கள் விளாசிய ஷ்ரேயாஸ் அய்யர், இந்திய அணிக்கான அறிமுக ஆட்டங்களை மறக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர். 25 வயதாகும் இவர் கடந்த 2017-ம் ஆண்டு இந்திய தேசிய அணியில் இடம்பிடித்தார்.

    இலங்கைக்கு எதிராக அறிமுகம் ஆன இவர், முதல் போட்டியில் 9 ரன்கள் அடித்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் 88 மற்றும் 65 ரன்கள் சேர்த்து அசத்தினார். ஆனால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இரண்டு போட்டியில் 48 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

    இதனால் தேசிய அணியில் நிரந்தரமாக விளையாட முடியவில்லை. இந்தியா ‘ஏ’ அணிக்கு திரும்பிய ஷ்ரேயாஸ் அய்யர், தனது ஆட்டத்தில் மெருகேற்றினார். தற்போது நடைபெற்று வரும் சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் இரண்டு சதங்கள் விளாசி அசத்தியுள்ளார்.

    வரும் காலங்களில் தேசிய அணிக்கான தேர்வுக்குழு இவரது பெயரை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆரம்ப கால ஆட்டத்தை மறக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘அது அனைத்தும் முடிந்த கதை. அறிமுகமான காலத்தை மறந்து தனது ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.



    முதிர்ச்சியடையும்போது, தானகவே பொறுப்புகளை எடுத்துக்கொள்ள தொடங்கி விடுவோம். கேப்டனாக இருக்கும்போது மற்ற வீரர்கள் உங்களை பார்க்க தொடங்குவார்கள். அவர்கள் மரியாதை கொடுப்பார்கள். பேட்ஸ்மேன் ஆக நான் அதிக அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளேன். என்னுடைய பலவீனம் மற்றும் பலத்தை ஆராய்ந்து தெரிந்து கொண்டேன்.

    நான் விளையாடும்போது முடிந்த அளவிற்கு கற்றுக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். கேப்டனாக இருக்கும்போது பல விஷயங்கள் உதவி புரிகின்றன’’ என்றார்.
    இங்கிலாந்து எதிரான T20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #WomensWorldT20 #WomenInBlue #WWT20


    இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 ஆட்டத்திலும் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியது. கடைசி ஆட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது.

    அதை தொடர்ந்து மார்ச் 4,7,9 ஆகிய தேதிகளில் 20 ஓவர் போட்டிகள் கவுகாத்தியில் நடக்கிறது. 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் காயம் அடைந்ததால் மந்தனா கேப்டன் பொறுப்பை வகிப்பார். அணிவிவரம்:-

    ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), மிதாலி ராஜ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ‌ஷர்மா, தனியாபாட்டியா, பார்திபுல்மாலி, அனுஜா பட்டேல், ஷிகாபாண்டே, ஹோமல், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராதாயாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லின் தியோல். #WomensWorldT20 #WomenInBlue #WWT20

    சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் குஜராத்தை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.
    சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சூரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள குஜராத் - தமிழ்நாடு அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்தது. முரளி விஜய் (3), ஹரி நிஷாந்த் (4), பாபா இந்திரஜித் (8) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க சதுர்வேத் 34 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 33 ரன்களும், ஜெகதீசன் 29 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. சிராக் காந்தியை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். காந்தி 68 ரன்கள் எடுத்து கடைசி வரை போராடினார். ஆனால் கடைசி ஓவரின் 5-வது பந்தில் ஹர்திக் பட்டேல் ரன்அவுட் ஆன குஜராத் 124 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இதனால் பரபரப்பான ஆட்டத்தில் தமிழ்நாடு 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    சையத் முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில், மும்பை அணியின் முன்னணி வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் 2-வது முறையாக சதம் அடித்துள்ளார். #SyedMushtaqAliTrophy #ShreyasIyer
    சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - சிக்கிம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்தது.

    ஷ்ரேயாஸ் அய்யர் 55 பந்துகளை எதிர்கொண்டு 15 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 147 ரன்கள் விளாசினார். இதன் மூலம் உள்ளூர் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.  இதற்கு முன் ரிஷப் பந்த், ஐபிஎல் போட்டியில் கடந்த ஆண்டு, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 128 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் மும்பை - மத்திய பிரதேசம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேசம் 143 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது.

