என் மலர்
செய்திகள்

பிக் பாஷ் டி20 லீக்கில் 48 பந்தில் சதம் விளாசிய சிட்னி தண்டர் வீரர்
பிக் பாஷ் டி20 லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியைச் சேர்ந்த பெர்குசன் 48 பந்தில் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். #BigBashLeague
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பெர்த் ஸ்கார்சர்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பெர்த் ஸ்கார்சர்ஸ் தொடக்க பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் அதிரடியால் (55 பந்தில் 96 ரன்கள்) 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.
பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சிட்னி தண்டர் களம் இறங்கியது. தொடக்க பேட்ஸ்மேன் வாட்சன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து விக்கெட் கீப்பர் கில்கெஸ் உடன் பெர்குசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிட்னி ஸ்கார்சர்ஸ் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தது.
இதனால் 6.4 ஓவரில் 50 ரன்னைத் தொட்ட சிட்னி தண்டர், 10.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. பெர்குசன் 24 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். கில்கெஸ் 36 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 14.3 ஓவரில் 138 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது.
அடுத்து வந்த டேவ்சிச், சாம்ஸ் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆனால் பெர்குசன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 53 பந்தில் 113 ரன்கள் குவிக்க சிட்னி தண்டர் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Next Story