search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens World T20"

    இங்கிலாந்து எதிரான T20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #WomensWorldT20 #WomenInBlue #WWT20


    இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 ஆட்டத்திலும் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியது. கடைசி ஆட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது.

    அதை தொடர்ந்து மார்ச் 4,7,9 ஆகிய தேதிகளில் 20 ஓவர் போட்டிகள் கவுகாத்தியில் நடக்கிறது. 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் காயம் அடைந்ததால் மந்தனா கேப்டன் பொறுப்பை வகிப்பார். அணிவிவரம்:-

    ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), மிதாலி ராஜ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ‌ஷர்மா, தனியாபாட்டியா, பார்திபுல்மாலி, அனுஜா பட்டேல், ஷிகாபாண்டே, ஹோமல், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராதாயாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லின் தியோல். #WomensWorldT20 #WomenInBlue #WWT20

    மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #WomensWorldT20 #WomenInBlue #WWT20 #EngvIND
    ஆறாவது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் அரைஇறுதி போட்டிக்கு நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில், 71 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா.



    இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 19.3 ஓவர்களில் 112 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக மந்தனா 34 ரன்கள் எடுத்தார்.  ரோட்ரிகஸ் 26 ரன்களும், கவுர் 16 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் நைட் 3 விக்கெட்டுகளும், எக்லஸ்டோன், கோர்டான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து 113 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. துவக்க ஜோடி வியாட்-பீமான்ட் ஆகியோர் விரைவில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின்னர் இணைந்த ஜோனஸ்-சிவர் ஜோடி அபாரமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றனர்.

    வெற்றிபெற ஒரு ரன் தேவை என்ற நிலையில், 18-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார் ஜோனஸ். ஜோனஸ் 53 ரன்களுடனும், சிவர் 52 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 8  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஜோனஸ் தேர்வு செய்யப்பட்டார்.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #WomensWorldT20 #WomenInBlue #WWT20 #EngvIND
    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய அரையிறுதிப் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 113 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. #WomensWorldT20 #WomenInBlue #WWT20 #EngvIND
    6-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் அரைஇறுதி போட்டிக்கு நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. 

    இதில் முதல் அரையிறுதிப் போட்டியில், 71 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா. 

    இந்த நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கணைகளாக பாட்டியா, மந்தானா களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மந்தானா 5 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 34 (23) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரோட்ரிகஸ், கவுர் சற்று நிதானமாக விளையாட 19.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது.



    இங்கிலாந்து சார்பில் நைட் 3 விக்கெட்டுகளும், எக்லஸ்டோன், கோர்டான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 113 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி விளையாடி வருகிறது. #WomensWorldT20 #WomenInBlue #WWT20 #EngvIND

    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆன்டிகுவாவில் நடைபெறும் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது. #WomenWorldT20 #India #England
    ஆன்டிகுவா:

    6-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு ஆன்டிகுவாவில் நடைபெறும் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணி லீக் சுற்றில் நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை வரிசையாக வீழ்த்தி தனது பிரிவில் (பி) முதலிடத்தை பிடித்து கம்பீரமாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. அத்துடன் இந்த போட்டி தொடரில் இந்திய அணி தான் அதிகபட்ச ஸ்கோரை (நியூசிலாந்துக்கு எதிராக 194/5) பதிவு செய்துள்ளது.

    இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (167 ரன்கள்) ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ளார். மந்தனா (144 ரன்கள்), மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் (107 ரன்கள்) ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். கடைசி லீக் ஆட்டத்தில் காயம் காரணமாக களம் இறங்காத மிதாலி ராஜ் இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் சுழற்பந்து வீச்சாளர்கள் பூனம் யாதவ் (8 விக்கெட்), ராதா யாதவ் (7 விக்கெட்), ஹேமலதா (5 விக்கெட்), தீப்தி சர்மா (4 விக்கெட்) ஆகியோர் எதிரணியினருக்கு சவாலாக விளங்கி வருகிறார்கள். இவர்களின் சுழல் ஜாலம் நீடித்தால், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.

    இங்கிலாந்து அணியை பொறுத்தவரை லீக் ஆட்டங்களில் வங்காளதேசம், தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. வெஸ்ட்இண்டீசிடம் தோல்வி கண்டது. ஒரு ஆட்டம் (இலங்கைக்கு எதிராக) முடிவில்லாமல் போனது. ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்து இங்கிலாந்து அணி அரைஇறுதியை எட்டியது.

    ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. அந்த அணி இந்த போட்டி தொடரில் அதிகபட்சமாக 115 ரன்கள் (வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக) தான் எடுத்துள்ளது. எந்தவொரு வீராங்கனையும் 50 ரன்களை தாண்டவில்லை. ஆனால் அந்த அணியின் பந்து வீச்சு அபாரமாக உள்ளது. அன்யா சிருப்சோல் (7 விக்கெட்), கிறிஸ்டி கோர்டான் (6 விக்கெட்), நதாலி ஸ்வியர் (4 விக்கெட்) ஆகியோர் பவுலிங்கில் மிரட்டக்கூடியவர்கள். கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு இந்திய அணி வரிந்து கட்டும். அதே சமயம் இங்கிலாந்து அணி தனது ஆதிக்கத்தை தொடர போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி இதுவரை இறுதிப்போட்டிக்கு வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவ்விரு இதுவரை 20 ஓவர் போட்டியில் 13 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 3 முறையும், இங்கிலாந்து அணி 10 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    முன்னதாக இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு ஆன்டிகுவாவில் நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் அணி, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 
    ×