    தொடக்க பேட்ஸ்மேன்கள் பிரித்வி ஷா (0), ரகானே (1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். அவர் 55 பந்தில் 5 பவுண்டரி, 10 சிக்சருடன் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சூர்யகுமார் யாதவ் 39 ரன்கள் அடிக்க மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சிக்கிம் அணிக்கு எதிராக சதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் மத்திய பிரதேசம் அணிக்கும் எதிராகவும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

    ஜார்க்கண்ட் அணியின் இஷான் கிஷன் அடுத்தடுத்த போட்டியில் சதம் அடித்துள்ள நிலையில் தற்போது ஷ்ரேயாஸ் அய்யரும் இரண்டு சதங்கள் விளாசியுள்ளார்.
    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் உலக சாதனை படைத்துள்ளார். #RashidKhan #WorldRecord
    டேராடூன்:

    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. முகமது நபி 81 ரன்கள் (36 பந்து, 6 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார். அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் ‘ஹாட்ரிக்’ உள்பட தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தியதும் அடங்கும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்த தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. #RashidKhan #WorldRecord

    சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் இளம் வீரர் இஷான் கிஷன் அடுத்தடுத்த போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார். #IshanKishan
    இந்தியாவின் முன்னணி டி20 தொடரான சையத் முஸ்தாக் அலி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வரும் 20 வயது இளம் வீரர் இஷான் கிஷன் ஜம்மு-காஷ்மீருக்கு எதிராக 55 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் சரியாக 100 ரன்கள் அடித்திருந்தார்.

    இன்று அந்த அணி மணிப்பூரை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய ஜார்க்கண்ட் 20 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. இந்த போட்டியிலும் இஷான் கிஷன் அசத்தினார். அவர் 62 பந்தில் 12 பவுண்டரி, 5 சிக்சர் உடன் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதன் மூலம் அடுத்தடுத்த போட்டியில் சதம் அடித்து சாதனைப் புரிந்துள்ளார்.
    சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வரும் இஷான் கிஷன் 55 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் சதம் விளாசினார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் மிகப்பெரிய டி20 போட்டியின் சையத் முஸ்தாக் அலி தொடர் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆட்டமொன்றில் ஜார்க்கண்ட் - ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜம்ம-காஷ்மீர் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜார்க்கண்ட் களம் இறங்கியது. ஆனந்த் சிங், இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனந்த் சிங் 34 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 48 ரன்கள் சேர்த்தார்.

    இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 55 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் சரியாக 100 ரன்கள் சேர்த்தார். இதனால் ஜார்க்கண்ட் 16.4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டியில் எதிர்பாராத விதமாக ரன்அவுட் ஆகியதால் விரக்தியில் ஆரோன் பிஞ்ச் நாற்காலியை அடித்து நொறுக்கினார். #BigBashLeague
    பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டி நேற்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 25 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 3-வது விக்கெட்டுக்கு ஆரோன் பிஞ்ச் உடன் கேமரூன் ஒயிட் ஜோடி சேர்ந்தார். கேமருன் ஒயிட் அடித்த பந்து பந்து வீச்சாளரின் காலில் பட்டு எதிர்முனையில் உள்ள ஸ்டம்பை தாக்கியது.

    அப்போது ஆரோன் பிஞ்ச் க்ரீஸ்-ஐ விட்டு வெளியில் நின்றிருந்தார். இதனால் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். இதனால் ஆரோன் பிஞ்ச் விரக்தியடைந்தார்.

    கோபத்துடன் வெளியேறிய பிஞ்ச், வீரர்களின் அறைக்குச் செல்லும் வழியில் இருந்த நாற்காலியை தனது பேட்டால் ஓங்கியடித்தார். அப்போதும் அவரது கோபம் அடங்கவில்லை. மீண்டும் பேட்டால் ஒரு அடி அடித்துவிட்டு சென்றார்.
    பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி மெல்போர்ன் ரெனேகட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. #BigBashLeague
    பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி மெல்போர்ன் ரெனேகட்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. ஹாரிஸ், பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிஞ்ச் 13 ரன்னிலும், ஹாரிஸ் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஹார்பர் 6 ரன்னிலும், ஒயிட் 12 ரன்னிலும், ஹார்வி 14 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் மெல்போர்ன் ரெனேகட்ஸ் 10.2 ஓவரில் 65 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது.

    6-வது விக்கெட்டுக்கு கூப்பர் உடன் கிறிஸ்டியன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். கூப்பர் 43 ரன்களும், கிறிஸ்டியன் 38 ரன்கள் அடிக்க அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் பேட்டிங் செய்தது. டங்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த ஜோடி 13 ஓவரில் 93 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. ஸ்டாய்னிஸ் 38 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த ஹேண்ட்ஸ்காம்ப் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டங்க் 45 பந்தில் 57 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கேப்டன் மேக்ஸ்வெல் 1 ரன்னிலும், மேடின்சன் 6 ரன்னிலும், கோட்ச் 2 ரன்னிலும், பிராவோ 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    93 ரன்னில் ஒரு விக்கெட்டை இழந்த ஸ்டார்ஸ் அணி 112 ரன்னுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் அந்த அணியால் சேஸிங் இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவரில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது. இதனால் மெல்போர்ன் ரெனேகட்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. 
    ×